பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 43 )

கிண்ணியாவில் இருந்து குணராசா (செங்கை ஆழியான்) இவரை இடம் மஜீத் இடம் மாற்றியதால் அந்த இடத்தை தற்காலிமாக பற்குணம் பொறுப்பேற்றார். கூடவே தம்பலகாம்மும் அவரின் கீழே இருந்தது.ஒரு நாள் அவருடன் நான் கிண்ணியா போய் கொண்டிருந்தேன்.ஒருவர் நடந்தே பொய்க் கொண்டிருந்தார்.அவரைக் கண்டதும் காரை சற்று அருகே நிறுத்திவிட்டு என்னை பின்னால் இருக்க சொன்னார்.வழமையாக யாரை அவர் ஏற்றினாலும் நான் நானாகவே பின்னால் சென்றுவிடுவேன்.காரணம் வயதுக்கு மரியாதை.

பின் அவரிடம் நான் பற்குணம்.கிண்ணியா டி.ஆர். ஓ.நீங்கள்தானே மஹரூப் என வினாவினார்.அவரும் ஆம்.எனக்கு உங்களைத் தெரியும் என்றார்,அப்போது பற்குணம் காரில் ஏறுமாற கேட்க அவர் மறுத்துவிட்டார்.

காரணம் கேட்க நான் உங்கள் காரில் ஏறினால் உங்களுக்குப் மஜீத்தால் பிரச்சினை ஏற்படும்.எனவே வேண்டாம் .நன்றி என்றார்.அப்போது அவர் முன்னாள் எம்.பியின் மகன் என்றே அறியப்பட்டவர்.தன்னால் மற்றவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் என கருதி அவர் தன்னை விலத்திக் கொள்ளும் அவரின் பண்பு பற்குணத்துக்கு பிடித்துவிட்டது.அவரை ஏற்றிக்கொண்டு மஜீத் வீட்டு வாசல் வழியாக வந்தார்.அப்போது எனக்கு காரை மெதுவாக செலுத்தி இதுதான் மஜீத் வீடு என எனக்கு காட்டினார்.அப்போது அங்கிருந்த சிலர் பற்குணத்தையும்,மஹரூப் அவர்களையும். கண்டனர்.அப்போது மஹரூப் அவர்கள் பற்குணம் கவனமாக இருங்கள்.இவன் எல்லோரையும் அடக்கி ஆளநினைப்பவன்.பழிவாங்கும் குணமுள்ளவன்.இதனால் நானே பலரை சந்திப்பதை தவிர்கிறேன் என்றார்.பின்னர் அவரை இறக்கவேண்டிய இடத்தில் இறக்கிவிட்டு அலுவலகம் போனார்.

ஜீவநேயம்:- இதே கிண்ணியாவில் ஒரு நாள் பற்குணமும் நானும் போயக் கொண்டிருந்தோம்.ஒருவர் ஒரு மாட்டு வண்டியில் ஒரு பெரிய மாட்டுடன் சிறு கன்றையும் கட்டி சவாரி போய்க் கொண்டு இருந்தார்.அந்த சிறு கன்றின் நிலை கண்ட இவருக்கு கோபம் வந்துவிட்டது.உடனே காரை மறித்து அவனை வண்டியால் இறக்கி மாட்டை அவித்துவிடுமாறு கோபமாக பேசினார்.சரியான சோடி மாடு கொண்டுவந்து கொண்டுபோ என அவனை விரட்டி அனுப்பினார்.அவனோமஜீத் வீட்டுக்கே நேராகப் போனான்.மஜீத் அவனை ஏமாற்ற பற்குணத்தோடு கதைத்துவிட்டு போனை வைத்து விட்டார்.

மஜீத் பற்குணத்தை எதிர்த்தபோதும் பற்குணம் செய்த காரியம் ஒன்றை வரவேற்றார்.கிண்ணியாவில் சிலர் வீதிகளை ஆக்கிரமித்து வேலிகள் மதில்கள் போட்டனர்.இதை பற்குணம் பிடுங்கி எறிய வைத்தார்.அதை மறைமுகமாக எதிர்ப்பது போல நடித்து பற்குணத்தை ஊக்குவித்து வீதி ஆக்கிரமிப்புகளை தடுக்க ஆதரவு கொடுத்தார்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)