பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 34)

குச்சவெளி பற்குணத்துக்கு பிடித்த பிரதேசமாக இருந்த்து.ஆனால் இங்குள்ள போக்குவரத்து வசதியீனங்கள் அதுவும் மழைகாலங்களில் தடைப்படும்.சலப்பை ஆறு,புடவைக்கட்டு,யான் ஓயா ஆகியவை வெள்ளம் பெருக்கெடுத்தால் தொடர்புகள் துண்டிக்கப்படும்.இதன் காரணமாக புல்மோட்டை மக்கள் தமது பகுதிகளை அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைக்க கோரிக்கை வைத்தனர்.அவரகள் காரணங்கள் நியாயமானவை.ஆனால் சிலர் தமிழ் பிரதேச நிரவாகத்தைவிட சிங்கள பிரதேசத்துடன் இணைவது இலாபம் என்றும் கருதினர்.

இந்தக் கோரிக்கையால் தமிழ்ப் பிரதேசங்கள் நிலரீதியான தோடர்புகள் அறுந்துபோகும்.இந்த ஆறுகளுக்கு பாலங்கள் இருந்திருந்தால் இந்தக் கோரிக்கை எழுந்திருக்காது.இது பற்றி அன்றைய திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் கவலை கொள்ளவில்லை .இதே நேரம் பலர் தமிழர்களும் பாலங்கள் போடுவதில் அக்கறை காட்டவில்லை .

காரணம் சிங்கள மக்கள் குடியேறிவிடுவார்கள் என்ற அச்ச உணர்வு.இந்த உணர்வு முன்னாள் அமைச்சர் மஜீத் கூட கொண்டிருந்தார்.இன்றைய கிண்ணியா பாலத்தை அவர் விரும்பவில்லை.பற்குணம் இருந்தவரை இந்த பிரதேச இணைப்பு நடத்தவிடவில்லை.இதற்கு அன்றைய அதிபர் திஸ்ஸ தேவேந்திரா ஒத்துழைப்பைக் கொடுத்தார்.

1971 இல் ஜே.வி.பி கிளர்ச்சியின்போது புல்மோட்டை பாதிக்கப்பட்டது.இராணுவ அட்டகாசங்கள் கைதுகள் நடந்தன.இதை அறிந்த பற்குணம் அரச அதிபர்,மற்றும் அன்றைய திருகோணமலை விமானப்படைத் தளபதி விவேகானந்தன் என்பவர் உதவியுடன் தடுத்து நிறுத்தினார்.கைது செய்யப்பட்டவரகளை நேரே சென்று விடுவித்தார்.தன் நிர்வாக எல்லைக்குள் இராணுவத்தை வரவிடாமல் தடுத்தார்.இதன் காரணமாக புல்மோட்டை மக்கள் பற்குணத்தை பெரிதும் விரும்பினார்கள்.அந்த இணைப்பு அன்று நடந்திருந்தால் புல்மோட்டை மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இந்த நிலப்பரப்பு ஊடாகவே அந்த கிளர்ச்சிக் காலங்களில் யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டோம்.

புல்மோட்டை மக்கள் இணையாதிருந்தால் வடக்கும் கிழக்கும் நில ரீதியாக பிரிக்கப்பட்டிருக்காது.திருகோணமலை மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் அரசியல் பலம் இன்றைய சூழ்நிலையில் ஆளுமை செலுத்தியிருக்கும்.இன்று அனுராதபுரத்தோடு இணைந்து மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர்.

அரசியல்வாதிகள. முடிந்தால் இந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்துவது சிறுபான்மை இனங்களுக்கு நல்லது.

(விஜய பாஸ்கரன்)
(தொரும்….)