புலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும்

(க. அகரன்)

உலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும் ஓர் அழகிய தீவு என்றால் அது இலங்கையாகத்தான் இருக்கமுடியும். நீண்ட யுத்தத்தைக் கண்டு, அதன் ஓய்வுக்குப் பின்னர், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சந்தர்ப்பத்தில், ஏற்றுக்கொள்ள முடியாததும் நம்பமுடியாததுமான தாக்கத்துக்கு மீண்டும் சென்றுள்ளது நாடு.