பற்குணம் A.F.C (பகுதி 86 )

1986 மே மாதம் ரெலோ மீதான புலிகளின் தாக்குதலின் பின்பு ஏனைய அமைப்புகளும் படிப்படியாக தடை செய்யப்பட்டன.அதன் பின்பு புலிகள் தனி அதிகாரம் செலுத்தினர் .ஆனால் இவர்களுடைய நட்பு அமைப்பான ஈரோஸ் செயற்பட்டு வந்தது.பாலகுமார் பற்குணத்திடம் பல்கலைக் கழகத்தில் படித்த காரணத்தால் ஈரோஸ் அமைப்புடன் சுமுகமான உறவு இருந்தது. ஈரோஸ் பரராச்சிங்கம் மிக நெருக்கமாக பழகினார்.

இதைவிட புலிகளில் நிதிப் பொறுப்பாளர் செல்வரத்தினம்,உணவு வுநியோகப் பொறுப்பாளர் காண்டீபன்,அரசியல் பொறுப்பாளரகளான பரமு மூர்த்தி,பிரசாத் ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்தனர்.

புலிகளின் அதிகாரம் கோலோச்சிய இந்த காலங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் ஒரு தொகுதி உணவுகளை புலிகளுக்கு வழங்க நிர்பந்திக்கப்பட்டனர்.இதைகள் காரணமாக்கி சிலமோசடிகளும் அரங்கேறின.இந்த உணவுகளை மீதப்படுத்தி புலிகள் தமக்கு சாதகமான வியாபாரிகள் மூலம் விற்பனை செய்தனர்.இதை சுன்னாகத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இந்த மோசடிகளுக்கு துணை போனார்.சில தொகுதி உணவுகள் லொறிகள் மூலம் அவை மீள கொழும்புக்கு எடுத்துச் சென்ற சம்பவங்களும் உண்டு.இவற்றை எல்லாம் சமாளித்தே பற்குணம் தனது நிர்வாகத்தை நடத்தினார்.

பற்குணம் அடிக்கடி இராணுவ முகாங்களுக்குள் போய் வருவது புலிகள் சிலருக்கு பிடிக்கவில்லை.பற்குணம் செல்லும் நாட்களை அறிந்து அந்த முகாம்களின் காவலரண்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடாத்துவார்கள்.புலிகளுடன் இது தொடர்பாக பேசவும் முடியாது. எனவே இராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு புலிகளின் தனக்கு எதிரான சதிகளை விளக்கிக்கூறினார்.அவரகளின் தயாவால் ஓரளவு பற்குணம் செயற்பட்டார் .சில புலிகள் பற்குணம் இராணுவத்தால் கொல்லப்படவேண்டும் என விரும்பினார்கள்.இந்த தகவல் பற்குணத்துக்கு கிடைத்தது.

மிக நம்பிக்கையான நபர்கள் மூலம் அவர்களுக்கே தெரியாமல் புலிகள் பற்றிய தகவல்களை சேகரித்து மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொண்டார்.பற்குணம் தன்னை மட்டுமல்ல உணவு திணைக்கள ஊழியர்கள்,கூட்டுறவு துறை ஊழியர்கள் எல்லோரையும் பாதுகாப்பாக இராணுவ முகாம்களுக்கு அழைத்து செல்லவேண்டிய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.இவ்வளவு சிரமங்களையும் மக்களுக்காக தனது உயிராபத்தை கருதாமல் கடமையாக ஏற்றுக் கொண்டார்.

பல ஊடகவியலாளர்கள் பற்குணத்திடம் குடாநாட்டிலும்,இராணுவ முகாம்களிலும் இவரை பேட்டி காண விரும்பியபோதும் அவர்களை புத்தி சாதுரியமாக தவிர்த்தார்.தன்னை வைத்து அரசியல் ஆதாயம் தேடினால் மக்கள் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படும் எனக் கருதியே பத்திரிகைகளைத் தவிர்த்தார் .ஆனாலும் சில பத்திரிகைகள் பற்குணம் மயிரிழையில் தப்பினார் என செய்திகள் பல தடவைகள் பிரசுரித்தனர்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)