பிரித்தானியா, ஐரோப்பாவை இலக்கு வைத்துள்ள ISஇன் உறங்கும் செயற்பாட்டாளர்கள்

“இஸ்லாமிய அரசு” எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, புதிய முறைகளைப் பயன்படுத்தி, பிரித்தானியா மற்றும் ஐரோப்பா மீது தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக, பிரித்தானியாவின் MI5 புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு, பிரித்தானியாவிலிருந்து தப்பிச் சென்று, சிரியாவில் இஸ்லாமிய அரசுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஜிஹாட் ஜோன் என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்றும், புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.