பற்குணம் (பகுதி 108 )

ஒரு நாள் என்னைக் காணவந்தார்.நான் ஒரு கார் வாங்கப்போகிறேன்.நீயும் வாறியா எனக் கேட்டார்.நானும் சம்மதித்தேன்.அப்போது கார் யாருக்கு என்றேன்.மாகாண சபைக்கு என்றார்.

பின்னர் இருவரும் வாகனத்தில் பயணித்தோம்.யாருக்கு கார் என்றேன்.மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருக்கு என்றார்.அப்போது முதலமைச்சருக்கு வாங்கியாச்சா என்றேன்.இல்லை என்றார்.அவர் முதலில் பெறுவதை விரும்பவில்லை.மேலும் அவர் முதலில் பெற்றால் அஅரசியலாக பேசப்படலாம்.எனவே சேக் இசகுதீன் அவர்களுக்கே முதலில் வாங்கிக்கொடுக்கிறார்.

நாங்கள் மஜ்டா கார் கம்பனிக்குள் போனோம்.நான் முதன்முதலாக புதிதாக அழகிய ஆடம்பர கார்களை காண்கிறேன்.பற்குணம் அங்குள்ளவர்களுடம் பேசினார்.பின் அவர்கள் என்னை நோக்கி வந்தனர்.பற்குணம் என்னைப் பார்த்தார் .நான் கார்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரைப் பார்த்து சிரித்தேன்.அவரும் புன்னகை புரிந்தார்.நான் பார்த்த காரை இது நல்லாக இருக்கிறது என்றேன்.அவரகளுடன் பற்குணம் மற்ற கார்களையும் பார்த்துவிட்டு நான் பார்த்து நின்ற காரை தெரிவு செய்தார்.

அதன் பின்னர் அவர்களுக்குள்ளாக பேச நான் பாரத்துக் கொண்டிருந்தேன்.அதன் பின் பதிவுகள் ஆரம்பமாகின.பற்குணம் காருக்கான காசோலையைக் கொடுத்தார்.அப்போது அவர்கள் உங்களுக்கு எங்களின் அன்பளிப்பு உள்ளது.அது உங்களுக்கானது என தெரிவித்தனர்.நீங்கள் மேலும் கொள்வனவு செய்தால் மேலும் தருவோம் என்றனர்.அதைக் கேட்ட பற்குணம் அந்த தொகையைக் காருக்கு செலுத்தும் பணத்தில் குறைக்க வலியுறுத்தினார்.அவர்கள் அது லஞ்சம் அல்ல.எங்கள் வியாபாரத்தில் இலாபத்தில் நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் பணம் என்றனர்.பற்குணம் மறுத்தார்.அதன் பின் தனது காசோலைப் புத்தகத்தை அவர்களுக்கு காட்டினார்.அதில் சகல காசோலைகளிலும் வரதராஜபெருமாள்,விக்னேஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்ட வெற்றுக் காசோலை புத்தகங்கள்.

இவ்வளவு நம்பிக்கையோடு என்னிடம் அவர்கள் தந்துள்ளார்கள்.அந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டும் என்றார்.வேறு வழியின்றி அந்த பணத்தை காரின் பெறுமதியில் குறைத்தார்கள்.அந்தக் காரில் முன் ஆசனத்தில் என்னை இருத்தி என் வீட்டில் இறக்கினார்.அதுவே நான் முதலில் பயணம் செய்த ஆடம்பர வாகனம்.அப்போது சொன்னார் அடே நாங்கள் இப்படி புதிய கார் வாங்குவது நடவாத காரியம்.இந்த காரை நீ பார்த்தாய்.எனக்கும் பிடித்துவிட்டது .அதுதான் வாங்கினேன் என்றார்.

அதன் பின் மேலதிகமாக கார்களை வாங்கிவதற்கான ஒழங்குகளை ஏற்பாடு செய்துவிட்டு சில வேளை தவறுகள் விமர்சனங்கள் வரலாம் என்பதால் இந்த ஒப்பந்தத்தை முதலமைச்சரையும் தலமைச் செயலாளரையும் அவர் அனுப்பியதாக அறிந்தேன் பற்குணத்தின் இந்த நடவடிக்கை மாகாண சபை அதிகாரிகளுடையே கசப்பை ஏற்படுத்தியது..பற்குணத்தின் மனைவி (அண்ணி) என்னைக் கனடா அழைப்பதற்காக தன் மருமகன் பெறாமகன் உதவியை நாடினார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)