மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!

 

யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயத்தின் பல பாடசாலைகளில் மாணவர்களை கொண்டு கையால் எந்தவித பாதுகாப்பு கை உறைகளும் போடாமல் மலசலகூடங்களை கழுவுவிக்கும் அவலம் நடைபெறுகிறது. யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயக்கல்விப் பணிப்பாளரின் பொறுப்பற்ற தலைமைத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. சிறுவர் பாதுகாப்பில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்ற இக்கால கட்டத்தில் படித்த மேதைகள் அதிகமாக உள்ள வடமராட்சி பகுதிகளில் மாணவர்களை கொண்டு பாடசாலை கழிவறைகளை துப்பரவு செய்வது கவலைப்பட வேண்டிய செயல்.

ஆசிரியர்கள் உபயோகிக்கும் மலசலகூடங்களை கூட மாணவர்கள் கழுவ வேண்டும் என பாடசாலை நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது. இல்லாவிட்டால் பெற்றோர் வந்து கழுவ வேண்டும் என புது சட்டம் போடப்பட்டுள்ளது. பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளினை பாடசாலை நிர்வாகம் பழிவாங்கி விடும் என கருதி பேசா மடந்தைகளாக இருக்கின்றனர். மதியத்திற்கு பிறகு மதுபோதையில் வந்து வயிற்றுப் போக்கு உடைய ஆசிரியர், அதிபர்களின் அழுக்குகளும், பெண் ஆசிரியரின் மாதாந்த உபாதைகளும் மாணவர் கழுவவேண்டிய நிலையில் உள்ளது. பாடசாலைகள் பலவற்றில் சுகாதார தொழிலாளர் என்ற சிற்றூழியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச ஓய்வூதியத்துடன் கூடிய இவ் நியமனம் பெற்ற ஊழியர்களை கொண்டு பாடசாலை வளாகத்தை துப்பரவு செய்வது மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தல் என்பவற்றை மேற்கொள்ள வேண்டும். இவை பாடசாலை சுகாதார தொழிலாளரின் பிரதான கடமை ஆகும். எனினும் அரச உத்தியோகம் பெறவேண்டும் என்பதற்காக “சுகாதார தொழிலாளர் ” என்ற நியமனத்தை பெற்று வருபவர்கள் பின்னர் பாடசாலைகளில் அலுவலக உதவியாளர் வேலைகளை மட்டும் செய்ய ஆரம்பிக்கின்றனர். இவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு பின்னடிப்பதுடன் அதனை செய்வதை இழிந்த செயலாக கருதுகின்றனர். இவர்களை கொண்டு அவர்களது நியமனத்துக்கு ஏற்ப பணிகளை செய்விக்க முதுகெலும்பு இல்லாத அதிபர்கள் மாணவரை கொண்டு கழுவ வைப்பது ஏற்கப்பட முடியாது. “

சுகாதார தொழிலாளர்” நியமனம் பெற்று வருபவர்கள் அரசியல் கட்சிகள் ஊடாக நியமனம் பெற்று வந்தவர்களே. இவர்களுடன் கதைப்பதற்கு பல அதிபர்மார்களுக்கு பயம். இவ் நியமனம் இல்லாத பாடசாலைகளுக்கு வடமாகாண சபையின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சால் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார தொண்டர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு உள்ளனர். எனினும் யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயத்தில் உள்ள பல பாடசாலைகளில் மாணவர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்தல் என்பது வடமாகாண சபையின் ஆற்றாமையின் எடுத்து காட்டு. வடமாகாண கல்வி அமைச்சர் இவற்றை கவனியாது என்னத்தைதான் கவனிக்கிறார் என தெரியவில்லை.

யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலய பல பாடசாலைகளில் உலக உணவு திட்டத்துக்கு என ஒதுக்கப்பட்ட அரிசி பருப்பை களவெடுத்து விற்பதற்கு இச் சிற்றூழியரை அதிபர்கள் பயன்படுத்துவதாக அறிய முடிகிறது. யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் இவ் அரிசி பருப்பு எண்ணெய் மீன் ரின் விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உலக உணவு திட்டத்துக்கு என ஒதுக்கப்பட்ட மீன் ரின்களை லேபிள் உரித்து பாடசாலை அருகில் உள்ள கடைகளில் விற்படுகிறது. யாழ் மாவட்ட செயலகத்தின் யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலய நுகர்வோர் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் கள விஜயம் செய்து இவற்றை கவனிப்பது இல்லை.

மாணவர்கள் காலை வேளை குளித்து விட்டு வெள்ளை உடையுடன் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பாடசாலை செல்லும் போது அவர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய நேரசூசி போட்டு கட்டாயமாக பணிப்பது எவ்வகையில் நியாயம்? சில பாடசாலைகள் நேரம் தாழ்த்தி வரும் மாணவர்களுக்கு உரிய தண்டனையாக மலசல் கூடங்களை கழுவ விடுகிறார்கள்.
இதனால் மாணவர்கள் உடல் உள ரீதியாக பாதிப்பு அடைகின்றனர். பல மாணவர்கள் பாடசாலை கழிவறைகளை பயன்படுத்துவது கிடையாது. அவர்கள் மற்றய மாணவர்கள் பயன்படுத்துவதை கழுவ வேண்டும் என்று கூறுவது தவறு. யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலய ஆசிரியர்களுக்கும் ஒரு நேரசூசி போட்டு அவர்களும் மாணவர்களுடன் இணைந்து கழுவுவது ஏற்புடையது. அல்லது கழிவறைகளை நேர்த்தியாக பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்குவதன் ஊடாக சிறந்த தீர்வை தூர நோக்கில் அடைய முடியும்.

இலங்கையின் மூளை என வர்ணிக்கப்படும் யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலய பகுதிகளில் உள்ள கல்வியாளர்கள் இவற்றை பற்றி சிந்தித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாடசாலைகள் சிறுவர் நேயமுடையதாக மாற்றம் அடைய வேண்டும். யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலய மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறைவடைந்து வருவதற்கு மேற்குறித்த பொறுப்பற்ற செயல்களும் ஒரு காரணம் என்பது யதார்த்தம்.

– ரமணன் –