மனித நேயம்.. ஐக்கியம்… பன்முகத்தன்மை.. இவையே எமக்கு முக்கியம்

(சாகரன்)
உயிரினங்கள் சிறப்பாக மனிதர்களிடம் அதிகம் காணப்பட வேண்டியது மனித நேயம். இன்னொன்றும் அதிகமாக காணப்பட வேண்டியதாக இருக்கின்றது அதுதான் ஐக்கியமாக வாழுதல். அது மனித குலமாக இருக்கலாம், விலங்கினங்கள், பறவைகள் எல்லாம் ஐக்கியப்பட்ட செயற்பாடுகளின் மூலமே தம்மை பலமாக்கி தற்காத்து சந்தோஷமாக வாழ்வதை நாம் காணலாம்.