நீர்வேலி வாழை

இப் படத்தில் உள்ள விவசாயி செம்புலக் கிராமம் ஒன்றின் மூத்த விவசாயி. அவருக்கு 200 ஹவந்தீஸ் வாழைக்குட்டிகளும் அதற்குரிய இரசாயனப் பசளைகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அவரைக் கண்டு கதைக்கும் போது சொன்னேன் ”ஐயா றெட்லேடி பப்பாசி 15 வருடங்களுக்கு முன்பு இலவசமாகக் கொடுத்தார்கள்.

இன்று 50 கிராம் றெட்லேடி பப்பாசி விதையின் விலை 10 200 ரூபா.
எமது ஊர்ப் பப்பாசி இனத்தை முழுதாக இழந்து விட்டோம். அது போல பல பாரம்பரிய விவசாய இனங்களை இழந்து வருகிறோம்.
இன்று உங்களுக்கு ஹவந்தீஸ் இன வாழைகளை இலவசமாகத் தருகின்றனர்.

இதன் வாழைப் பொத்தியிலிருந்து தேனீ மூலமாக நடைபெறும் மகரந்தச் சேர்க்கைகள் எமது ஊர் வாழையினத்தை மலடாக்கும்.

பின்பு ஊர் வாழையினம் முற்றாக அழியும். இப்போது இலவசமாகத் தரும் ஹவந்தீஸ் வாழைக் கன்றுகளை ஒரு கன்று 2000 ரூபாப்படி தருவார்கள்.
அதை விட அதற்கு நோயை உண்டாக்கி மருந்துகளையும் கொள்ளை விலைக்கு விற்பார்கள் ” என்றேன்.

அவரோ தம்பி இதனைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் விவசாய மன்னன் என்று முன்பு பட்டம் வாங்கியவன். இந்த 200 குட்டிகளையும் திறமாகச் செய்கை செய்து எனது கெட்டித்தனத்தைக் காட்டுகிறேன் ” பாருங்கள் என்றார்.

எமது விவசாயத் திணைக்களங்களும் என்ன செய்ய முடியும்.
மத்திய மந்திரிகள் பொக்கற்றில் பலகோடி ரூபாக்களைப் போட்டுக் கொண்டு வழங்கும் சர்வநாசினி இனங்களை எமக்குத் திணித்து அரச விசுவாசம் காட்ட வேண்டுமல்லவா?

பொது நலவழக்குகளும் போட முடியாத கையாலாகாத நாட்டில் வாழும் நாம் பல்தேசியக் கம்பனிகள் பாரம்பரியங்களை அழிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர என்ன செய்யலாம்.