புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும்

(எம். எஸ். எம் ஐயூப்)

இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின் மீதான தடையை நீக்கியுள்ளன. கடந்த வாரம் இரண்டாவது முறையாக, அவ்வமைப்புகள் மீதான தடையை, அரசாங்கம் நீக்கியுள்ளது.