பயிரை மேய்ந்த வேலிகள்..(3)

(மணக்களுக்கு கிடைத்த திருமண பரிசு )

இந்த சூழ்நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மக்களிடையே மிகுந்த கவலையையும் பதட்டத்தையும் உருவாக்கியது.

ஜனவரி 22, 2007ல் உருத்திரபுரத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் மல்லாவி வைத்தியசாலையில் வேலைசெய்த கிளிநொச்சி கனகபுரத்தை சேர்த ஒருவரை திருமணம் முடித்திருந்தார். திருமன வயதை கடந்த இருபதுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதினராக இருந்தனர். இரண்டு நாட்களின் பின் 24ம் திகதி அவர்கள் வீட்டிற்கு வந்த புலிகள் சட்டப்படியான திருமண வயது 35ம், 40ம் என்பதால் அவர்களின் திருமணம் செல்லாது என அறிவித்ததுடன் மணமகனை தம்முடன் இணைய வருமாறு கட்டாயப்படுத்தினர். தங்களின் திருமண சடங்குகளை முடிப்பதற்கு அனுமதிக்குமாறும் அதன் பின் தான் அவர்களுடன் இணைந்துகொள்வதாகவும் அவர்களின் காலிகளில் விழுந்தது மன்றாடினார் அந்த மணமகன். அந்த நேரத்தில கடவுள் அவருக்கு கருணைகாட்டியிருக்க வேண்டும். புலிகளும் அதற்கு இணங்கி அவரை விட்டு சென்றுவிட்டனர். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த மணமக்கள் எங்கோ பாதுகாப்பான மறைவிடத்துக்கு தப்பிசென்று ஒழிந்துகொண்டனர்.

இரண்டு நாட்களின் பின் மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வந்த புலிகள் மணமக்களை காணாது மிகவும் ஆத்திரமடைந்து மணமகளின் தங்கையையும் மணமகளின் தம்பியையும் பிடித்து சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்தபோன அந்த மணமகன் பெபிரவரி04ல் தற்கொலை செய்துகொண்டார். சரியாக திருமணம் முடித்து 14வது நாள் பாடசாலை ஆசிரியரான அந்த மணமகன் இறந்துபோயிருந்தார்.

பிடித்து செல்லப்பட்ட மணமக்களின் உடன் பிறப்புக்கள் பயிற்சிக்காக அனுப்பபட்டு சில நாட்களில் மணமகனின் தங்கை காயங்களுக்குள்ளாகிவிட்டிருந்தார். மணமகளின் சகோதரன் போரில் கொல்லப்பட்டுவிட்டிருந்தார். தமது மூத்த சகோதரர்களின் திருமணத்தை காண கொழும்பில் இருந்து நடக்கும் விபரீதத்தை அறியாமல் வந்தது இங்கே வாழ்க்கையை இழந்துபோயினர் அந்த மணமக்களின் சகோதரர்கள்.

இந்த துன்பியல் செய்தி புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் காட்டுத்தீ போன்று பரவியது. பொதுமக்கள் மத்தியில் இதற்கு கடும் விசனம் எழுந்தாலும் அதனை வெளிப்படுத்த அவர்கள் அஞ்சினர். இவாறு ஒரு மூடப்பட்ட சூழ்நிலையில் இறுக்கமான நிலைக்குள் மக்கள் தள்ளப்பட்டு இருந்தமை புலிகளுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. அவர்களுக் கட்டாய ஆட்சேர்ப்பை தடையின்றி தொடர்ந்தவாறே இருந்தனர்.

(தொடரும்..)

(Rajh Selvapthi)