பொசன் ‘அரசியல்” கைதிகள் விடுதலையும் அதன் அதிர்வலைகளும்

அந்த வகையில் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த ஆரம்ப காலங்களில் இடதுசாரி செயற்பாட்டை அதிகம் தனக்குள் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் வரலாறும் மரணமும் அதனை ஒட்டிய வாதப் பரிதிவாதங்களும் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற அமைப்பிற்குள் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா என்பவர் அதே கட்சியில் செல்வாக்கு மிக்கவராக இருந்த பிரேமசந்திரவை கொலை செய்த சம்பவம் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று தன்னைக் கொல்ல வந்தவர்களிடம் ஏற்பட்ட இழுபறியில் துமிந்த சில்வாவும் படுகாயம் அடைந்து சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்று தப்பியது பணம் படைத்தவர்கள் அதிகார வல்லமை படைத்தவர்களின் செயற்பாட்டிற்குள் அடங்கும்.

பிரேமசந்திரவின் கொலையும் இதற்கு அறம் சார்ந்து செயற்படாத தன்மையும் அன்றைய காலகட்டது மகிந்த அரசினால் அல்லது அந்த ஆளுமைகளினால் செய்யப்பட்டதை யாவரும் அறிவர். கைது விடுதலை என்ற வரையறையிற்கு இது ஊசலாடிக் கொண்டிருந்து.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால தலமையிலான அரசு இலங்கையில் அமைந்த போது இதற்கான நீதி கிடைக்கும் என்பது போன்ற செயற்பாடுகள் நகர்ந்து அவர் மீதான் விசாரணை முன்னெடுக்கப்பட்டு பிரேமசந்திரவை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் துமிந்த சில்வா இற்கு மரணதண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டு இது பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த ‘சறுக்கல்” துமிந்த எதிர்காலத்தில் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நிலமைகள் ஏற்படுத்தும் என்பதை கட்டியம் காட்டி நின்றது.’நல்லாட்சி” அரசின் ஒரு தவணைக்கான செயற்பாடு அற்ற ஆட்சிக்காலமும் அதனைத் தொடர்ந்து மகிந்த போன்றவர்வர்களின் புதிய கட்சியும் அதன் பின்பு ஏற்பட்ட கட்சியின் எழுச்சியும் அவர்கள் சிலங்கா சுதந்திர கட்சியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் புறம் தள்ளி தனிப் பெரும் ஆளுமையாக மாபெரும் தேர்தல் வெற்றியை ஏற்படுத்தியும் கொடுத்தது.

இங்கு ஐ.தே கட்சியின் பிரிந்து நின்ற நிலமைiயும் சிறீலங்கா கட்சி மகிந்தாவின் கட்சியிற்கு வழங்கிய நிபந்தனை அற்ற ஆதரவும் இந்த வெற்றியை உறுதி செய்ய தமிழ் தரப்பும் வழமை போல் ஐ.தே கட்சி எமது நண்பன் என்ற செயற்பாடு கடும் போக்காளர்களாக இருக்கும் சிங்கள பௌத்த பேரிவான சக்திகள் தமிழர்களின் வாக்குகள் இல்லாமலே எந்த தேர்தல் வெற்றியையும் நாம் பெறமுடியும் என்பதை நிரூபிப்பது மட்டும் அல்லாது அதனை வெளிப்படையாக சொல்லும் அளவிற்கும் நிலமைகளை ஏற்படுத்தியது.

‘நல்லாட்சி”யிற்கு வழமை போல் தமிழ் தலமைகளை முண்டு கொடுத்து ஏதும் அவர்களிடம் பெறாவிட்டாலும் ‘நண்பேன்டா” என்ற வலதுசாரிச் சிந்தனையின் வெளிப்பாட்டின் பொன்னம்பலத்து காலத்தில் இருந்த செயற்பாட்டின் தொடர்ச்சியை நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கண்டோம்.இவர்களிடம் பிரிந்து அதி தீவிர தேசியம் பேசியவர்களும் தேர்தல் கொடுத்த உசுப்பேத்தல்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்தவே என்பதை தேர்தல் வெற்றிக்கு பின்னரான அவர்களின் செயற்பாட்டில் விக்னேஸ்வரனிடமும் கஜேந்திரன் பொன்னம்பலத்திடமும் நாம் காணமுடிகின்றது.

இது முன்னமே எதிர்பார்க்கப்பட்டதுதான். இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.பாராளுமன்றக் கதிரையை பிடித்தல் என்பதில் உறுதியாக இருக்கும் முன்னாள் போராளிகள் அமைப்பின் தற்போதைய தேர்தல் கட்சிகள் இதே ஒரே குட்டையில் ஊறிய மட்டையிற்குள் சங்கமமாகி தமது அடையாளத்தை தனித்தன்மையை இழந்தும் நிற்கின்றனர். அவர்கள் மன்னாரிலிலும் உடுவிலிலும் தமது வெற்றியை உறுதி செய்வதில் வெற்றியும் கண்டுவிட்டனர்.

பிரேமசந்திரவின் கொலையிற்கான நீதி கேட்கும் பெண்ணாக அவரின் மகள் ஹிருணிகா பிரேமசந்திரவின் செயற்பாடுகள் அவரை சிறீலங்கா கட்சியில் இருந்தும் பின்பு மகிந்தாவின் பெரமுனவில் இருந்தும் அன்னியப்படுத்தியே வைத்திருக்கின்றது.

ஒரு காலத்தில் கொழும்பின் மேயராகலாம் மேல்மகாணத்தின் முதல்வர் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட ஹிருணிகா பிரேமசந்திர இந்த அடையாளங்களில் இருந்து அகற்றப்பட்டார். இது எல்லாம் இறந்து கொல்லப்பட்ட பிரேமசந்திரவின சகாப்தம் முடிந்துவிட்டது துமிந்தாவின் உயிர்வாழுதலும் அவரின் கை ஓங்கியிருப்பதை தற்போதைய ஆளும் தரப்பு விரும்புகின்றது என்பதை எடுத்துக் காட்டிநின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மாற்றுக் கருத்தாளர்களை மாற்று அமைப்பினரை தடை செய்து கொலை செய்து அவர்களின் செயற்பாடு காணும் இடத்து கைது செய்தல் என்பதை அவர்கள் 2009 மே மாதம் மௌனிக்கும் வரையிலான காலம் வரை தமது கொள்கையாக கொண்டு செயற்பட்டவர்கள்.இதற்கு அவர்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும் அவர்கள் இவ்வாறுதான் செயற்பட்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த மாற்றுக் கருத்தாளர்களின் குரவளையை நெரித்து கொன்றவர்களின் வழித்தோன்றல்தான்துமிந்தாவும் பிரேமசந்திர என்ற தனது சக கட்சியின் செயற்பாட்டை கொன்றவர்தானர் இந்த இரு தரப்பிலும் மொத்தமாக 16, 1 என்ற வகையில் போசன் தினத்து பொது மன்னிப்பு அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கின்றர்.

இலங்கைச் செய்திகளின் படி….ஜூன் 24 பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 94 பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடராமல் இருந்த, 16 தமிழ் அரசியல் கைதிகளைத் தவிர, ஏனைய 77 பேரும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் வாடியவர்களாவர்.கடைசி நபராக இல்லாமல் முதலாவது நபராக, முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா அடங்குகின்றார்.

தமிழ் அரசியல் கைதிகளின் அவலக்குரல், ஆட்சியாளர்களின் காதுகளுக்கு ஓரளவுக்குக் கேட்டிருக்கிறது, ‘புலிகளை விடுவித்துவிட்டனர்’ எனும் விமர்சனத்துக்குள் சிக்கிக்கொள்ளாது, துமிந்தவையும் விடுவித்து, சமன்பாட்டை சமப்படுத்தியுள்ளது நேற்றைய பொதுமன்னிப்பு.

புலிகள் அமைப்பை பொறுத்தவரையிலும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் அந்த 16 பேரும் போராளிகள் அதே போல் துமிந்த சில்வாவும் மகிந்த தரப்பிற்கு தமக்கான ஒரு போரளாளிக் காணப்படுவதினாலேயே பிரேமசந்திரவின் கொலையில் மரணதண்டனை அதனைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை என்றிருந்த அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் கோதபாய ராஜபக்ஷா இனால்.

பண்டாரநாயக்காவின் கொலை அவரின் கைம் பெண்ணான சிறீமாவோ பண்டாரநாயக்காவை பிரதம மந்திரியாக்கி உலகின் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்ததையும் கொடுத்து. இதன் பின்பு அவர் ஆளுமை மிக்க தலைவராக தன்னை மக்கள் மத்தியில் வளர்த்து இடதுசாரிகளுடன் இணைந்து பொது சன ஐக்கிய முன்னணி என்ற சுதேசியப் சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் வேலைத்திட்டத்தை பிரித்தானியாவிடம் இருந்து முழுமையாக இலங்கையை விடுவித்து இலங்கையை குடியரசாக்கி முன்னோக்கி நகர்த்தவும் வைத்தது.

வடபகுதி விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு இவர் ஆட்சிக்காலத்தில் உயர்வு பெற்றது என்பதை அவர் மீதான ஏனைய தமிழ் மக்கள் மீதான் பேரினவாத செயற்பாட்டிற்கு எதிராகவும் இன்று வரை பேசப்படுகின்றது. இவரைத் தொடரந்து ஜேஆர் இன் ஆட்சி அமைந்தது.

இதே கால கட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி ஐதே கட்சிகளின் பேரினாத செயற்பாட்டிற்கு மாற்றாக ஜனசஞ்சரமான இலங்கை ஜனநாயக கட்சியை உருவாக்கியவர் விஜய குமார ரணதுங்க. அவரின் காதல் மனைவிதான் சந்திரிகா. 1988 இல் விஜய குமார ரணதுங்காவின் கொலையும் தந்தையையும் கணவரையும் துப்பாக்கி குண்டிற்கு பலிகொடுத்த வலிகளையும் ஒருங்கிணத்து மேல் மாகாணசபையின் முதல்வராக இருந்த சந்திரிகா நாட்டின் ஜனாதிபதியாக தன்னை வளர்தெடுக்க முடிந்தது.

ஆனால் தனது கணவரின் இலங்கை மக்கள் கட்சியை கைவிட்டு தந்தை, தாயாரின் பிரபல்ய சிறீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுத் தளத்தை அவர் கையில் எடுத்துக் கொண்டார் தனது அரசியல் வாழ்விற்கு.தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை சமஷ்டி அடிப்படையில் உண்மையில் உருவாக்க வேண்டும் என்ற காலம் சென்ற தனது கணவரின் சிந்தனையின் வெளிப்பாட்டால் அதற்கான வரைபும் செய்து பாராளுமன்னறத்தில் அதனை சமர்பித்தார்.

தனது கட்சிக்குள் இருந்த மாமனார் ரத்தவத்தை போன்றவர்களின் எதிர்பு ரணில் விக்கரமசிங்க போன்றவர்களின் தமிழ் மக்களுக்கான உரிமை மறுப்பு என்ற செயற்பாடுகளும் பாராளுமன்றத்தில் ஆதரவு தருவோம் என்று வாக்களித்த சம்மந்தன் குழுவினர் கிளிநொச்சி தமிழ் செல்வனின் மிரட்டலின் படியும் அவர்களின் விருப்பின் படியும் பின்வாங்கியதும் என்று அது கிளித்தெற்றியப்பட்ட சமஷ்டியைவை விட கூடுதல் அதிகாரம் உள்ள தீர்வுதான் அதுசந்திரிகா அன்று எடுத்துக் கொண்டு அரசியல் செயற்பாடு ஒரு எல்லை அவர் தொடுவதற்கும் அதன் மூலம் சிலவற்றை சாதிப்பதற்கும் காரணமாக இருந்தன.

அதற்கு அவர் எடுத்துக் கொண்டு அரசியல் கட்சியானது பாரம்பரிய சிறீலங்கா சுதந்திர கட்சி அந்த கட்சியின் பிரபல்யத்தை பாவித்து தனக்கான அரசியல் வெற்றிகளை நிலைநாட்ட முயன்ற செயற்பாடு சில விமர்சனங்களுக்கு அப்பால் சரியானது.

இதனை விடுத்து விஜய குமார ரணதுங்காவின் கட்சியின் தொடர்ச்சியாக அவர் பயணப்பட்டிருந்தால் உடனடி வெற்றிகளை குவிக்காவிட்டாலும் ஒரு நீண்ட காலப் போக்கில் இலங்கையிற்கு மிகச் சிறந்த ஒரு ஜனாதிபதியை தலைவரை இலங்கையின் இனங்களுக்கிடையேயான சமத்துவத்தை பேணும் அரசியல் தீர்வை உருவாக்கிய தலவைராக செய்து பலவேளைகளில் காட்டியிருக்க முடியும்.

சில வேளைகளில் மற்றைய இரண்டு பாரம்பரிய சிறீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசியக் கட்சிகள் இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு தடை போட்டாலும் வரலாறு பின்னோக்கி நகருவதில்லை என்ற அடிப்படையில் மாற்றங்கள் அவ்வாறு நடைபெற்றிருக்கலாம் அதற்குரிய வாய்புகள் நிறையவே இருந்தன.தற்போது ஹிருணிகா பிரேமசந்திர இற்கு அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக நான் உணர்கின்றேன்.

தனது தந்தையின் மரணத்திற்கான நீதி மறுக்கப்பட்ட சூழலில் அரசியல் அனாதை போல் காட்சியளிக்கப்படும் ஹிருணிகா பிரேமசந்திர இலங்கையில் ஐ.தே கட்சி பொதுசன பெரமுன என்ற இரு பேரினவாத கட்சிகளுக்கு மாற்றீடான ஒரு அரசியல் இயக்கத்தை வழிநடத்த முன்வர வேண்டும்.

இது மிகவும் கடினமான பணி தந்திரோபாய அடிப்படையில் சஜித்தின் கட்சியினாலும் கைவிடப்பட்ட? நிலையில் உறைநிலையில் இருக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சியை அல்லது புதிதாக விஜய குமார ரணதுங்கா போன்றதொரு புதிய துவக்கத்தை ஆரம்பிப்பது சரியான அரசியல் பாiயை இலங்கையில் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக அமையும் இதற்கு தந்தையின் தொழிற்சங்க நலன்களை அடிப்படையாக செயற்பட்ட இடதுசாரி சமூக ஜனநாயக சிந்தனைகள் அவருக்கு உதவலாம்.

எங்கேயோ ஒரு ஆரம்பத்தை நாம் ஆரம்பித்துதான் ஆகவேண்டும் அப்படியான ஆரம்பம்தான் வரலாற்றில் சிலரின் பாத்திரங்களை காத்திரமானதாக வரலாற்றை புரட்டிப் போடும் செயற்பாடாகவும் அமைந்து விடுகின்றது. இதற்கான ஒரு சந்தர்பமாக துமிந்தாவின் விடுதலையும் அதனையொட்டி எற்பட்டிருக்கும் அதிருப்தி எதிர்ப்பு அலையை சாதமாக பாவித்து முன்னகர வேண்டும்.

அந்த புதிய தலமை இலங்கை வாழ் அனைத்து மக்களும் சுயமரியாதையுடனும் சமத்துவத்துடனும் சம உரிமையுடன் வாழும் நிலையை உருவாக்கும் பயணமாக அமைய வேண்டும்.சற்று அதீதமான பார்வையாக இருந்தாலும் எதுவும் சாத்தியம் இல்லை என்பதை நாம் வரலாற்றில் கடந்து வந்த பாதையில் கண்டுதான் வந்திருக்கின்றோம் ஹிருணிகா பிரேமசந்திர இதனைச் செய்வாரா…? செய்ய வேண்டும் என்பதே அவரின் தந்தையிற்கு அவர் செய்யும் மரியாதையாக இருக்கும்.

பதினாறு புலிகளுக்குள் ஒழிந்து வெளியேறிய துமிந்த சில்வா, ‘ஓர் அரசியல் ஆயுதம்… கருவி…. அந்த ‘ஆயுதம்… கருவி’ எதிர்காலத்தில் உங்களுக்கு(ஹிருணிகா பிரேமசந்திர) எதிராக பயன்படுத்தப்படுவதை தடுப்பதாக மட்டும் அல்லாமல் முழு இலங்கை மக்களுக்குமான சுபீட்சத்தை முன்னிறுத்தி நகருவீர்கள் ஆயின் வரலாற்றில் நீங்கள் பேசப்படுவீர்கள் என்பதில் ஐயமில்லை.