பற்குணம் A.F.C (பகுதி 89 )

இந்திய செஞ்சிலுவை சங்க வரவைத் தொடர்ந்து இந்திய இராணுவமும் வந்திறங்கியது.உணவு விநியோகத்துக்கு பொறுப்பான அதிகாரி என்பதால் இந்திய செஞ்சிலுவை சங்கதிகாரிகள்,இந்திய இராணுவ தளபதிகள் ஆகியோரின் தொடர்புகள் மூலமாக அறிமுகங்களும் கிடைத்தன.


இந்த காலத்தில் நானும் எனது கடைசி அண்ணனும் சென்னையில் இருந்தோம்.1987 ஆவணி 23 ம் திகதி நான் மன்னார் வழியாக படகுமூலம் இல்ங்கை வந்தேன்.வந்தபின்பே என் அம்மா இறந்த தகவல் அறிந்தேன்.நான் வரும்போது இராமேஸ்வரம் கரையில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட படகு ஒன்று காற்று மழையில் சிக்கி கடலில் மூழ்கியது.அதில் சென்றவர்கள் தப்பியதாக தகவல்கள் இல்லை.இதில் பற்குணத்துடன் தம்பலகாமத்தில் தலைமை லிகிதராக பணியாற்றிய பத்மநாதன் என்பவர் மகனும் காணாமல் போனார்.எமது படகை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிலிருந்த படகோட்டி ஒருவர் மிக கவனமாக நிதானமாக கொண்டுவந்து கரை சேர்த்தார்.அப்போது இராமர்பாலம் என அழைக்கப்படும் 15 மண்திட்டுக்களை கடலில் பார்த்தேன்.சில திட்டுகளில் இறங்கி நிற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .

அம்மா இறந்தபின் பற்குணம் என்னை தன்வீட்டில் வைத்துக்கொண்டார்.இக் காலத்தில்தான் பழைய சீன கம்யூனிஸ்ட் கட்சியிரை பற்குணத்தின் வீட்டில் அடிக்கடி சந்தித்தேன்.மாதகல் கந்தசாமி,கே.ஏ.சுப்புரமணியம்,சி.கா.செந்திவேல்,தேவராசா என பலரும் வந்து போவார்கள்.

இதேவேளை புலிகளின் பரமு மூர்த்தி,செல்வரத்தினம் ,காண்டீபன்,பிரசாத்,மயூரன் என பலரும் வந்து போவார்கள். ஈரோஸ் பர்ராஜசிங்கம் ஒவ்வொரு இரவுகளும் வந்து உரையாடுவார்.அவர் தனிப்பட உரையாடும் முறை வித்தியாசமானது.உண்மையில் புலிகள்மீது அதிப்தியையே வெளிப்படுத்துவார்.

அவர்கள் நாட்டில் ஒரு கலவரத்தை உண்டுபண்ண முயன்ற விசயங்களை முன்கூட்டியே தெரிவித்தார்.புளொட் உறுப்பினர்களான ஈஸ்வரன் குழுவினர் காசியானந்தன் துணையுடன் பிரபாகரனை சந்தித்து சரண் அடைந்ததை தெரிவித்தும் பர்ராச்சிங்கமே.

அவர் சொன்ன கதைகள் யாவும் பின்னாட்களில் உண்மைகளாகின.

இந்த நாட்களில் இலங்கைக்கு முதன்முதலாக உணவுக்ள் கொண்டிவந்த செஞ்சிலுவை சங்க அதிகாரி பூரி பற்குணத்தை அடிக்கடி சந்திப்பார்.அப்போது புலிகள் மாகாண சபை நிர்வாகம் முழுவதும் தமக்கே வேண்டும் என அடம்பிடித்தனர்.அதுபற்றி அவரிடம் கேட்டபோது

தான காங்கேசந்துறையில் இருந்து யாழ்ப்பாணம் வரும் வழியில் தனது குழுவை வழிமறித்து பலர் இல்ங்கை இராணுவம் அரசு சம்பந்தமான புகார் அறிக்கை கொடுத்தார்கள் .அதில் காங்கேசந்துறையில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரே குழுக்களை சேர்ந்தவர்களே ஆள்மாறி ஆள் மகஜர் கொடுத்துள்ளனர்.அந்த வீடியோக்களை நானும் பார்த்தேன்.சகல இடங்களிலும் பொதுமக்கள் மத்தியில் அவர்கள் நின்று மாறி மாறி மகஜர்களை கையளித்தனர்.அவர் எல்லோரும் புலிப் பினாமிகள்.

இதைவிட அமையப்போகும் தங்கள் மாகாணசபையில் பற்குணத்துக்கும் இடம் உண்டு என பரமு மூர்த்தி ஒரு தடவை தெரிவித்தார்.ஆனால் பற்குணம் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என இயல்பான முறையில் நிராகரித்து பதிலளித்தார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)