நீ வந்தால் ஆனையிறவு முகாமை பிடித்துவிடலாம் கருணாவிடம் கூறிய தலைவர்.

மட்டக்களப்பு போராளிகளுக்கு நன்கு பிடித்த வெள்ளை அரிசி சோறும் மிகவும் சுவையான கறிகளும் சமைத்துக்கொண்டு தலைவர் உரிய நேரத்துக்கு வந்தார். பொட்டம்மானிடம் பொறுப்பை கொடுத்து நாங்கள் முகாம் திரும்பினோம்
ஆனையிறவு தாக்குதல் விடையாக திரிவுபடுத்துதல் தகவல்கள் வருவதால் பல நண்பர்கள் என்னிடம் ஒரு பதிவை இடும் படி வேண்டியதால் இதை எழுதுகின்றேன். பொதுவாக நாங்கள் பரந்தன் பகுதியை கைப்பற்றிய போதே ஆனையிறவையும் கைப்பற்ற வேண்டும் என்பது திட்டமாக இருந்தது இதற்காக ஒரு படைத்தொகுதியை சுண்டிக்குளம் பகுதியால் இறக்கி பின்பக்கமாக ஆனையிறவை கைப்பற்ற வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது இதை நானே தலமைதாங்கினேன் திட்டமிட்டபடி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அன்றிருந்த மிகவும் மோசமான காலநிலை காரணமாக வெத்திலைகேணிவரையுமே கைப்பற்ற முடிந்தது. பலமான காற்றும் மழையுமே காரணம் அதுமட்டுமல் வெத்திலைக்கேணி பகுதி கூடுதலான தண்ணிப்பள்ளங்களை உள்ளடக்கிய பிரதேசமும் முன்னேறுவதில் தடங்கல்களாக அமைந்தது .
இதை தலைவரிடம் எடுத்து கூறிய போது அதை அவர் எவ்வாறு புரிந்து கொண்டாரோ தெரியவில்லை வாணுவிடம் பொறுப்பு கொடுத்து விட்டு எங்களை மணலாறுக்கு போகும்படி பணித்தார். அதன்படி நாங்கள் அனைவரும் மணலாறுக்கு சென்று வழமையான பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம்.
இந்தகாலகட்டத்தில்தான் அதாவது இரண்டு மாதங்களின் பின்பு என நினைக்கின்றேன் மீண்டும் ஆனையிறவை கைப்பற்றுவதற்கான திட்டம் தலைவரால் நடைமுறைக்கு வந்தது இதன்படி குடாரப்பு பகுதியால் பாலராஜ் தலமையில் தரையிறங்கி பிரதான வினியோகப்பாதையை மறிப்பதென்டும் இதற்காக சாள்ஸ்அன்ரனி படைப்பிரிவும் சோதியா படைப்பிரிவும் முகாமை தாக்குவதற்கு தீபன் தலமையில் எஞ்சிய சாள்ஸ்அன்ரனி படைப்பிரிவும் மாலதி படைப்பிரிவும் தாக்குவதாகவும்,அனைத்தையும் இணைத்து பாணு தலமைதாங்குவதாகவும் திட்டம் தலைவரால் திட்டம் கொடுக்கப்பட்டது.
இதில் என்ன காரணமோ தெரியவில்லை என்னிடம் ஒருவார்த்தைகூட தலைவர் கூறவில்லை ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் எனக்கு தெரிந்திருந்தது எனது தளபதிகள் இதை என்னிடம் கூறிய போது பொறுமையாக இருக்கும் படி கூறிவிட்டேன்.
திட்டமிட்டபடி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக தரையிறக்கம் நிறைவேறியது இவர்கள் மறிக்கசென்ற இடம் ஆமியின் முகாம்கள் இல்லாததால் திட்டமிட்டபடி பிரதான வீதியை மறித்துவிட்டார்கள் கரும்புலிகளால் எளுதுமட்டுவாள் ஆட்டிலறி நிலையும் உடைக்கப்பட்டது. ஆனால் பிரதான தளமான ஆனையிறவை கைப்பற்ற இறங்கிய அணியால் உடன் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் புலிகளின் குரல் வானொலி வழமைபோல் ஒன்றை இரண்டாக்கி புழுகிதள்ளுகின்றது புலிகள் முன்னேறுகின்னார்கள் ஆனையிறவு தளம் விழுந்து கொண்டிருக்கின்றது இதையறிந்த ஜெயந்தன் அன்பரசி படைத்தளபதிகள் சற்று சோர்வடைந்தவர்களாக எங்களுக்கு இந்தச்சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் என்னிடம் குறைப்ட்டார்கள்.
அவர்களுக்கு நான் ஆறுதலான பதில்களை கூறி அவ்வளவு எளிதாக கைப்பற்றமுடியாது பொறுத்திருங்கள் என்று பதிலளித்தேன். நாள் செல்ல செல்ல கூடுதலான உடலங்களும் கூடுதலான காயங்களும் வரத்தொடங்கிவிட்டது புலிகளின் குரலும் அடக்கி வாசிக்க தொடக்கிவிட்டார்கள் ஒவ்வொருநாளும் குறைந்தது ஐம்பது போராளிகளின் உடலாவது வரத்தவறவில்லை. இராணுவத்தின் தரப்பில் தரையிறங்கிய போராளிகளை தாக்குவதற்கு ஐம்பத்திமூன்றாவது படைப்பிரிவு தளபதி காமினிகெட்டிஆராச்சி தலமையிலும் முகாமை பாதுபாப்பதற்கு தளபதிகளான பேசி பெனாண்டோ, நீல் அக்மின போன்ற அனுபவம் வாய்ந்த தளபதிகளும் நின்று கொண்டிருந்தார்கள்.
அக்காலப்பகுதியில் இராணுவத்தளபதியாக சிறிலால் விஜயசூரியா இருந்தார் அவர் இத்தாக்குதலை வழிநடத்துவதற்காக பலாலியில் முகாமிட்டிருந்தார். இவ்வாறு இருபத்தி இரண்டு நாட்கள் முடிந்து விட்டது குறைந்தது அறுனூறுக்கு மேற்பட்ட போராளிகள் மடிந்து இரண்டாயிரம் வரைக்கும் காயமடைந்திருந்தனர். தரையிறங்கிய போராளிகளின் பகுதியும் இன்றைக்கா நாளைக்கா என்று இராணுவத்தினரிடம் விழும் நிலையே காணப்பட்டது திடிரென தலைவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது எனக்கு நிலமை விழங்கிவிட்டது. சற்றும் பதட்டப்படாதவனாக அங்கு சென்றேன் ஒரு மதிய உணவுடன் என்னிடம் உரையாடினார். அவர் என்னிடம் உரையாடும்போது ஒரு குற்ற உணர்வுடனையே உரையாடினார் முகாமைப்பிடிப்பது நெருங்கி விட்டது இன்னும் கொஞ்சம்தான் இருக்கின்றது.
நீ வந்தால் பிடித்துவிடலாம் என்று கூறினார். நான் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சுதாகரித்துக் கொண்டு உடன் வருகின்றோம் என்று கூறினேன் ஏனென்றால் பிடிப்பது என்பது அவ்வளவு இலகுவான விடையமில்லை என்பது எனக்கு நன்கு தெரியும். நாளுக்கு நாள் இராணுவத்திளரின் மனோதிடம் வலுவடைந்து வருவதை அவர்களின் தொலைத்தொடர்பாடல்கள் ஊடாக அறிந்து கொண்டேன் அதுமட்டுமல் அவர்களின் பலவீனங்களையும் அறிந்து வைத்திருந்தோம். எவ்வாறு தாக்கலாம் என என்னிடமே தலைவர்கேட்டார் இந்தக்கட்டத்தில் இரண்டு பணிகள் என்னிடம் சுமத்தப்பட்டது ஒன்று முகாமை கைப்பற்ற வேண்டும் இரண்டு தரையிறங்கி மறிபட்டு உயிரோடு இருப்பவர்களை மீட்க வேண்டும்.
ஏற்கனவே எனது போராளிகளை சிறந்த பயிற்சியில் வைத்திருந்ததால் தயங்காமல் எனது திட்டத்தை கூறினேன் இவ்வளவு நாளும் எமது போராளிகள் முகாமை கைப்பற்றுவதற்காக இரவு நேரத்திலையே தாக்குதலை நடத்தி வந்தார்கள் இதை அறிந்த இராணுவம் இரவு நேரங்களில் உசாராகவும் பகலில் நல்ல நித்திரையும் ஓய்வுமாக இருந்தனர். வெத்திலைக்கேணிபகுதியால் பகல் இரண்டு மணிக்கு காவலரண்களை உடைத்துக்கொண்டு இயக்கச்சி சந்தியை கைப்பற்றி மறுநாள் ஒரு அணி ஆனையிறவிற்கு பின்புறமாக புளுக்குநாவையில் எடுத்த 85mm ஆட்டியால் உடைத்து முன்னேறுவதாகவும் பிரதான வீதியை நமது போராளிகள் மறித்ததால் கிளாலி கரையால்தான் இராணுவத்தின் சப்பிளை இருந்தது இதை மற்றுமோர் அணிசென்று மறிக்க வேண்டும் என்ட எனது திட்டத்தை தலைவருக்கு கூறினேன்.
எவ்வளவு தொகையினர் இறக்கப்போகின்றாய் என்று என்னிடம் கேட்டார் மூன்று கொம்பனிஎன்று கூறியபோது சற்று சிந்தித்தவராக போதுமா என கேட்டார் நான் போதும் என்றேன் எப்போது இறங்கப்போகின்றாய் என்று கேட்க நாளை என்று கூறினேன்.
வழி அனுப்புவதற்கு தானும் வருவதாக கூறினார் நாளை மதிய உணவும் உங்களுடன்தான் என்றும் கூறினார் திட்டத்தின்படி மிகவும் சிறந்த ஜெயந்தன் படைப்போராளிகள் இரண்டு கொம்பனியும் அன்பரசி படைப்போராளிகள் ஒரு கொம்பனியும் றாபட் ஜிம்கெலிதாத்தா சாளி,தீன்தமிழ் ஒருங்கிணைப்பதற்கு ரமேஸ் போன்ற தளபதிகளையும் படையணி மோட்டார் பிரிவிற்கு இலெங்கேஸ் மாஸர்ரையும் எடுத்து தயார்படுத்தினேன்.
ஆட்டிலறி உதவிக்காக றாயு அண்ணனையும் தயார்படுத்தினோம் றாயு அண்ணனும் நானும் ஒரே பயிற்சி பாசறை என்பதால் எனக்கும் அவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது கூறியதைப்போன்று
மட்டக்களப்பு போராளிகளுக்கு நன்கு பிடித்த வெள்ளை அரிசி சோறும் மிகவும் சுவையான கறிகளும் சமைத்துக்கொண்டு தலைவர் உரிய நேரத்துக்கு வந்தார். தமிழ்செல்வன்,வாணு,றாயு அண்ணன் மற்றும் இன்னும் சிலரும் தலைவருடன் வந்திருந்தார்கள் அந்த இடம் சற்று முகாமை அண்டிய பிரதேசம் ஆகையால் விமானத்தாக்குதல் அடிக்கடி இடம்பெறும் மதிய உணவை போராளிகளுடன் தலைவர் உண்டு செல்லும்வரைக்கும் எனக்கு சற்று பதட்டமாகவே இருந்தது.
அனைத்துப் போராளிகளும் தலைவருடன் விருந்துண்ட மகிழ்ச்சியில் இலக்கு நோக்கி நகர்ந்தோம் திட்டமிட்டபடியே மறுநாள் சரியாக இரண்டுமணிக்கு காவலரண்களை உடைத்துக்கொண்டு ஐஇம்கெலிதாத்தாவின் அணி உள்ளே ஆகபாய்ந்தது வெத்திலைக்கேணியில் உடைத்த பகுதியில் இருந்து எட்டு கிலோமீற்றர் தூரம் செல்லவேண்டும்.
இயக்கச்சி சந்திக்கு சரியாக மாலை ஐந்தரை மணிக்கு இயக்கச்சி சந்தியை அடைந்துவிட்டோம் அவ்விடத்தில் போராளிகளுக்கு ஓய்வுகொடுத்துஆ விட்டு கிளாலிநோக்கிய அணி தயாரானது இதில் சாள்ஸ்அன்ரனி போராளிகளும் இணைந்து கொண்டார்கள் பற்றைக் காடுகளூடாக ஒன்பது கிலோமீற்றர் தூரம் சென்று அதிகாலை மூன்றுமணிக்கு கிளாலிக்கரையில் வினியோக அணிமீது போராளிகள்ஆட்லறி தாக்குதலை ஆரம்பித்தார்கள் ஒரேயொரு வினியோகப்பாதையும் மறிபட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இராணுவம் திக்குமுக்காடியது திட்டத்தின்படி அதிகாலை இயக்கச்சி ஊடாக ஆனையிறவிற்கு பின்புறமக தாக்குதலை ஆரம்பித்தோம் எதிர்பார்த்ததைப்போன்று பாரிய எதிர்ப்பு இருக்கவில்லை நண்பகல் ஒரு மணிபோல் ஆனையிறவு தளம் முற்று முளுதாக எங்கள் கட்டுப்பாட்டில் வந்து மூதல்முதலாக ஜெந்தன் படையுடன் ஆனையிறவு வீழ்ந்தது.கைப்பற்றியதின் பிற்பாடு ஜெயந்தன் படையணியுடன் ஆனையிறவு தளத்தில் நானும் எனது தளபதிகளும் கால் பதித்தோம் இதை அறிந்த தலைவர் மிகவும் …மகிழ்வடைந்தார் படைத்தளத்திற்கு பொறுப்பாக இருந்த பேசிபெனாண்டோ, நீல்அக்மின உட்பட ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் மரணமடைந்தனர். இருபத்தி இரண்டு நாட்கள் பிடிக்க முடியாத ஆனையிறவை இருபத்தி நான்கு மணித்தியாலத்திற்குள் பிடித்துக்கொடுத்தோம் தலைவரிடம் இருந்து சாமான்கள் ஏற்றுவதற்காக முகாமை பொட்டம்மானிடம் பொறுப்புகொடுக்கும்படி கட்டளைவந்தது அதன் படி பொட்டம்மானிடம் பொறுப்பை கொடுத்து நாங்கள் முகாம் திரும்பினோம் எங்களில் மொத்தமாக பன்னிரெண்டு போராளிகள் வீரச்சாவு அறுபதுபேர்கள் காயம் மொத்தத்தில் இச்சமரில் வீரகாவியமான அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலி.