பாலகுமார்

மிகவும் நல்ல மனிதர் தனிப்பட்ட முறையில் என்றால்….? எப்படி புலிகளுடன் இணைந்து அவர்கள் செய்த ஜனநாயக மறுப்புக்களுக்கும் பாசிச செயற்பாடுகளுக்கும் துணை போய் இதற்கான நியாயங்களையும் செய்து கொண்டிருந்தார். சரி புலிகள் மட்டும் தான் களத்தில் நின்று போராடினார்கள் (மற்றவர்களைப் போராட விடாமல் புலிகள் தடுத்தார்கள் என்பதை துப்பியல் நிகழ்வாக எடுத்தாலும்) இந்நிலையில் அவரால் என்ன செய்ய முடியும் போராடுபவர்களுடன் இணந்து தனது உயிரையும் காப்பாற்றி ‘போராடினார் என்று ஒரு வாதத்திற்கு வைத்தாலும்…. ஈழவிடுதலை அமைப்புக்கள் உருவாக்கிய முதல் ஐக்கிய முன்னணி ஈழத் தேசிய விடுதலை முன்னணி(ENLF)யில் புலிகள் இணைந்த பின்பு அவர்களின் பக்கமே நின்று மாற்று இயக்கங்களை புலிகள் அழிக்க முற்பட்ட போதும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பான கால கட்டங்களில் சகல அமைப்புகளும் மீண்டும் செயற்படக் கூடிய ஜனநாயக சூழலிலும் புலிகளின் உளவு அமைப்பாகவும் செயற்பட்டு புலிகளை மட்டும் வளர்த்துவிட ஏன் செயற்பட்டார்.

முற்று முழுதாக ஒரு வலசாரி செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பலம் பெற ஒழைத்ததில் இவருக்கும் எந்த வகையிலும் குறைந்த பங்களிப்பு கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் முள்ளிவாய்கால் வரை மக்களை அழைத்து சென்று இன்னொரு மிருகத்திடம் மக்களைப் பலிகொடுத்ததில் இவருக்கும் சம அளவில் பங்குண்டு எளிமை சாதாரணமானவர் அல்ல இவர் ஈழவிடுதலைப் போராட்டதின் தோல்விக்கும் பல ஆயிரம் படுகொலைக்கும் காரணமானவர் இவர்.

தனிபட்ட முறையிலும் இவருடன் பழகி இருக்கின்றேன் விநாடிக்கு விநாடி பலர் முன்னிலையிலும் ‘தூஷணம்’ கலந்த வார்த்தை பிரயோகங்களை பாவித்து கதைப்பது இவரின் பழக்கம் இவருடன் பழகியவர்கள் பலரும் இதனை அறிவர் இது 1986 வரைக்கும் இதன் பின்பு யாருக்காவது பயந்து நிறுத்தனாரோ தெரியாது. ஆனாலும் இவரை நான் கருத்தியல் ரீதியிலேயே முரண்படுகின்றேன். மாறாக இவரைப் போல் மாற்றுக் கருத்தாளர்களை கொன்றொழிக்கும் கூட்டத்தின் பின்னால் நின்று அவர்களை நியயாயப்படுத்தும் செயற்பாட்டின் கூடாக அல்ல. 2005 ம் ஆண்டளவில் இவரின் முன்னாள் சகாவின் பிள்ளைகள் வன்னிக் காட்டில் இவரைச் சந்தித்த போது புலிகள் செய்யும் மாற்றுக் கருத்தாளர்கள் கொலைபற்றி பிரஸ்தாபித்த போது ‘அமெரிக்கா இப்படிச் செய்தால் கேள்ளவி கேடபீர்களா’ என்று’மறு கேள்வியை பதிலாக கொடுத்தவர் இவர்.

புலோலி வங்கி கொள்ளையும் இதனைத் தொடரந்த கைதுகளும் அங்கு வேலை செய்த பாலகுமாரை விடுதலை அமைப்பிற்குள் புறநிலையில் இருந்து தள்ளி இழுந்து வந்திருக்குமோ என்பது எனக்குள் கேள்விகளாக இருக்கின்றது குறிப்பாக புலிகளின் சேர்ந்தியங்கி அவரகளின் சகல தவறுககளுக்கும் மதி உரைஞராக செயற்பட்டவிதம் இந்த சந்தேகத்தை எனக்குள் வலுப்படுத்துகின்றது தனிப்பட்ட முறையில் நல்வர் ஆனால் சமூகத்தின் எழுச்சியை நாசப்படுத்தியவர். இங்கும் முரண்பாடுதான்…?

(Saakaran) (Dec 09, 2017)