நிக்கரகுவா: அமெரிக்காவிற்கு அருகில் கொண்டாட வேண்டிய தேர்தல் வெற்றி

(சாகரன்)
ஞாயிறு நடைபெற்ற தேர்தலில் 4 வது முறையாக நிக்கரகுவா இன் தலைவராக 70 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார். தொடர்ந்தாற் போல் மூன்று தடவையும் சோசலிசப் புரட்சி மூலம் முதல்தடவையும் நாட்டின் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டவர். இடையில் ஒரு தடவை மட்டும் அமெரிக்க ஆதரவு எதிர் கட்சியிடம் தோற்கடிக்கப்பட்டவர். ஐந்து வருடங்களின் பின்பு நடைபெற்ற அடுத்த தேர்தலில் வென்று இன்றுவரை தொடர்ந்தாற் போல் 4 வது தடவை வெற்றியை தனதாக்கி கொண்டிருக்கும் ஒரே தலைவர். இடதுசாரி அரசை நிறுவி நிறைவான வாழ்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் வெற்றிப்பாதையில் நாட்டை நகர்த்திச் செல்கின்றார். தோல்வியை சந்தித்த 5 வருட கால வாழ்வில் பெரும்பாலும் குதிரை ஒன்றில் பயணங்களை மேற்கொண்டு மக்களைத் தொடர்ந்தாற்போல் சந்தித்து வந்தவர். நமது நாடு போலல்லாது இவரை அமெரிக்க சார்பு எதிர் புரட்சியாளர்கள் தமது ஆட்சிக்காலத்தில் கொல்லவில்லை. இதனால் நிக்கரகுவா ஒரு நல்ல மக்கள் தலைவரை இன்றுவரை தனக்குள் கொண்டுள்ளது. அவர்தான் டானியல் ஓடேகா. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிக்கரகுவா அயல்நாடுகளை விட வன்முறை குறைந்த அமைதியான சீரான பொருளாதார வளர்சியைக் கண்டு சிறப்பான வாழ்வை கொண்டு வெற்றி நடைபோடும் இடதுசாரி ஆட்சி முறையைக் கொண்ட நாடு ஆகும். அமெரிக்க தேர்தலை விட இதனை நாம் அதிகம் கொண்டா வேண்டிய தருணம். நிக்கரகுவா வரலாற்றை அறிய வேண்டிய அவசியமும் கூட.
(Nov 09, 2016)