நீதிபதி நினைத்தால் யாரையும் ‘ நீ, இன்றிலிருந்து வக்கீல் இல்லை.

இந்திய இடதுசாரிகள் என்றாலே CPI மற்றும் CPI (M) என்கிற இரண்டு கட்சிகளை பிரதான கட்சிகள் எனலாம். CPI ( ML) இந்தி மொழி பேசும் மக்களின் சில பகுதிகளில் பரவலாக இருப்பினும் நாடு தழுவிய அளவில் அதன் அமைப்பு இல்லை. இந்திய அரசு அமைப்பு சட்டத்தை மிகவும் காலதாமதமாக ஏற்றுக் கொண்ட கட்சி. இந்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள் Indian Association of Lawyers மற்றும் All India Lawyers Union என்ற பெயரில் வழக்கறிஞர்களின் அமைப்பை வழி நடத்துகின்றன. தமிழக வழக்கறிஞர்கள் 40 க்கும் மேல் தொழில் செய்ய அகில இந்திய பார்கவுன்சில் தடை விதித்து , அவர்களின் வழக்கை பெங்களூரில் நடத்த உத்தரவிட்டது.

தற்போது வழக்கறிஞர்களின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டது நீதிமன்றம் . இதன் மூலம் நீதிபதி நினைத்தால் யாரையும் ‘ நீ, இன்றிலிருந்து வக்கீல் இல்லை. என அறிவிக்கலாம்.

இந்த விதிகள் சட்டத்திற்கு, அடிப்படை தர்மத்திற்கு மாறானவை, உடனடியாக திரும்ப பெறவேண்டும் என தமிழகம் முழுமையும் வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள்.

1961 ம் ஆண்டில் இயற்றப்பட்ட Advicates Act பிரிவு 34(1) உயர் நீதிமன்றம் தனக்கு வசதியாக சில விதிகளை தானே உருவாக்க அந்த பிரிவு வழி செய்கிறது. அதன் அடிப்படையில் 1970 ம் ஆண்டில் 15 விதமான விதிகள் இயற்றப்பட்டு நடை முறையில் உள்ள நிலையில மே 20, 2016 அன்று, ஏற்கெனவே உள்ள விதிகளில் திருத்தம் என்ற பெயரில் வழக்குரைக்கும் வழக்கறிஞரை ஒரேயடியாக நீ இனி வழக்கறிஞர் இல்லை என அறிவிக்கும் அதிகாரத்தை தன் வசம் எடுத்துக் கொண்டது , நீதிமன்றம்.

இந்த இடதுசாரி கட்சிகள் இது என்ன நியாயம், இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் செய்வோம் என்று எந்த அறிக்கையும் காணோம் .

மக்கள் பாராளுமன்றத்தில் தங்கள் உறுப்பினர்கள் மூலம் சட்டம் இயற்றுகிறார்கள் . அந்த சட்டத்தை நீதிபதிகள் ஒரு துணை விதி மூலம் நிர்மூலமாக்கினால் , இதை செல்லாது என அறிவிக்க புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம்.
பிரிவு 34(1) நீக்குவோம் என்று சொல்லும் தைரியம் இவர்களுக்கு இல்லையா?

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தால் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது . வழக்கறிஞர்களுக்காக இல்லை என்றாலும் மக்கள் நலன் கருதியாவது இந்த கட்சிகள் போராட வேண்டாமா?

ஒரு புறம் வலதுசாரி ஆர்எஸ்எஸ் நீதிபதிகளை தன் வசப்படுத்தி நமது அரசு அமைப்பு சட்டத்தை அழிக்கிறது. மறுபுறம் கார்ப்ரேட் நிறுவனங்கள் லாபி செய்து நீதிபதிகளை தங்கள் வலையில் வீழ்த்துகின்றன.

இந்திய ஜனநாயகம் தற்போதை கேள்விக் குறியாகியுள்ளது. இடதுசாரிகளும் மௌனம் காப்பது ஆபத்து.

வேறு வழி்இன்றி மக்கள் மாவோயிசத்தை ஏற்க வேண்டிய கட்டாய நிலை.

இதில் சோகம் என்ன என்றால் காந்தி, நேரு, அம்பேத்கர் உருவாக்கிய குடியரசை காப்பாற்ற யாருமே இல்லை.

மாவோயிஸ்டுகளை குறை சொல்லும் தார்மீக உரிமை ஊமையாய் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ், மற்றும் இடதுசாரிகளுக்கு இல்லை.

(Kanniappan Elangovan)