நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகள்…….

(Theepa Pirathy and Saakaran)
யாழ்மக்களின் மனங்களில் நீதித்தேவைதையாக வலம்வந்த யாழ்மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களை யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் இருவரினதும் இறப்பிற்கு பின்னர் சில இணையத்தளங்களிலும் முகநூலிலும் வசைபாடுவதை காணமுடிகின்றது.

இலங்கையில் தற்போது நடமுறையில் இருக்கின்ற சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு எமது இனத்தை காலாச்சாரத்தை பண்பாட்டை எவ்வாறு காப்பாற்ர முடியும் என தலா சிந்தித்து செயற்பட்டவர்தான் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள்.
நீதிமன்றிற்கு வெளியே அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்
அனைத்தும் எமது இனத்தை எவ்வாறேனும் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும்தான் அமைந்திருந்தது.

ஆனால் அவர் தனது செயற்பாடுகளை நீதிமன்றத்திற்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டு இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. உண்மையில் உணர்வுள்ள ஓர் தமிழனால் தனது இனம் அனுபவிக்கின்ற துன்பங்களையும் துயரங்களை வேடிக்கை பாத்துகெண்டு இருக்கமுடியாது.
அவ்வாறே நீதிபதி இளஞ்செழியன் அவர்கழும் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு எமது இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் செயற்பட்டிருந்தார்.

ஆனால் பொலிசாரால் ஒருசில வினாடிகளில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் சில இணையத்தளங்கள் அவரை வசைபாடுவதை காணமுடிகினறது.
நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் பொலிசாருக்கு நிற்பாட்டாமல் செல்கின்ற வாகனங்களில் இருப்பவரை வெடிவைத்து கொல்லும்படியோ. அல்லது இருமாணவர்களையும் பொலிசார் நிற்பாட்டும்பொழுது நிற்பாட்டாமல் செல்லும்படியோ
உபதேசம் வளங்கி இருக்கவில்லை.
சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்பும் தற்போது நடமுறையில் இருக்கின்ற சட்டதிட்டங்களை மதித்து வாளத்தெரிந்தவர்களே. இவ்வாறு இருக்க நாம் எவ்வாறு அவரைமட்டும் பார்த்து குற்ம் சொல்வது.

இச் சம்பவத்தினை சிலர் தமது சுயலாபத்திற்கு மட்டும் பயன்படுத்துவதை காணமுடிகின்றது. அவர்களாலே இவ்வாறான குற்ரச்சாட்டுக்கழும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இச்சம்பவத்திற்கு பின்னரான நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் மௌனம் அவர் தனது செயற்பாடுகளை நீதிமன்றத்திற்குள் மட்டும் மட்டுப்படுத்தி விடுவாரோ என்ற ஏக்கமும் கவலையும் யாழ்மக்களின் மனங்களில் காணப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.
Saakaran: ஒரு தனிமனிதனால் சமூகத்தை மாற்றியமைக்க முடியாது இது இணைந்த கரங்களினால் மட்டும் சாத்தியம் செழியன் சொல்லும் விடயங்களில் நீதி இருந்தாலும் இதனை நிலை நாட்ட மக்கள் சமூகமாக இணைந்து செயற்படுவதற்கான தேவையை உணர்த்தப் வேண்டும் மாறாக தான் ஒருவன் மட்டும் சட்டத்தை போட்டு மாற்றியமைக்கலாம் என்று புறப்பட்டால் அது தோற்றுத்தான போகும் யாழில் நடைபெறும் வேண்டத்தகாத சம்பவங்களை நிகழ்த்துபவர்கள் எமது உறவினர்களே ஒழிய வேறுயாரும் இல்லை இவர்களை சமூகமாக இணைந்து தள்ளிவைக்க முயல வேண்டும் தனிமைப்படுத்த வேண்டும். இதில் இடைஞல்கள் தடைகள் ஏற்பட்டால் சட்டங்களை உபயோகிக்லாம்