“மக்களே பொறுப்பாளர்கள்” என்ற பசிலின் வாதம் சரியானதே!

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, அதனை அறிவிப்பதற்காக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறியவற்றில், ஒரு கருத்தைத் தவிர ஏனைய அத்தனையும் அர்த்தமற்றவை என்றே கூற வேண்டும்.