முள்ளி வாய்க்கால்

1984 காலப்பகுதியில் புலிகள் அடிக்கடி கண்ணி வெடி தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள்.இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை மட்டுமே செய்திகளாக வரும்.இந்த தாக்குதல்களின் பின் விளைவுகள் ஒரு பொழுதும் செய்திகளாக வந்ததில்லை. இதே காலப்பகுதியில் யாழ்பாணத்தில் பொதுவாக தமிழர்கள் புலிகள் அடிக்கிறார்கள்.மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே கேள்வி. போதாக்குறைக்கு வெளிநாட்டில் புகலிடம் கோரிய தமிழர்களும் இதே கேள்விதான்.

எமது தமிழர்களுக்கு மற்றவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் பற்றி கவலையே இருக்கவில்லை.ஆமியை அடிக்க வேணும்.சிங்களவன் சாகவேணும் இதுதான் அவர்களின் எதிர்பார்பாக இருந்தது.இந்த எதிர் பார்ப்புகளுக்கு தீனிபோடக்கூடிய அமைப்பாக புலிகள் இருந்ததால் அவர்களுக்கான ஆதரவு வளர்ந்தது .புலிகளும் அதற்கு பொருத்தமான அமைப்பாக இருந்தது.

1990 இல் மாகாண சபை செயலிழந்து ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவம் வெளியேறிய பின் தனிக்காட்டு ராஜாவாக புலிகள் வலம் வந்தனர்.குடாநாட்டை விட்டு ஒரு குறிக்கப்பட்ட வயதினரை வெளியேற விடாமல் தடுத்தார்கள்.சந்திரிகா பதவிக்கு வந்தபின்னர் ஜனக பெரேரா தலைமையிலான இராணுவம், குடாநாட்டை விடுவித்து புலிகளின் பிடியை ஆட்டங்காண வைத்தனர்.

மீண்டும் ஓயாத அலைகள் வெற்றியைத் தொடர்ந்து இறுமாப்பு கொண்டனர்.இப்போது எங்கும் குண்டுவெடிப்பு. புலி ஆதரவாளர்களுக்கு புலம் பெயர் தமிழர்களுக்கு கொண்டாட்டம். அங்கே சாகின்ற மக்கள் பற்றிய கவலை இல்லை. புலிகள் என்ன நினைக்கிறார்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது புலிகளுக்கே தெரியாத நிலை.

கருணாவின் பிரிவு வடக்கு தமிழர்களின் மனோநிலையை புலிகள் மூலம் புலிகளுக்கு உணர்த்தப்பட்டது. புலிகளே புலிகளைப் பிடித்து வதை செய்தனர். இறந்த பிணங்களை புதைத்த பிணங்களைக்கூட தோண்டி எடுத்து வதை செய்தனர்.

தொடங்கியது மாவிலாறு யுத்தம்.மூதூர் வன்னிப் பெருநிலப்பரப்பு மக்கள் முழுவதையும் பணயக் கைதிகளாக்கினர். தம்மை பாதுகாக்க மக்களை கேடயமாக்கினர். மற்ற அமைப்புகள் என்ன செய்கிறார்கள் என அன்று கேள்வி கேட்ட மக்கள் புலிகள் என்ன செய்கிறார்கள் என பரீட்சார்த்மாக அறிந்தனர். புலிகளின் கோர முகத்தை அடையாளம் கண்டனர்.

எந்த இராணுவம் சாகும்போது கைகொட்டி சந்தோசப்பட்டார்களோ அதே இராணவத்திடம் தஞ்சமடைய புலிகளே வழிவகுத்தனர். உரிமை கேட்டு போராடிய இனம் உயிர்ப்பிச்சை கேட்டு நின்ற அவலம். மக்களை சக அமைப்புக்களைக் கொன்ற புலிகள்துரோகிகள் என்ற முத்திரை ஒட்டிய புலிகளும் உயிர்ப் பிச்சை கேட்டு சரண் அடைந்தனர். தானாக எழுந்த மக்கள் எழுச்சியை தவறான வழியில் திசை திருப்பியதால் முள்ளி வாய்க்காலில் எல்லாமே முடிவுற்றது.
புலிகள் என்ன செய்தார்கள்.

(Vijaya Baskan)