புலிகள் இயக்க மாவீரர்கள் பற்றி பார்வை….

1986 இலிருந்து புலிகள் மற்ற இயக்கங்களை அழித்து பாசிச ஆட்சி எடுத்தபின்னர் புலிகளில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் (75மூ) 13 க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வுநநயெபநச பாடசாலை மாணவர்கள். அதாவது குழந்தைப்போராளிகள். குடும்பத்தில் பாரபட்சம் காட்டப்பட்ட சிறாரும் சாதிய சமூகத்தால் பாரபட்சம் காட்டப்பட்ட தலித்தினரும் காதற் தோல்வி முதலிய பதின்மவயதுப்பிரச்சனைகளால் தற்கொலை மனநிலையோடு பாதிக்கப்பட்டோருமே இந்த பதின்ம பருவத்தில் புலிகளில் இணைந்தோரில் பெரும்பாலானவர்கள்.

ஒரு மகத்தான இலட்சியத்துக்காக தங்களை தியாகம் செய்ய அதுபற்றிய பரிபூரணமான புரிதலோடு தயாராபவர்களையே போராளிகளாக ஏற்கமுடியும். பிரபாகரன் என்கிற தனிமனிதனின் நலனுக்காக சிக்கலான பதின்மவயதுப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பாசிச பிரச்சாரத்தால் வசியம் செய்யப்பட்டுஇ ஐனெழஉவசiயெவழைn – சித்தாந்த மூளைச்சலவை – செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டதுதான் எங்கள் பெரும்பாலான மாவீரர்களின் அவல வரலாறு. இவ்வகையில் புலிகளியக்க மாவீரர்கள் எதிரிகளாலன்று தமது குடும்பத்தாலும் சமூகத்தாலும் பிரபாகரனாலும் அபிமன்யுவைவிட மோசமாக வஞ்சிக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள்.
-நட்சத்திரன் செவ்விந்தியன்

மிகச்சரியான பார்வை. மேலும் இவர்கள் தொடர்ந்து ‘விடுதலை’ப் பாதையில் தமது அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையான வாசிப்புக்குள் கருத்தறிதல் போன்றவற்றை முழுமையாக தடை செய்து வைத்திருந்த இயக்க ‘ஒழுக்கம்’ ஐ புலிகள் தமது அமைப்பிற்குள் அமைத்திருந்தனர். இதனை இயக்கக் ;கட்டுப்பாடு’ என்றும் ‘புனிதம்’ என்றும் உரைத்திருந்தனர். இதிலிருந்து உருவானதுதான் ‘புனிதப் போராளிகள்’ மறுவளத்தில் உள்ளவர்கள் துரோகி என்ற சொல்லாடலும். தம்மைத் தவிர வேறு அமைப்புகள் இந்த விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்த குழந்தைகளுக்கு அறியாமலே வைத்திருந்தனர் இது ஒரு வகையில் இதே பதின்ம வயது ஈழத்து தமிழ் இளைஞர்களுக்கும் பொருந்தியே இருக்கின்றது
– சாகரன்