மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
1980 களின் நடுப் பகுதியில் தமிழ் நாட்டுப் பெண்கள் TVS 50 ஓடத்தொடங்கிய போது தமது துப்பட்டாவால் தலையை போர்த்தி சிறிதளவு முகத்தையும் மறைந்து செல்வர். தலை குழம்பாமலும் முகத்தி தூசி படிந்து முகத்தின் புத்துணர்சி குறையாமலும் இருக்க இதனை மேற்கொண்டனர். பார்பதற்கு அழகாகவும் இது இருந்தனர் இந்தத் தேவதைகள். தமது அழகிய முகத்தைக் காட்டமாட்டார்களா…? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் எகிறிநின்றது. யாரும் மூக்கையும், வாயையும் மறைத்து சுவாசத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. இதனை 2010 வரைக்கும் ஓரளவிற்கு என்னால் அவதானிக்க முடிந்தது.

2015 நவம்பர் மாதம் இந்திய தமிழ் நாட்டிற்கு சென்றபோது ஆண், பெண் வேறுபாடுகள் இன்றி மூக்கையும், வாயையும் ‘கவர்’ செய்து வெளியில் செல்வதை அவதானித்தேன். நல்ல காலம் ‘முகத்தை மறைக்காதே’ என்ற ஐரோப்பிய நாடுகளின் முஸ்லீம் மக்களுக்கெதிரான சட்டங்கள் தமிழ்நாட்டில் அமுலில் இல்லை. இருந்திருந்தால் யாரும் ரோட்டில் பயணிக்க முடியாது நிலைதான் ஏற்பட்டிருக்கும். தூசிகள் துஷ்டக்காற்றுகள் பிடிக்கக் கூடாது என்பதற்காக என்று கூறினர். நானும் இந்த தூசிகளையும் துஷ்டக்காற்றறையும் அதிகம் உணர்ந்தேன்; சுத்தமான காற்றுள்ள நாடு ஒன்றில் இருந்து பயணம் செய்திருந்த எனக்கு இந்த சென்னையின் தூசிகளை சமாளிப்பது கஷ்டமாகவே இருந்தது. இதனால் எனது சகாவின் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது எப்போதும் ஹெல்மெட் அணிந்தவண்ணமே சென்றேன்.

தமிழ்நாட்டில் பின்னுக்கு இருப்பவர் தலைக் கவசம் அணிய வேண்டிய தேவை இல்லாதபோது நான் மட்டும் அணிந்து சென்றது பலராலும் ‘வேடிக்கை’ யாக பார்க்கப்பட்டது. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை வண்டியை ஓட்டுபவர் மட்டும் தலைக் கவசம் அணிவது மட்டும் இருவருக்கும் பாதுகாப்பானது எவ்வாறு என்பதை. இலங்கையில் இரு சக்கர வேக வாகனத்தில் செல்லும் இருவரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம்.

எல்லோராலும் உணரப்படும் அளவிற்கு காற்று சுவாசிக்க முடியாத அளவிற்கு மாசடைந்திருக்கின்றது. இப்படி இருப்பது எமக்கு தேவையான பிராணவாயுவை நாம் பெற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது மட்டும் அல்லாது நச்சுக்காற்றை சுவாசிப்பதினால் உடல் நலத்திற்கும் உகந்தது அல்ல. நச்சுக்காற்றை துணியால் வடிகட்டும் முறமை இதற்கான நிரந்தரத் தீர்வும் அல்ல. வேணும் என்றால் தற்காலிகமாக இம்முறையைக் கையாளலாம் என்று எடுத்துக் கொள்ளலாம். மற்றயபடி இப்படியே போனால் போபாலில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவு மரணங்களைவிட அதிகமாக சென்னையில் எதிர்காலத்தில் எற்படாது என்பதை மறுப்பதற்கில்லை.

காபன்ஓர்  ஒட்சைட்டு நஞ்சுவாயினால் பொதுமக்கள் சாவை தழுவியது போல் முழுக் காற்றும் மாசடைந்து முழுச் சென்னை மக்களும் பிராண வாயு பற்றாக் குறையினால் உயிர்வாழ முடியாத சூழலுக்குள் தள்ளப்படுவார்கள். சீனாவிலும் நியூயோர்க்கிலும் செய்வது போல் இடையிடையே ஒட்சிசனை மக்கள் சுவாசிக்கும் வழி மண்டத்தில் கலக்க வேண்டிய நிலை வெகு தூரத்தில் இல்லை.

இப்படியாக சுற்றுச் சூழல் மாசு படிந்த ஊரில் தாழ் அமுக்கம் பருவத்தை மீறிய பரவலற்ற மழை பொழிதல் இதனையொட் டிய வெள்ளம் பெருகாமல் என்ன செய்யும்…? பெருகிய வெள்ளம் வடிந்தோடவும், நிலத்தில் தேங்கிநிற்கவும் இடமும் இல்லாமல் மக்கள் வெள்ளத்தை பேரவலத்திற்குள் உள்ளாக்காமல் என்ன செய்யும். இதுதான் நாம் அண்மையில் சந்தித்த சென்னையும் அதனை ஒட்டிய பிரதேசத்தின் பிசகு பண்ணிய மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு இன்னொரு காரமும் ஆகும் .

பல மத்தியதர மக்கள் வாழும் வீடுகள் கொசுத் தொல்லையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள நிரந்தரமாக கதவுகளை, ஜன்னல்களை மூடிய நிலையில் தமது வீட்டிற்குள் அடைந்து கொள்கின்;றனர். வெப்பத்தைத் தணிக்க காற்றாடிகளை முழு நேரமும் போட்டபடி இருக்கின்றனர். இந்த அடைத்த வீட்டிற்குள் புதிய காற்று புகுவதற்குரிய வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால் ஒட்சிசன் குறைபாடு இருப்பதாக என்னால் உணர முடிந்தது. இதனால் இரண்டு நாட்களில் மூட்டுகள் நோவது போன்ற உணர்வைப் பெற்றேன். எனவே விடிந்ததும் வெளியில் கிளம்பவேண்டும் என்ற உந்துதல் என்னை வெளியே தள்ளியது தினமும்.

இது பூட்டிய அறைக்குள் காற்றாடிகளை மட்டும் போட்டு அல்லது குளிர்சாதனங்களை மட்டும் பொருத்தி வாழ்வதற்குரிய முறமையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், கட்டங்களை கொண்ட நகரமும் அல்ல. அடைத்த கட்டங்களுக்குள் சுழற்சி முறையில் காற்றை உள்வாங்கி வெளித்தள்ளும் பொறிமுறை ஏதும் அற்ற கட்ட முறையில் காற்றாடிகளும் குளிர்சாதனங்களும் நல்ல தூய்மையான காற்றக் கொடுக்கப் போவதில்லை. இதனால்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோவில்களில் எல்லாம் தற்போது கற்பூரம் கொழுத்துவது தடைசெய்யப்பட்ட ஒன்றாக கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததற்கான காரணங்கள் ஆகும். இதுபோன்ற தூய்மையான காற்றை பெறும் முறமைகள் கட்டங்கள், வீடுகள், வீதிகள் தோறும் ஏற்படுத்தும் முறமைகள் ஏற்படுத்தாவரைக்கும் இந்த அவல மழை வெள்ளங்களும் இதற்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் வெள்ளங்களும் இருந்துவிட்டுத்தான் போகப் போகின்றது.

மழை நின்ற பின்பு இதனால் எற்பட்ட சுற்றுச் சூழல் அழுக்குகளும், குப்பை, கூடங்களும் கருங்சேற்று நாற்றங்களும் தேங்கி நிற்கும் தண்ணிகளால் எற்படும் நோய்களும் என சிக்கித்தவிக்கும் சென்னையை இன்னும் சில தினங்கள் நிவாரணம் இடர் மீட்பு என்று ஏதோ சமாளித்துவிட்டு மீண்டும் இதுபோன்ற இன்னொரு இடர் அடுத்த வருடமோ அல்லது எப்பேதோ ஏற்படும் வரை எந்தத் திட்டமிடலும் செய்யாது வரும் போது பார்த்துக் கொள்வோம் என்ற அரசும் அதன் அரச இயந்திரங்களினால் ஏது பயனும் ஏற்படப்போவதில்லை.

எனவே மக்களாக திரண்டு ஒரு மக்கள் வாழவிற்கான மாற்றத்தை உருவாக்காதவரைக்கும் சென்னையும் இதனை அணடிய பிரதேசங்களும் எதிர்காலத்தில் பிணக்காடாக மாறுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே சமூக ஆரவலர்களே தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகளே இளைஞர்களே விழத்தெழ வேண்டிய கால கட்டம் இது தாமதியாது செயற்படுங்கள். முh பெரும் மக்கள் அழிவிலிருந்து இந்த வழம் மிக்க பூமியைக் காப்பாற்றுங்கள்
(சாகரன்)