முள்ளி வாய்க்காலின் நினைவலைகள்

என் இனம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாள் மே பதினெட்டு …! இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டன. 2007 வரை ஈழப்போரில் குறைந்தது 70,000 பேர் உயிரிழந்தனர். 2008 இன் இறுதிப் பகுதியிலும், 2009 ஆரம்பத்திலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத்துத்துறையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இரு தரப்புக்குமிடையே ஏறத்தாழ 300,000 பொதுமக்கள் அகப்பட்டனர். 2009 மே 18 விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாம் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. போரின் இறுதிக் கட்டத்தில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் வரை இறந்தனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாடற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் அகப்பட்டு இறந்தனர் என அவ்வறிக்கை தெரிவித்தது. இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்..இதைய அஞ்சலி ,.முள்ளி வாய்க்கால் ஒரு முடிவல்ல ….!!!!

(Kulam Peter)