மட்டக்களப்பு மரணங்கள் மற்றவர்களுக்கானது அல்ல…..! அது எமக்கானதும்தான்….!!

(சாகரன்)

மரணம் வலியானது அதுவும் எதிர்பாராத மரணங்கள் ரணமானது. சுற்றுலா பயணத்தின் நடுவில் உறவுகளுடன் குலாவி மகிழ்ந்திருக்கையில் அது நடைபெற்றால் யாருக்குதான் அதிர்சியை ஏற்படுத்தாது. வாகன விபத்து மரணங்கள் தவிர்க்கப்படக் கூடியவை. வீதிகள் கொள்ளக் கூடியளவு வாகனங்களை விட அதிகமான வாகனப் புழக்கங்கள்… தாங்க முடியாத வேகங்களை அனுமதித்த வீதி வேக அனுமதிப்பு…. போக்குவரத்து விதிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காத அரச நிர்வாகம்… விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் காசு கொடுத்து சமாளிக்கலாம் என்ற மனநிலையில் உள்ள வாகனச் சாரதிகள்… இதனை தமக்கு சாதகமாக்கி கையூடுவாங்கும் காவல்துறை என்று போக்குவரத்தில் பாதுகாப்பை காற்றில் பறக்கவிட்ட நிலமை போதியளவு ஓய்வு தூக்கம் கால அவகாசம் இல்லாத வாகனம் செலுத்தும் சூழல் இப்படி பலவும் எம்மை என் உறவுகளிடம் இருந்து எப்போதும் பிரித்தெடுக்கலாம் என்ற சூழல் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வீதியில் பயணிக்கும் போது நமக்கு ஏற்படும்.