பற்குணம் டி.ஆர்.ஓ(பதிவு 27)

குச்சவெளியில் கட்டப்பட்ட சைவகோவிலை நிறுத்த சொன்னதை பற்குணத்தால் ஏற்க முடியவில்லை.அதே நேரம் அரசாங்க நிலத்தில் கட்டியிருந்தார்கள்.இந்த தடை உத்தரவு பற்றிய தகவலை மட்டும் வெளியிட்டு சம்பந்தப்பட்டவரகளுடம் சொன்னார்.
இதை அடுத்து குச்சவெளி-கோமரங்கடவல காட்டுப்பாதையில் திரியாயை இணைக்கும் கள்ளம்பத்தை என்னும் இடத்தில் குடியேற்றம் ஒன்றை ஆரம்பிக்க அன்றைய ஹொரவ்வப்பொத்தான எம்.பி அரச அதிபர் மூலம் ஒப்புதல் கேட்டார்.இது திட்டமிட்டலால் இன குடியேற்றத்துக்கு வழிவகுக்கும் என உணர்ந்த பற்குணம் அன்றைய கோமரங்கடவல டி.ஆர. ஓ விடம் கதைத்து அங்கே விலை உயர்ந்த மரங்கள் இருப்பதால் அந்த காடுகளை அழிக்க முடியாது என அறிக்கை கொடுத்தார்.இதனால் இங்கே சிங்கள குடியேற்றம் தடுக்கப்பட்டது.

இதன் பின்பு இந்த காட்டுப்பாதைகள் மூலம் இடங்களைப் பார்வையிட்டார்.இதில் கள்ளம்பத்தையில் ஆறு ஏழு குடும்பங்கள் ஒன்றாக இருந்தன.இடையிடையே காட்டுக்குள் சில மட்டக்களப்பு அப்பாவி விவசாயிகள் குடியிருந்தனர்.இவரகள் ஏன் அந்த அடர்ந்த காட்டினுள் குடியிருகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி வைரமுத்து விதானை அவர்களோடு கதைத்தார்.அவர்தான் அவர்கள் காட்டின் உள்ளே பயிரிடப்படும் கஞ்சா தோட்டங்களின் காவலர்கள்.இதை செய்பவர்கள் வடபகுதி கடத்தல்காரர்கள் என்றார்.மட்டக்களப்பு வாசிகள் கூலிகள்.காவல்காரர்கள்

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு உத்தரவு கொடுத்தார்.அன்று பொலிஸ் நிலையம் நிலாவெளியில் இருந்தது.பொலிஸ் இன்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை.அவரை அரச அதிபர் உத்தரவோடு இடம்மாற்றினார்.புதிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து அத்தனை கஞ்சாத் தோட்டங்களும் அழிக்கப்பட்டன.
பின்னர் குச்சவெளியில் பொலிஸ்நிலையம் அவசியம் என கருதி நிலாவெளிப் பொலிஸ் நிலையத்தை இடம்மாற்றக் கோரினார். மழை காலங்களில் போக்குவரத்துக்கள் சிரமம் என்பதால் பொலிஸார் அவசரத்துக்கு வரமுடியாது.ஆனால் இதை பொது மக்கள் விரும்பவில்லை.

இந்த போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக புல்மோட்டை இஸ்லாமிய மக்கள் தங்கள் பகுதியை அனுராதபுரத்தோடு இணைக்க கோரிக்கை விடுத்தனர்.இது பற்குணத்துக்கு இன்னொரு சவாலாக அமைந்தது.இந்த நிலப்பரப்பு பிரிந்தால் வடக்கு கிழக்கு நிலப்பரப்புதிய பிரியும் என உணர்ந்து தடுக்க மக்களிடமும் அரச அதிபரிடமும் பேசி நிறுத்தினார்.ஏற்கனவே பறண மதவாச்சி என சிங்கள கிராம சேவகர் பிரிவு உள்வாங்கப்பட்டிருந்தது.

இவர் இருக்கும் வரை நிலாவெளி முதல் முல்லைத்தீவின் கொக்கிளாய் கடல் ஏரிவரை குச்சவெளி நிர்வாகத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்தது.இவர் விலகிய பின் புல்மோட்டை தென்னமரவாடி அனுராதபுரத்துடன் இணைக்கப்பட்டன.
இன்று வட கிழக்கு நிலப்பரப்பு பிரிந்துள்ளது.இது பிரிக்கப்படாவிட்டால் திருகோணமலையில் இஸ்லாமிய மக்கள் நிலையான அரசியல் ஆதிக்கம் கொண்டிருப்பார்கள்)

(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்……)