புலிகளின் பாசிச ஆட்சிக்காலத்தில் ‘ஆய்வாளர்கள்’

புலிகளின் பாசிச ஆட்சிக்காலத்தில் புலிகளை அண்டிப்பிழைத்த பல “ஆய்வாளர்கள்” இருந்தார்கள். இவர்கள் ஆய்வாளர்கள் என்பதைவிட புலிப்பாசிசத்தை நியாயப்படுத்திய புலிப்பாசிச கோட்பாட்டாளர்கள் என்பதே பொருத்தமானது. ‘மதியுரைஞர்’ அன்ரன் பாலசிங்கம் இவர்களில் முதன்மையானவர். அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர்தான் மு.திருநாவுக்கரசு. இந்த மதியுரைஞர் என்ற ‘முடிக்குரிய’ பதவிக்கு மூன்றாவது இளவரசன் தராகி சிவராமா அல்லது நிலாந்தனா என்பதில் அரண்மனை வட்டாரங்களில் முடிவுசெய்யப்பட்டிருக்கவில்லை. மாமன்னர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் ஆங்கிலப்புலமை மதியுரைஞருக்கு போட்டிபோடுபவர்களுக்கு அடிப்படைத்தகுதி.

இதனால் கவிஞர்களான புதுவை ரத்னதுரை, கருணாகரன் போன்றவர்கள் இளவரசர்களாகமுடியுதிருக்க மதியுரைஞர் முடிக்குரிய இளவரசர்களில் கடைநிலைகளில் ஈரோஸ் பாலகுமாரன், எஸ்.சிவநாயகம், கவிஞர் சேரன் என ஒரு பட்டாளமே இருந்தது. ஆக இந்த “ஆய்வாளர்” என்பது ஒரு அரண்மனை உத்தியோகபூர்வ பதவியே தவிர மேலைத்தேசங்களில் பயன்படுத்தப்படும் Researcher/Academic/ social scientist என்ற அர்த்தம்கொண்ட தமிழ் சொல் அல்ல என்பதை தமிழர்கள் விளங்கவேண்டும்.
துரதிஷ்டவசமாக 2ம் சோழ சாம்ராஜ்யம் 2009 ல் அழிந்தது. மாமன்னரோடு மண்டையைப்போடாமல் இளவரசர்கள் ஓடித்தப்பிவிட்டார்கள். இந்த இளவரசர்கள் இப்போது சாம்ராஜ்யம் அழிந்ததை ஏற்றுக்கொள்ள தயாரில்லாததால் ஒரு Virtual Reality மாய உலகில்வாழ்கிறார்கள். சித்த சுவாதீனம் உள்ளவர்களில் கள்ளர்களையும் காமுகர்களுயுமே தங்களது நாடக பாத்திரங்களாக இளவரசர்களான திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்றவர்களால் பயன்படுத்தமுடிகிறது.
இதனால்தான் அருந்தாகரன், கே.ரீ கணேசலிங்கம் முதலமைச்சர் விக்கி போன்றவர்கள் நாளைய நாடகத்தில் மேடையேறுகிறார்கள்.

ஒரேயொரு விதிவிலக்கு குட்டி “இளவரசனான” குருபரன் குமாரவடிவேல். இதுவொரு Virtual Reality நாடகம் என்பதோ அல்லது தான் ஒரு இளவரசன் என்பதோ ‘இளவரசன்’ குமார வடிவேலுக்கு தெரியாது. இளங்கன்று பயம் அறியாது மட்டுமல்ல Game ம் அறியாதது.
கொழும்பு பல்கலைக்கழகத்திலும் லண்டன் சீமை பிரசித்தமான பல்கலைக்கழகங்களிலும் பயின்ற குட்டி இளவரசன் குமாரவடிவேல் கீழே தரப்படுகின்ற ஆவணப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசுவின் ஆய்வு மோசடிகளை படித்தறிந்து நாளைய புத்தக ஆய்வுக்கு செல்லவேண்டும். கூடவே பின்வரும் கேள்விக்கும் குருபரன் பதில்தரவேண்டும்.

1. புலிகளின் காலத்தில் தொடர்ச்சியாக அரசியல் விமர்சகர்களாக இருந்த இப்போதும் யாழ் பல்கலைக்கழகத்தோடு தொடர்பாக இருக்கிற ராஜன் ஹுல், தயா சோமசுந்தரம் முதலிய விமர்சகர்கள் ஆய்வாளர்களை தவிர்த்து குற்றப்பின்னணிகளும் மோசடிகளும் நிறைந்த அருந்தாகரன், கே.ரீ.கணேசலிங்கன் போன்றவர்கள் இந்நூலை ஆராய அழைக்கப்படுவதேன்?
யேசு நாதரையும் பிரேமானந்தாவோடு ஒத்தவராக ஒப்பிட்ட முன்னைநாள் நீதிபதியான விக்னேஸ்வரன் ஒரு மாநில முதல்வராக இருக்குமளவுக்கு சித்த சுவாதீனம் உள்ளவரா?

திருநாவுக்கரசுவின் ஆய்வுமோசடி 01
By Chinniah Rajeshkumar

“அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்களை மு. திரு நாவுக்கரசு தமிழ்வின் என்ற செத்தவீட்டு இணையத்தளத்தில் தனது வழமையான ‘ஆய்வு’ கட்டுரையாக பதிவுசெய்துள்ளார். புலிகளுக்கு இறுதிவரையும் வக்காத்து வாங்கி புலிகளும் மக்களும் அழிந்து போய்க்கொண்டிருந்த இறுதிக்காலகட்டத்தில் இந்தியா தப்பிப்போன திரு நா இப்படி ஒரு திருகு தாளம் விடுகிறார். சுட்டவனும் இல்லை சுடச்சொன்னவனும் இல்லை சுடப்பட்டவரும் இல்லை என்பதால் எதையும் எழுதலாம் என்ற மனப்பிறழ்வு கொண்ட மனிதன் தான் இதை செய்யமுடியும். முருகவேள் என்ற பாத்திரம் இதற்கு உருவாக்கப்படுகிறது. அவர் தான் கதைசொல்லி .1981 மாவட்ட அபிவிருத்தி தேர்தலில் கூட்டணி தமிழீழம் கைவிட்டு துரோகத்தனமாக பங்குகொள்ள முடிவெடுத்ததற்கு துரோகத்திற்கான பரிசாக அமிரை புலிகள் கொல்ல முடிவெடுக்கிறார்களாம். இது முருகவேளுக்குஎப்படியோ தெரிந்து விட்டதாம் . உடனே அவர் பிரபாகரனையும் மாத்தயாவையும் சந்தித்து அது தவறு. அமிரை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துவதே வெற்றி என கூற யாருடைய பேச்சையும் கேக்காத பிரபாகரன் முருகவேள் பேச்சை கேட்டு கொலை செய்வதை கைவிட்டாராம் . பின்னர் அமிர் கொலை செய்யப்பட்டவுடன் மாத்தயாவை முருகவேள் சந்தித்து ஏன் கொலை செய்தீர்களென கேட்க உடனே மாத்தயா ஏ ஜே வில்சன் எழுதிய ஆங்கிலப்புத்தகத்தை உருவி எடுத்து கரெக்டாக ஒரு பக்கத்தை காட்டி பாருங்க அவர் செய்த துரோகத்தை. ஜே ஆர் ஜனாதிபதியாக வருவதற்காக கூட்டணி போட்டியிடுவதில்லை என கள்ள ஒப்பந்தம் . துரோகத்திற்கு பரிசு என்றாராம். மாத்தையா ஆங்கிலப்புலமை அற்றவர் என்பது ஒரு புறமிருக்க இந்த பொய்த்தகவல் எழுதிய திரு நாவின் ஆய்வு இன்றைய தமிழ் அரசியலின் குறியீடு.”

திருநாவுக்கரசுவின் ஆய்வுமோசடி 02.
By Riyas Qurana

“பூகோளவாதம் – புதிய தேசிய வாதம் – நுால் வெளியீடு.

இந்த நிகழ்விற்கு தமிழ்தேசிய கடும்போக்கு வாதத்தை நினைவில் சுமந்தலையும், வடக்கு முதலமைச்சர் விக்னேஷ்வரன் தலைமையேற்கிறார்.

மு.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது.

திருநாவுக்கரசு அவர்களின் எழுத்தின்மீது எனக்கு ஆர்வம் மிகக் குறைவு. ஏனெனில் அவர் ஒரு நேர்மையான எழுத்தாளரல்ல. அதற்கு 2008 நடந்த ஒரு சம்பவமே காரணம்.

ஆசான் எஸ்.வி. ராஜதுரை அவர்களிடம், தனது புத்தகமான ” ஒற்றை மைய உலக அரங்கில் போரும் சமாதானமும்” என்ற நுாலுக்கு முன்னுரை எழுத கேட்டிருந்தார். அதற்காக கணனி அச்சுப் பிரதியை ராஜதுரை அவர்களுக்கு அனுப்பியிருந்தார். அதில் அதிகமான எழுத்துப் பிழைகள் இருந்தன. இலக்கணப் பிழைகள் இருந்தன.

அவை அனைத்தையும் மெய்ப்புப்பார்த்து கொடுத்ததுடன், அதற்கான உரையையும் எழுதி அனுப்பியிருந்தார். அந்த உரை, திருநாவுக்கரசு கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு ஆதரவானதல்ல. அந்த நுாலை விமர்சிக்கும் வகையில் அது அமைந்திருந்தது. எனவே, இறுதிப் பக்கத்தில் அந்த உரையை பதிப்பிக்குமாறு கோரியிருந்தார் ஆசான் ராஜதுரை.

ஆனால், ராஜதுரை அவர்களின் உரையை இணைக்காமலே அந்த நுால் வெளியிடப்பட்டது. அதுமாத்திரமல்ல, ராஜதுரை பிழைகளை மெய்ப்புப்பார்த்து செய்த உதவியைக்கூட நினைவுகூரும் நேர்மையற்று அந்த நுால் வெளிவந்திருந்தது.

இரண்டாவது பதிப்பிலேயே அதற்காக மன்னிப்பு கோரியிருந்தார்கள். எனினும், ராஜதுரையின் உரை இணைததுக்கொள்ளப்படவே இல்லை.

இப்படி விமர்சனங்களை உதாசீனம் செய்யும் ஒரு எழுத்தாளரின் நுால்களை நானும் பொருட்படுத்துவதே இல்லை. எழுத்தாளருக்கு தேவையான முக்கியமான விசயம் விமர்சனங்களை சகித்து எதிர்கொள்ளும் நேர்மைதான் என்று நான் நினைக்கிறேன்.”

#மூன்றாவது #ஆவணம்.
திருநாவுக்கரசு புலிகளின் அனுதாபியாக உதவியாளராக முகவராக புலிகளுக்கு தகவல் கொடுப்பவராகவும் Dr. Rajini திராணகம கொலையின் முன் பின் இவருக்கு இருக்கக்கூடிய பங்களிப்பு Rajan Hoole ன் Palmyrah Fallen இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

(Arun Ambalavaanar)