புலி ஆதரவாளர்கள் தயவு செய்து இதை கண்டிப்பாக படிக்கவும்

குறிப்பாக hounslow boys (மன்னிக்கவும் உங்கள் பெயரை hounslow ladies என்று மாற்றினால் தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்)
30/ 03/ 87 அப்படி என்னதான் நடந்தது,ஒன்றும் இல்லை புலிகள் சக போராளிகளை டயர் போட்டு கொளுத்தி பார்த்தார்கள், கொஞ்சப்பேரை சுட்டுப்பர்த்தர்கள்.

எப்படி துடி துடித்து சாகிறார்கள் என்று?

இதற்குப்பெயர்தான் கந்தன் கருணை இல்லம். புலிகள் அமைப்பினர் சக இயக்கப் போராளிகளை கைதிகளாக அடைத்து வைத்திருந்த இடம். நல்லூர் பின் வீதியில் இருந்த கந்தன் கருணை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் அங்கிருந்து யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள இடமொன்றிற்கு மாற்றப்பட்டிருந்தனர். இடம் மாறிச்சென்று ஒரு வார காலத்திற்குள் தமிழர் வாழும் பிரதேசங்களெங்கும் அதிர்ச்சிதரும் அவலச்செய்தி பரவியது. புலிகளால் சிறைப்பிடிக்கப் பட்ட சக இயக்கப் போராளிகள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என 60 பேர்கள் யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் இருந்த புலிகளின் சிறையில் வைத்து புலிகளாலேயே கொல்லப்பட்டதுதான் அந்தச்செய்தி.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் இருந்த கிறவுண் பேக்கறி உரிமையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த தவராஜா யாழ் லலிதா நகை மாளிகை உரிமையாளர் அந்த சிறை படுகொலையில் கொல்லப்பட்டிருந்தார்கள். புலிகளின் வதைமுகாமில் கொல்லப்பட்டவர்களில் ஈஸவரனும் ஒருவர் கடந்த வாரத்தோடு ஈஸ்வரன் போன்ற ஆற்றல் மிக்க போராளிகளை இழந்து இருபது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. ஈஸ்வரன், புளொட் மென்டிஸ், கபூர், மலையகத்தைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் என குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய போராளிகளை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமானது. இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவர் பெஞ்சமின்.

யார் இந்த பெஞ்சமின்

இவர் மலையகத்தைச் சேர்ந்த ஒரு முற்போக்கு சிந்தனையாளர். துடிப்புள்ள இளைஞன். ஈ.பி.ஆர்;.எல்.எவ் அமைப்பின மருத்தவ பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். மருத்துவக் கல்லூரி மாணவன். அப்போது ஈரோஸ். ஈ.பி.ஆர்.எல்.எவ். பொன்ற அமைப்புகளில்தான் மலையக இளைஞர்கள் இணைந்திருந்திருந்தனர். அதற்கான காரணம் குறிப்பிட்ட இந்த அமைப்புகள்தான் மலையக மக்கள் குறித்தும் கருத்தில் எடுத்து செயற்பட்டிருந்தன. ஆந்த ஈர்ப்பினால் உந்தப்பட்ட ஒருவர்தான் பெஞ்சமின். ஈழப்போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒருவர் இவர். ஈழ மருத்துவ சேவை என ஒரு அம்புலன்ஸ் வண்டியை உருவாக்கி சேவை செய்து வந்தவர்.

அப்போது படைமுகாம்களில் இருந்து செல்கள் வந்து விழும். அதில் பொது மக்கள் காயமடைவார்கள். படையினரின் செல்வீச்சுக்களையும் பொருட்படுத்தாது பெஞ்சமின் தான் பெற்றிருந்த இராணுவப் பயிற்சியைப் பயன்படுத்தி ஊடுருவிச்சென்று காயப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருக்கும் மக்களைத் தனது ஈழ மருத்துவ சேவை அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுவார். ஆந்த வாகனத்திற்க உள்ளே பெஞ்சமினால் பயிற்றுவிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைப் போராளிகள் இருப்பார்கள். மருத்துவமனைகளை நோக்கி ஈழ மருத்துவ சேவை வாகனம் வேகமாகச் செல்லும். மருத்துவ மனைகளில் டாக்டர்களுக்கான பற்றாக்குறை இருப்பது வழமை. பெஞ்சமின் தானும் மருத்துவக்கல்லூரி மாணவன் என்பதால் டாக்டர்களோடு இணைந்து காயப்பட்ட மக்களைக் காப்பாற்றும் பணிகளில் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் இயங்கிக்கொண்டிருப்பார்.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் பெஞ்சமின் இருந்தபோதும் இதே போன்ற சேவையை நடத்தியிருந்தவர். கும்பகோணம் வறிய மக்களைக் கொண்ட ஒரு பிரதேசம். அங்குதான் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் பயிற்சி முகாம் இருந்தது. அப்போது அதன் தலைவர்களாக இருந்த பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் அனுசரனையோடு ஒரு இலவச மருத்துவ மனையை பெஞ்சமின் நடத்தி வந்தவர். இதனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அந்த அமைப்பின் மீதான விருப்பங்கள் அதிகரித்திருந்தது.
இவ்வாறான ஒருவர்தான பெஞசமின். இவரும் அந்த சிறையில் வைத்து கொல்லப்பட்டிருந்தார். அடுத்த ஒருவர் சின்ன மெண்டிஸ்.

யார் இந்தச் சின்ன மென்டிஸ்?
சின்ன மென்டிஸ் புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர். யாழ் உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அந்த அமைப்பின் தளத்திற்குப் பொறுப்பாகக் கொண்டவர். ஆற்றல் மிக்கவர். அரசியல் இராணுவ வழிகாட்டியாக இருக்க முடிந்தவர். புலிகளின் சிறையில் மிக மோசமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தவர். சின்ன மென்டிஸின் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டு கால்கள் அடித்து நொறுக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில்
கைகளால் ஊன்றி தவழ்ந்துதான் அவரால் எதையும் செய்ய முடிந்திருந்தது. அரச படையினரை யுத்த கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் புலிகள் அவர்களின் பெற்றோர்கள் அவர்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியினையும் அளித்து வந்திருக்கின்றனர்.

யுத்த கைதிகளாக அவர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் சிலரை விடுவித்தும் இருக்கின்றார்கள். ஆனால் புலிகள் கோருகின்ற அதே தமிழீழத்திற்காக போராடிய போராளிகளில் சின்ன மென்டிஸ_ம் ஒருவர். அவரின் பெற்றோர்கள் அவரை பார்வையிடுவதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அவரைக்கொன்று விட்டு அவர் அணிந்திருந்த மோதிரத்தை மட்டும் அவரின் பெற்றோர்களிடம் புலிகள் கொடுத்திருந்தனர்.

சின்ன மென்டிஸ் 87 தைப்பொங்கல் தினத்திற்கு முதல்நாளே கொல்லப்பட்டுவிட்டார். அவரது நினைவுநாள் தைப்பொங்கல தினத்திற்கு முதல் நாள் என்பதை உறுதியாகக் கூற முடியும்.
அடுத்த ஒருவர் கபூர்.

யார் இந்தக் கபூர்?

பாலசுப்பிரமணியம் இவரது சொந்தப்பெயர். இவரது சகோதரரான ரவி என்பவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் மாணவர் அமைப்பில் செயற்பட்டு வந்தவர். இவரும் இந்தியப்படை காலத்தில் சாதாரண குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்தபோது புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டிருந்தவர். கபூர் அந்த அமைப்பின் யாழ்.பிராந்திய படைத்தளபதியாக இருந்தவர். 83 யூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்திருந்தது இவரது குடும்பம். கொழும்பில் அந்த மாணவர் அமைப்பான ஈழ மாணவர் பொதுமன்றம் செயற்பட்டுக்கொண்டிருந்த போது கபூரின் வீடும் அவர்களுக்குத் தளமாக இருந்தது. அப்போது கொழும்பில் தங்கியிருந்து அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். கபூரின் வீட்டில் அடிக்கடி இவர்கள் சந்தித்து தீர்மானங்கள் எடுப்பது வழமை.

இதற்கு ஊடாகவே கபூர் அந்த அமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். கபூர் அவர்களும் இந்தச் சிறையில்வைத்தே கொல்லப்பட்டிருந்தார். இவரோடு சேர்த்து கொல்லப்ட்டவர்களில் ஒருவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கதிர். பூநகரி இவரது சொந்த இடம். ஈழ மாணவர் பொது மன்றத்தின் ஊடாக போராட்ட களத்தில் புகுந்தவர். மொத்தத்தமாக கொல்லப்பட்ட 60 பேர்களில் ஒருவருடைய சடலம் கூட பெற்றோரிடமோ உறவினரிடமோ புலிகள் ஒப்படைத்திருக்கவில்லை.
ஏனிந்த சிறைப் படுகொலை?
நடத்தப்பட்டது எந்த சூழலில்?

புலிகளின் யாழ் தளபதி கிட்டு ஒரு பெண்ணைக் காதலித்திருந்தார். அவர் யாழ் பல்கலைக்கழக மாணவி. போராளி ஒருவர் காதலிப்பது தவறு அல்ல. ஆனால் காதலிக்கக் கூடாது என்றும் திரமணம் முடிப்பது தவறு என்றும் புலிகள் அமைப்புத் தான் அப்போது தமது உறுப்பினர்களுக்கு கட்டளை இட்டிருந்தது. அதையும் மீறி புலிகளின் தளபதியான கிட்டு ஒரு பெண்ணை காதலித்திருந்தார். கிட்டுவின் அந்தக் காதலி வேறு ஒருவரைத் திருமணம முடித்து வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆவரின் தனிப்பட்ட நலன் கருதி அவரது பெயரை இந்தத் தொடரில் குறிப்பிட விரும்பவில்லை.

யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெரு வழியாக கிட்டு தன் காதலியைச் சந்திக்கச் செல்வது வழக்கம். அந்தச் சூழலில்தான் அவரின் காதலியும வசித்து வந்தவர். 30.03.87 அன்று தன் காதலி வீட்டிற்குக் கிட்டு சென்றிருந்தார். கிட்டுவின் கதையை முடிப்பதற்காக தாக்குதல் திட்டத்தோடு காத்திருந்தது ஒரு குழு. அந்தக்குழு யார் என்பதை பிறகு பார்க்கலாம். அவர் மீது குண்டெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டது. எதிர்பாராத விதமாக கிட்டுவின் மீது கைக்குண்டு வீசப்பட்டது. அந்த இடத்திலேயே கிட்டுவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

கிட்டு தன் காதலியிடம் சில விடயங்களை சில நாட்களின் முன்பு மனம் விட்டு பேசியிருந்தார். என் மீது எந்த உருவத்தில் யாரிடமிருந்து தாக்குதல் வருமோ தெரியாது. நீ எதற்கும் தயாராக இருக்க வேண்டும். நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. அதற்காக உன்னைச் சந்திக்காமலும் விடப்போவதில்லை. ஊன்னிடம் நான் வரும்போது எனது மெய்ப்பாதுகாவலர்கள் எல்லோரையும் அழைத்துவர முடியாது. எனது நம்பிக்கையானவர்களையே என்னால் அழைத்துவர முடியும்.
இவ்வாறு தன காதலியிடம் தொவித்திருந்தார் கிட்டு. அத்தாக்குதலின் போது கிட்டு மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். ஆனாலும் கிட்டு அத்தாக்குதலின்போது ஒரு காலை இழந்திருந்தார்.

பழி சுமத்தப்பட்ட சக இயக்கத்தவர்கள் பலியெடுக்கப்பட்டார்கள்.
இந்த விடயத்தில் ஓரு எறியில் இரண்டு மாங்காய்கள் என்ற ரீதியில் புலிகள் திட்டமிட்டு செயலாற்றி இருந்தனர். கிட்டு மீது தாக்குதல் நடத்தவது அதைச் சாட்டாக வைத்து இத்தாக்குதலுக்கான பழியை சக இயக்கங்கள் மீது சுமத்தி விட்டு தமது சிறையில் இருக்கும் சக இயக்கப் போராளிகளை கொன்றொழிப்பது.

உண்மையில் ஏனைய இயக்கங்கள் எதுவும் யாழ்ப்பாணத்தில் இயங்கியிருக்கவில்லை. சக இயக்கங்களை புலிகள் தடை செய்து அதன் போராளிகளை கொன்றொழித்து விட்டனர். எஞசிய சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியிருந்தனர். ஏனையோர் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் அங்கு அப்போதும் சக போராளிகள் பலர் தங்கியிருந்தது உண்மைதான். ஆனாலும் அனைவரின் மீதும் புலிகளின் புலனாய்வு மொய்த்தபடி இருந்துது. ஆகவே சக இயக்கத்தவர்கள் யாரும் கிட்டு மீதான தாக்குதலை நடத்தியிருக்க மாட்டார்கள் என்பது மக்களுக்குத் தெரிந்த உண்மையாக இருந்தது. அப்போது புலிகளின் தளபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளான பொதுமக்கள் போராளிகள் உட்பட 60 பேர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததாகச் செய்திகள் பரவத்தொடங்கின.

அந்தச் சிறையில் இருந்தவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் புலிகளிடம் சென்று கொல்லப்பட்டவர்களின் சடலங்களையாவது தாருங்கள் என கேட்டிருந்தனர். புலிகள் கொடுக்கவில்லை.
மக்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பலைகளை திசை திருப்பி விடுவதற்காக அருணா மீது பழி சுமத்தினார்கள் புலிகள். அருணா திடீரென மனநோய் பாதிக்கப்பட்டு அந்த தாக்கத்தினால் இந்தக் காரியத்தில் ஈடுபட்டதாக புலிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த அருணா இந்தியப்படை காலத்தில் யாழ் குருசோ விதியில் வைத்து சுற்றிவளைப்பின்போது இந்தியப்படையினரால் கொல்லப்பட்டிருந்தார்.

ஏன் கிட்டு மீதான தாக்குதல் நடத்தப்பட்டது?

அப்போது கிட்டு யாழ் மக்களிடம் ஒரு ஹீரோவாக தோற்றம் பெற்றிருந்தார். புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற உண்மைக்கு அப்பால் கிட்டுதான் அதன் தலைவர் என்பது போன்ற மாயை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இது புலிகளின் ஏனைய தலைமை மட்டத்தினருக்கு பிடிக்கவில்லை. பிரபாகரனுக்கும் இது விருப்பமற்ற ஒன்றாகவே இருந்தது. அதற்காகவே கிட்டுவை ஒழத்துக் கட்டுவதுதான் புலிகளின் திட்டமாக இருந்தது. ஆனாலும் மாற்று இயக்கங்களை தாம் திட்டமிட்டது போல் திறம்பட தடை செய்த முடித்த பெருமை கிட்டுவையே சாரும் என்பது பிரபாரனின் கருத்து.

போர் என்றால் மனிதர்கள் இறப்பது வழமை என்று சொன்ன புலிகளை இப்போ காணோம். புலிகள் தமிழர்களைக் கொல்லும் போது “துரோகிகள் ” கொல்லப்பட்டார்கள் என்று உபதேசம் செய்தார்கள். குண்டு வெடிப்பிக்களில் மக்கள் கொல்லப்பட்ட போது “மக்களின் உயிரிழப்புக்கள் ” போராட்டத்தை வீறு கொள்ளச் செய்யும் என்றார்கள்.. இப்படியெல்லாம் புலிகளின் கொலைகளையும், புலி காலத்து மரணங்களையும் நியாயப்படுத்தியவர்கள் புலிகளை அடியோடு அழித்த போது “மனித உரிமை ” என்று ஊழையிடுகிரார்கள். ஆனாலும் ஒரு தமாஷான விஷயம் இருக்கிறது. இறுதி யுத்தத்தில் இறந்து போன பொது மக்களின் எண்ணிக்கையை சொல்லும் புலி வால்களான பாதிரி ராயப்பன், மற்றும் பலரும் செத்த புலிகள் எத்தனை பேர் என்று இது வரை சொல்லவில்லை. செத்தொப்போன புலிகளின் எண்ணிக்கையை எப்போது சொல்லுவார்கள்.?

நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம்வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம். பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம். அரச ஆதரவாளர்கள், இலங்கை இராணுவம் இந்திய இராணுவம், பொலிசாருடன் உறவுகளைப் பேணியவர்களைக் கொன்றோம். அயல்நாட்டில் தலைவரைக் கொன்றோம், அவருடன் அப்பாவிகளைக் கொன்றோம். சரணடைந்த படையினர் பொலிசாரைக் கொன்றோம். அரசியல்வாதிகள், மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் கொன்றோம். எங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு எங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் நாம் கொன்றோம். எங்களைக் கேள்வி கேட்டவர்களையும் கொன்றோம். வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொன்றோம். எங்களுடமிருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொன்றோம். சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொன்றோம், எங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொன்றோம். விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள், பஸ்கள், மதவழிபாட்டு ஸ்தலங்கள், சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளைக் கொன்றோம். குழந்தைகளைக் கொன்றோம், பெண்களைக் கொன்றோம்,கர்ப்பிணிகளையும் கொன்றோம். முதியவர்களைக் கொன்றோம். எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொன்றோம்.. மகிந்தாவுக்கு மாலை போட்ட குருக்களையும் கொன்றோம். காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் போராட்டம்.

ஆனால் நாங்கள் தோல்வியடையும்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைவோம். எங்களை யாரும் கொன்றால் அது போர்க்குற்றம், மனித உரிமை மீறல். ஐ நாவில் நடேசனின் மனைவி கதறுகிறார். புலித்தேவனின் மனைவி கதறுகிறார், மலரவனின் மனைவி கதறுகிறார். நடேசனின் மகன் கண் கலங்குகிறார். இவர்கள் கதறுவதைப் பார்த்து ஐ நாவே கலங்குகிறதாம். யார் இவர்கள்? தமிழ் மக்களின் பேரழிவிற்குப் பொறுப்பானவர்களின் மனைவி மார்களும் பிள்ளையும். வன்னிக்குள் வரும் இராணுவத்தைக் கரும்புலிகள் கவனித்துக் கொள்வார்கள். இதைச் சொன்னவர் நடேசன். கரும்புலிகள் நடேசனின் பிள்ளைகள் அல்ல. அது யாரோ ஏழை எளியதுகளின் பிள்ளைகள்.

நடேசனின் மகன் இங்கிலாந்தில் வாழுகிறார். நடேசனுக்குப் பிள்ளைப் பாசம் இருக்கிறது. எழிலன், புலித்தேவன், நடேசன், மலரவன் ஆகியோரின் மனைவிமார்களுக்கு கணவன்கள் மேல் பாசம் இருக்கிறது. ஆனால் இவர்களால் எத்தனை பெண்கள் விதவையானார்கள்? எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்தார்கள்? எத்தனை பிள்ளைகள் அனாதைகள் ஆனார்கள்? இறுதி யுத்தத்தின்போது பிள்ளைகளைக் கடத்தியதில் புலித்தேவனுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியாத இவர்கள் எதற்கு யுத்தம் புரிந்தார்கள்? எதிரி பொல்லாதவன் எதிரியிடம் உயிருடன் சரணடையக்கூடாது என்று இயக்க உறுப்பினர்களுக்கு கட்டளையிட்ட இந்தத் தலைமைகள் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க எதிரியிடம் சரணடைந்தார்கள்.

புலிகளால் கடத்தப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளையும் அழைத்து வந்து ஐ நாவில் அழவிடுங்கள். அப்படிச் செய்வதாயின் ஐ நாவின் உள்ளேயும் வெளியேயும் இடம் போதாது. அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம் வரை புலிகள் கொன்றவர்களின் குடும்பங்களை ஜெனீவா அழைத்து வாருங்கள்.. இலங்கை இராணுவம் எறிகணைகளை வீசியது, குண்டுகளை வீசியது. புலிகள் பதிலுக்கு மலர்களையா தூவினார்கள். புலிகள் தாக்குதல் நடத்தாமல் இராணுவம் மட்டும் தாக்கியதா? இராணுவத் தரப்பில் அழிவுகள் இருக்கவில்லலயா? தங்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய புலித் தலைமைகள் தங்களிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடையும்போது அவர்களை மன்னித்து கடவுச்சீட்டு,விசா எல்லாம் பெற்றுக்கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் என்று புலித்தலைமைகள் எதிர்பார்த்ததா? புலிகள் தங்களால் இயலாத கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடையும் போது இலங்கை அரசோ ,இராணுவமோ புலிகள் கடந்த காலங்களில் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகளை மறந்துவிடுவார்களா?

புலிகள் இந்தியாவுக்குச் செய்த துரோகத்தைவிட இந்தியா ஒன்றும் புலிகளுக்குத் துரோகம் இழைக்கவில்ல. இந்திய இலங்கை ஒப்பந்தம் புலிகளுக்குத் திருப்தி அழிக்கவில்லை. விளைவு நூற்றுக்கணக்கான தமிழ் மக்களுக்கு உயிரழிவையும் பொருளழிவையும், தமிழ்ப்பெண்கள் மானமிழக்கவும் வழியை ஏற்படுத்திக் கொடுத்தது.

பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தையும் திருப்தி அழிக்கவில்லை. மீண்டும் யுத்தம் ஆரம்பித்து வலிகாமம் வடக்கு மக்களை அவர்களின் பூர்வீக வசிப்பிடங்களிலிருந்து துரத்த வைத்தது

சந்திரிகாவின் தீர்வுத் திட்டமும் புலிகளுக்குத் திருப்தி அழிக்கவில்லை! விளைவு குடாநாட்டிலிருந்து தமிழ் மக்களை விரட்டி வன்னிக் காடுமேடெல்லாம் அலைய வைத்தது.

ரணில் காலத்தில் சமாதன ஒப்பந்தமும் புலிகளுக்குத் திருப்தி அழிக்கவில்லை. ஒரு புறம் சமாதானம் பேசிக்கொண்டு ஆயுதங்களைக் கடத்திக் கொண்டும் நூற்றுக்கணக்கான நூற்றுக்கணக்கான அரசியல் படுகொலைகளைப் புலிகள் நாடு பூராவும் செய்தார்கள்.

மகிந்த அரசிடம் புலிகளின் நாடகம் எடுபடவில்லை. விளைவு சிங்களம் எதிரியென்று சொன்ன புலித்தலைமைகள் ஒரு வலிந்த யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டு தங்கள் உயிர்களை மட்டும் பாதுகாக்க சிங்களத்தின் காலில் வெள்ளைக் கொடியுடன் வீழ்ந்தது.

தீர்வுத் திட்ட வரைபை செய்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தையே புலிகள் தற்கொலைத் தாக்குதல்மூலம் கொலை செய்தவர்கள். இப்போது சுயநலம் கொண்ட புலித் தலைமகளின் மனைவி மார்கள் ஐ நா வரை சென்று புலம்பினாலும் புலிகள் செய்த மனித குல விரோதச் செயல்களை உலகம் அறிந்துள்ளவரை இவர்கள் மேல் எந்தவித அனுதாபத்தையும் பெற்றுக் கொடுக்காது. நவநீதம்பிள்ளையே புலிகளின் பயங்கரவாதத்தை தெளிவாக அறிந்தவர். இந்த லங்காசிறி அரசியலால் உலகை ஏமாற்ற முடியாது.

(சுந்தர சரவணன்)