பயிரை மேய்ந்த வேலிகள்..(21)

(இயக்கமே உங்களது மதம் தலைவரே உங்களது கடவுள்!)

நாவற்காடு பயிற்சி முகாமில் காளி மாஸ்டரின் கருணைக்காக மாணவர்கள் இப்போது ஏங்கி தவிக்க வேண்டிருந்த்தது. பயிற்சியின் முதல் நாள் பங்கர் அமைக்க பயிற்சிகொடுக்க தொடங்கியிருந்த காளி மாஸ்டர் காளியாட்டமே ஆடிக்கொண்டிருந்தார். நாள் முழுதும் பங்கர் வெட்டுவதற்க்கு விட்டப்பட்ட மாணவர்கள் இரண்டாவது நாளும் அதனை தொடருமாறு கூறப்பட்டது. மூன்றாம் நாள் பின்னேரம் வரை தொடர்ந்த பங்கர் வெட்டும் பணி முடிவடைந்தது. அந்த பங்கர்கள் பயிற்சியின் போது இடம்பெறக்கூடிய விமானத்தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள தங்களுக்காவே அமைக்கப்பட்டது என உணரத்தொடங்கினர்.

அன்று மாலை புலிக்கொடி ஏற்றப்பட்டது. கூடவே தமிழீழ தேசிய கீதம் எனகூறப்பட்ட பாடலும் ஒலிக்கவிடப்பட்டது. பாடல் முடிவில் காளி மாஸ்டரின் பேச்சும் தொடங்கியிருந்தது. இம்முறை மாஸ்டரின் உரை சற்றி வித்தியாசமாக இருந்ததுநாங்கள நாட்டுக்காக போராடுகின்றோம். எத்தனை பேர் வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளனர். நீங்கள் அதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் படித்துக்கொண்டிருக்கின்றீர்கள். அரசாங்க வேலைகளுக்கு அலைகின்றீர்கள். இனிமேல் நீங்கள் படிக்க முடியாது. மண்ணுக்காக போராடுவதை தவிர நீங்கள் வேறு ஒன்றையும் செய்ய முடியாதுஎன காளி மாஸ்டர் உரையை தொடர்ந்து கொண்டிருந்தார். காளி மாஸ்டரின் மாணவர்கள் மீது வெறுபை கக்கிய பேச்சின் முடிவில் முதலுதவிதலைமத்துவ பயிற்சிக்காக மானவர்களின் சுய விருப்பின் அடிப்படையில் அழைத்துச்செல்லப்படுவதாக வெளியுலகத்துக்கு கூறப்பட்ட நிகழ்வு போர் பயிற்சியாக மாறியிருந்தது. பேணாகளை தூக்கிய மாணவர்களின் கைகளில் இப்போது T-56 தாக்குதல் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருந்தது.

தமது பிள்ளைகளுகுக்கு ஆயுத பயிற்சி அளிப்பதை பொறுக்க முடியாத பெற்றோர்கள் இந்த பயிற்சி முகாம்களுக்கு சென்று தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு கேட்க தொடங்கினர். ஆனால் புலிகளோ உங்களை யார் இங்கே விட்டது. இங்கெல்லாம் வரக்கூடது. இராணுவத்துக்கு தகவல் கொடுக்கத்தான் இங்கே வந்துள்ளீர்கள் என்று கூறியதுடன். அவர்களை அடித்து உதைத்து துரத்தித்க்கொண்டிருந்தனர். தமிழர்களுக்காக போராடுகின்றோம் எனக்கூறியவர்கள் இந்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் தமிழர்களாகவே நடத்தவில்லை. குறைந்த பட்சம் மனிதர்களாக கூட அவர்களை மதிக்கவில்லை.

காளி மாஸ்டரின் உடலில் முழுமையாக காளி வந்து இறங்கியது போன்று அவரது நடவடிக்கை இருந்தது. கட்டாந்தரையில் T-56 துப்பாக்கியுடன் தவழ்ந்து ஊர்ந்து (Crawling) செல்லுமாறு பணித்தார். மாணவர்களின் கைகளில் உராய்வு ஏற்பட்டு இரத்தம் வழியத்தொடங்கியது. எழுந்திருக்க முயன்றவர்களின் முதுகை காளிமாஸ்டரின் கைகளில் இருந்த மின்சார வயர் பதம்பார்த்தது. அவரின் சப்பாத்துக்கள் மாணவர்களின் பிட்டத்தை பதம்பார்த்தது. ”ஒரு மாதத்துக்கு முன்பு எங்களுடைய ஆட்கள் பிரச்சாரத்துக்கு வந்த போது நீங்கள் அவர்களை மதிக்கவில்லை. அவர்களின் கூட்டத்துக்கு உங்களில் ஒருத்தன் கூட போகவில்லை. உங்களுக்கு என்ன திமிரடா என கூறி ஒரு பழிவாங்கும செயலாகவே காளி மாஸ்டர் அந்தகுரோலிங்நடத்திக்கொண்டிருந்தார்.

பயிற்சி முடிவில் அன்று இரவு மாட்டு இரைச்சியுடன் சோறு வழங்கப்பட்டது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமையாகையால் மாணவர்கள அதனை உண்ண முடியாது என மறுத்ததனர். இப்போது காளி மாஸ்டரின் உடம்பில் மீண்டும் காளி வந்திருக்க வேண்டும். ”இயக்கம்தான் மதம், தலைவர் கடவுள். ஒவ்வொரு தமிழனும் இதை புரிந்துகொள்ள வேண்டும்என கத்திக்கொண்டே மாட்டு இரைச்சியை உண்ண மறுத்த மாணவர்கள்மீது ஏறிப்பாய்ந்து சதிராடினார். உங்கள் திமிருக்க நாளைக்கு விடியும்போது தக்க தண்டனை தருகின்றேன் பார் எனக்கூறிவிட்டு மாஸ்டர் மறைந்தார்.

மறு நாள் காலையில் நாவற்காட்டு முகாமில் காளி மாஸ்டர் அனைவரையும் பயிற்சிக்கு வருமாறு கட்டளையிட்டார். பயந்துபோய் தயக்கத்துடன் சென்ற மாணவர்களை சத்தியபிரமாணம் எடுக்குமாறு கூறினார். “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்எனக்கூறுமாறு பணித்தார். ஆனால் மாணவர்களோநாங்கள் புலிகள் அல்ல. நாங்கள் மாணவர்கள்.உங்களுடன் சேர்ந்துகொள்ள நாங்கள் இங்கே வரவில்லைஎன்று ஒருமித்த குரலில் கூறினார்கள். மாணவர்களின் இந்த ஒற்றுமை காளி மாஸ்டரையும் அவரது குழுவினரையும் ஆத்திரம் கொள்ள வைத்தது. ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் அது தந்திரம் என்பதை மாணவர்கள் அப்போது அறியவில்லை.

புலிகளின் ஆதரவு மாணவர்களை பயன்படுத்தி மாணவர்களின் ஒற்றுமையை குலைத்தார் காளி மாஸ்டர். மாணவர்கள் பத்தடி பாய்ந்தார் வேங்கை புலியான மாஸ்டர் சும்ம இருப்பாரா என்ன? அவர் முப்பது அடியே பாய்ந்தார். மாணவர்களுக்கு தலைமை ஏற்ககூடிய திறமைசாளிகளை தமது கையாட்களாக இருந்த மாணவர்கள் மூலம் அடையாளம் காணத்தொடங்கினார்.

அவ்வாறு அடையாளம் கானப்பட்ட மாணவர்களை தலைகீழாக கட்டி வைத்து அடித்தார். தோப்புக்கரணம் போடச்சொன்னார். ஒரு பாதம் மட்டுமே வைக்ககூடிய அளவுள்ள மரக்கட்டையின்மீது ஏறி நின்றுகொண்டு கையில் வேறு ஒரு மரக்கட்டையை தலைக்கு மேலே தூக்கியபடி வெயிலில் இரண்டு மூன்று மணித்தியாலம் நிற்கச்சொன்னார். இடையிடையே கடுமையான அடியும் கொடுத்தார்.

இதே போன்ற நிகழ்வுகள் ஏனை மூன்று பயிற்சி முகாம்களிலும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தது. புலிகளுடன் முரண்பட்ட மாணவர்கள் கடுமையான தண்டணைகளுக்கு முகம் கொடுத்ததுக்கொண்டிருந்தனர். சிலர் அடித்து துவைக்கப்பட்டனர். பலர் கடுமையான வேலைகள் செய்யுமாறு பணிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கையில் துப்பாக்கிகளை கொடுத்தால் அதனால் கவரப்பட்டு அவர்கள் தங்களுடன் இணைந்து விடுவார்கள் என புலிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக மாணவர்கள் இருந்ததனால் கோபத்தின் எல்லைக்கே சென்ற புலிகள் சில நாள் பயிற்சியின் முடிவிலேயே அவர்களை போர்க்களத்துக்கு அனுப்ப தீர்மாணித்துவிட்டனர். ஆனால் மாணவர்களோ வீணான முயற்சி என்று தெரிந்தும் புலிகளின் இந்த தீர்மாணத்துக்கு உடன்பட மறுத்தனர்.

காளி மாஸ்டரின் நாவற்காடு ஆண்கள் பயிற்சி முகாமில் முல்லைத்தீவு மாணவர்களின் நிலைமை இவ்வாறு என்றால் வட்டகச்சியில் இருந்த கிளிநொச்சி மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் நிலமை வேறு விதமாக இருந்தது.

புதுக்காட்டில் மாட்டிக்கொண்ட கிளிநொச்சி மாணவிகளை மீட்கும் முயற்சியில் அவர்களின் பெற்றோர் முயன்றுகொண்டிருந்த அதே வேளை வள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமில் சிக்கிக்கொண்ட முல்லைத்தீவு மாணவிகள் கையில் இருந்த T-56 தாகுதல் துப்பாக்கியை தூக்கி வீசிவிட்டு எப்படி தப்பித்து செல்லாம் என வழியை கண்டுபிடிக்க முயன்றனர். பாடசாலையில் இரசாயனவியல், பௌதீகவியல், கணிதவியல், கணக்கியல், என்று சிக்கலான சூத்திரங்களுக்கு விடை கணட மாணவிகள் வள்ளிபுனத்தில் புலிகளால் பின்னப்பட்ட சூத்திரத்தை உடைக்க வழிதெரியாது திகைத்து நின்றனர். உயிரியல் கற்ற மாணவிகள் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வழிதெரியாது தவித்தனர்.

அடுத்து வரும் மூன்றே நாட்களில் வள்ளிபுனம் பெண்கள் பயிற்சிமுகாமில் சிக்கிகொண்டுள்ள முல்லைத்தீவு மாணவிகள் மீது இரத்த வேட்டையாட காலன் இப்போது ஆயத்தமாகிக்கொண்டிருந்தான்.

தொடரும்..

(Rajh Selvapathi)