பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

(கே. சஞ்சயன்)
இந்திய அரசாங்கத்தால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு, கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள், தமது நிலைப்பாட்டுக்கு கூறுகின்ற முக்கியமான இரண்டு காரணங்களில் ஒன்று, இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும். அடுத்தது, முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும்.