பீஜிங்கின் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை

இலங்கையின் தற்போதைய நிலைமையை கண்டுகொண்ட நாடுகளில், பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மீதான கரிசனையை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்தியா மட்டுமன்றி, தமிழ்நாடும் தனியாக உதவிகளை வாரி வழங்கியுள்ளது.