பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 4)

இருவரும் கொரனா வைரசை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் வெற்றியடைவார்களா…? என்று உலகமே பார்த்திருந்த காட்டாற்று வீச்சான பரம்பல்கள் அவை. ஆனால் இவ்விரு நாடுகளும் பெரிதாக தம்மை பற்றி தம்பட்டம் அடிக்காமல் செயலில் இறங்கினர் வைரசை கட்டுப்படுத்த.

வைரஸ் பாதிப்பிற்குள்ளான பிரதேங்களை உறங்கு நிலைக்கு கொண்டு வருதல்…. மக்களை வைரஸ் தாக்கத்தின் அடிப்படையில் இனம் கண்டு தனிமைப்படுத்தல்…. பின்பு சிகிச்சை அளித்தல் என்ற மூன்று முனைத் செயற்பாடுகளையும் முழு மூச்சில் செயற்படுத்தியது சீன அரசு. இவற்றை செய்து முடிப்பதற்குரிய அரசியல் தலமையை, கட்டமைப்புக்களை சீனா கொண்டிருந்தது இதனை வெற்றிகரமாக செயற்படுத்தி முடிப்பதற்கு காரணங்களாக அமைந்தன.

பல நாடுகளைப் போல் பொருளாதாரம்…. பொருளாதாரம்… என்று மக்கள் இயங்கு நிலை மட்டுப்படுத்தலை தள்ளிப் போடாமல் அல்லது செயற்படுத்தாமல் இருக்காது மக்களுக்கான அடிப்படை வாழ்வாதரத்தை வழங்கிய வண்ணம் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தது சீன அரசு. இதனால் மக்கள் மத்தியில் அரசின் செயற்பாடுகளுக்கு அதிக வரவேற்பும் ஒத்துழைப்பும் இருந்து கொண்டே இருந்தன.

எனவே சீன அரசால் ஒரு குறிப்பிட்ட நேர..? அட்டவணைக்கு இணங்க செயற்பாட்டை வெற்றிகரமாக நகர்த்தி முடிந்தது. கூடவே பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும் உலகின் அதி சிறந்த மருத்துவ குழுவான கியூப மருத்துவ குழுவை தன்னுடன் சிகிச்சைச்சை பிரிவிற்குள் இணைத்திருந்தது. இது கொரனா பேரிடரை கட்டிற்குள் கொண்டு வருவதற்கும் மரணங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைப்பதற்கும் ஏதுவாக இருந்தன.

கியூப மருத்து குழுவை தென்கொரியா பாவிக்காவிட்டாலும் நாட்டை உறங்கு நிலைக்கு கொண்டு வந்த சீன அணுகு முறையை தவிர்த்து நடமாடும் வைரஸ் நோயாளர்களை இனம் காணும் செயற்பாடுகளை மிக.. மிக அதிகமாக வீதியெங்கும் முழுவீச்சில் செயற்படுத்தியது. தென்கொரிய இதன் மூலம் வைரஸ் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தி, மேலதிக தொற்றலை குறைத்து சிகிச்சை அளித்து கொரனாவை கட்டிற்குள் கொண்டு வந்தது.

இவ்விரு நாடுகளுக்கும் இவற்றை செய்து முடிப்பதற்குரிய பெருந்தொகையான வளங்கள்(பணம்) கையிருப்பில் இருந்த படியால் இதனை இலகுவாக செய்து முடிப்பதற்கு ஏதுவாக இருந்தன.

ஆனால் வியட்நாமின் நிலமை அப்படியல்ல. நிதி வளம் குறைந்த நாட்டில் இருப்பதைக் கொண்டு சிறப்பாக செயற்படுதல் என்ற அணுகு முறையை அவர்கள் மேற்கொண்டனர.; இதற்கு வியட்நாமின் புரட்சியின் போது கோசிமின் செயலூட்டிய அணுகு முறை அனுபவங்கள் பெரிதும் உதவின.

1970 களில் அமெரிக்காவுடனான போரில் அமெரிக்க நவீன ஆயுதங்களை தமது சமயோசித செயற்பாடுகள் மூலம் எதிர் கொண்டு அமெரிக்க உறங்கு வனூர்திகளை மண் கவ்வ வைத்தனர். சிறப்பாக அமெரிக்க சுடுகலன் பொருத்திய ஹெலிகொப்ரர் ஒன்றை வெறும் ‘அம்பும் வில்லு” வகையான ஆயுதங்களை கொண்டு ஹெலிகொப்ரரின் சுடு குழலுக்கு எதிரான வால் பகுதியின் பக்கம் மாறி மாறி நின்று அமெரிக்க படைகளை வெற்றி கொண்ட விடயங்களை இந்த போரின் வரலாற்றுப் பக்கங்களில் காண முடியும்.

இயல்பில் இருக்கும் வளங்களுக்குள் சிறப்பாக வாழும் மன நிலைக்கு பழக்கப்பட்டவர்கள் வியட்நாம் மக்கள். அரசு இந்த அனுபவங்களையே கையில் எடுத்தது கொரானா கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு. தமது குறைவான (வளம்)நிதியை வைத்துக் கொண்டு எவ்வாறு செயற்படுதல் என்ற அணுகுமுறையின் வடிவங்களை அவர் மேற் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களின் செயற்பாட்டை ஆழமாக பார்த்தால் உணரந்து கொள்ள முடியும்.

ஒரு எண்ணிக்கை கூட அறியப்படாத நிலையில் தமது வைரஸ் தொற்றாளர்களை தேடி தனிமைப்படுத்தும் செயற்பாட்டை முடுகிவிட்டிருந்தனர். இந்த தொற்றாளர்களை இனம் காணல் ஐந்து அடுக்குவரை நீண்டது. இதனாலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் மட்டுப்படுத்தி தொற்றாளர்களிடம் இருந்து மேலும் பெருகாமல் இருப்பதற்குரிய திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தி வெற்றியும் கண்டனர்.

எனவே பணம் இல்லை… வளம் இல்லை என்பது எல்லாம் பிரதான காரணமா…? என்றால் இல்லை என்பதே பதில். மக்கள் நலன்களை முன்னிறுத்தி முதலாளித்து பொருளாதார நலன்களை பின் தள்ளி இருக்கும் வளங்களுடன் சிறப்பான திட்டமிடலுடன் உரிய காலத்தில் செயற்படத் தொடங்கினால் ஆனானப்பட்ட அமெரிக்கா கூட இந்த வைரசை கட்டிற்குள் வெறும் 1000 எண்ணிக்கையிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். இந்த கட்டுரையின் நோக்கமும் அதுவே.

இனியாவது வியட்நாம் போன்ற நாடுகளின் அனுவங்களை உள்வாங்கி செயற்பட்டு இனிவரும் காலங்களில் இதுபோன்ற பேரிடர்களில் இருந்து மனித குலத்தை விடிவிப்போம்
தனியுரிமை பிரச்சினைகள் மற்றும் வியட்நாமில் வெகுஜன கண்காணிப்பு பற்றிய பெரும்பாலான கவலைகள் சர்வதேச பார்வையாளர்களிடம் தோன்றியுள்ளன. இது வியட்நாமில் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு குறித்த மாறுபட்ட பார்வையை உலக அரங்கில் ஏற்படுத்தியும் இருக்கின்றது,

தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தரவுகளை முடிந்தளவில் இரகசியம் பேணி வட அமெரிக நாடுகளான கனடாவும், அமெரிக்காவும் செயற்படுவார்களானால் வியட்நாமின் கொரானை கட்டுப்படுத்தல் முறமை கையாண்டு இருப்பார்களானால் இவ்வளவு பேரிடர்களை இவ் இரு நாடுகளும் சந்தித்திருக்க மாட்டார்கள்.

தற்போது கனடிய அரசு வைரஸ் தொற்று அதிகமாக உள்ள ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் வைரஸ் தொற்றாளர்களின் தொடர்புகளை பேண புளுருத், ஜிபிஎஸ் தொழில் நுட்பங்களை வியட்நாமை போல் பாவிக்கலாமா..? என்று தொழல் நுட்ப வல்லுனர்களுடனும் தனி நபர் தகவல் பாதுகாப்பாளர்கள் மட்டத்திலும் பேசி வருவதாக அறிய முடிகின்றது.

வியட்நாமின் தகவல் அறிதல், தகவல்களை சேகரித்தல், மக்களுக்கு பிகரங்கப்படுத்தல் மேலும் தொற்றாளர்களின் தடமறிதல் போன்றவை பேரிடர் காலத்து விசேட அணுகு முறையின் கீழ் அனுமதிகப்படுமாயின் வைரசின் பரம்பலை வேகமாக கட்டுப்படுத்த முடியும். கூடவே அரசுகள் கூறும் பொருளாதாரத்தையும் இயங்கு நிலையிற்கு கொண்டு வர முடியும். இவர்கள் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட இதே மாதிரியான செயற்பாடுகளை இந்தியாவின் கேரள மாநிலம் தன்னகத்தே கொண்டு செயற்பட்டது இந்திய அளவில் ஏன் உலக அளவில் இன்று கேரளாவின் கொரனா தடுப்பு செயற்பாடுகள் பாராட்டிற்கும் வெற்றியை பெறுவதற்கும் ஏதுவாக அமைந்திருக்கின்றதை இங்கு ககூடுதல் தகவலாக பதிவு செய்கின்றேன்.

கோவிட் – 19 பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் வெற்றிகளை விட வியட்நாமின் வெற்றி தனித்துவமானது. செலவுச் சுருக்கமானது. இதனை ஒரு சிறந்த முன் மாதிரியாக நாடுகள் பின்பற்றி தத்தமது நாடுகளுக்குரிய வகையில் திட்டமிட்டு செயற்படுத்தி மனித குலத்தை காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்.
(நிறைவுற்றது)

உசாத்துணை:
How Vietnam is Winning its War Against COVID-19
(Published:Apr. 6, 2020)
Author:To Trieu Hai (Tracy) Ly