முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின்னான பத்து வருடங்கள்

உலகமே சாட்சியாக நிற்க ஒரு சிறு நிலப்பரப்பில் கொத்துக்கொத்தாக எமது மக்கள் அழிக்கப்பட்ட காட்சிகளும் பேரவலக்குரல்களும் பத்து வருடங்களின் பின்பும் எமது மனங்களில் அறைந்தபடியும் காதுகளில் ஒலித்தபடியும் இருக்கிறன. எத்தகைய ஒரு பேரவலம்! சிங்கள தேசத்தின் மனசாட்சி இனவாதத்தால் மறைக்கப்பட்டிருக்க, முஸ்லிம் மக்கள் மெளனித்திருக்க பெளத்த-சிங்கள பேரினவாத அரசு உலக ஆதிக்க சக்திகளின் முழுமையான உதவியுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் இனஅழிப்பின் கொடூர வடிவமெடுத்திருந்த காலம்.​