மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம் : ஒரு தசாப்த அவல வரலாறு

நினையாப் பிர­கா­ர­மாக புலி­களால் இராப் பொழுதில் ஒலி­பெ­ருக்கி மூலம் வெளி­யேறச் சொல்லி கால் நடை­யாக சுமார் 60 கிலோ­மீற்றர் தூரம் வெயிலில் விரட்­டப்­பட்ட மூதூர் மற்றும் தோப்பூர் முஸ்­லிம்­களின் வர­லாறு இப்­பொ­ழுது ஒரு தசாப்­தத்தை (10 வரு­டங்­களை) நிறைவு செய்­தி­ருக்­கின்­றது.

கையிலும் மடி­யிலும் எது­வுமே இல்லை. நடந்த களைப்பால் உடல் சோர்ந்து தளர்ந்­தி­ருந்­தது. உள்­ளமும் துய­ரத்தை எண்ணி உருகிக் கொண்­டி­ருந்­தது. பசி, தாகம், சோர்வு, மனதில் ஒரு வித­மான விரக்தி! இவர்கள் எங்­களை வெளி­யேற்றப் போவதை கொஞ்சம் முன் கூட்­டியே அறி­வித்­தி­ருந்தால் எங்­க­ளது பிள்­ளை­களின் சாப்­பாட்­டுக்­கா­வது எதை­யென்­றாலும் எடுத்து வந்­தி­ருக்­கலாமே?

மிருக வெறி கொண்­ட­லைந்­த­வர்­க­ளைப்­போல எங்­களை ஒட்­டு­மொத்­த­மாக இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்து ஏன் வெளி­யேற்ற வேண்டும்? அவர்கள் மனி­தர்­க­ளாக இருந்­தி­ருந்தால் எங்­களை இப்­படி விரட்­டி­ய­டித்­தி­ருப்­பார்­களா?

இனி எப்­போது நமது சொந்த மண்ணில் கால் பதிப்போம்?

இவ்­வா­றான பல நூறு கேள்­வி­க­ளுடன் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி பகல் பொழுதில் கால் நடை­யாகப் புறப்­பட்ட திரு­கோ­ண­மலை – மூதூர் மற்றும் தோப்பூர் முஸ்­லிம்கள் ஏக்கப் பெரு­மூச்­சுக்­க­ளுடன் கந்­தளாய் வந்து சேர்ந்­தார்கள்.

கொழும்பு- திரு­கோ­ண­மலை பிர­தான நெடுஞ்­சா­லையில் இருக்­கி­றது கந்­தளாய் நகரம்.

கந்­த­ளா­யி­லுள்ள பாட­சா­லை­களும், அரச கட்­டி­டங்­களும், வயல் வெளி­களும், வரப்­பு­களும், பாழ­டைந்த கட்­டி­டங்­களும், மர ­நி­ழல்­களும், விளை­யாட்டுத் திடலும், தெரு­வோ­ரமும் முஸ்லிம் மக்­களின் வீடு­களும் விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட மூதூர் மற்­றும் தோப்பூர் முஸ்­லிம்­களுக்கு தஞ்­ச­ம­ளிக்கும் இடங்­களாய் மாறின.

சுற்றுச் சூழலில் வாழ்ந்த தமிழ் மக்­க­ளுக்கோ அல்­லது போராட்­டத்தில் ஈடு­பட்ட தமிழர் ஆயுதத் தரப்­புக்கோ எந்தத் தீங்கும் செய்­யாத எங்­களை ஏன் இப்­படி விரட்டி வாழ்­வி­டங்­களை விட்டு விரண்­டோடச் செய்­கின்­றார்கள் என்று அந்த அப்­பாவி மூதூர் முஸ்­லிம்­க­ளுக்கு எது­வுமே அப­்போது புரிந்­தி­ருக்­க­வில்லை.

ஆமாம் இப்­ப­டி­யொரு கசப்­பான வர­லாறு இந்­நாட்டின் கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு இருந்­தது என்­பது இப்­பொ­ழுது மறந்த ஒன்­றாக மாறிவிட்டது.

இக்­கட்­டுரை பிர­சு­ர­மா­வதன் நோக்கம் அவ்­வா­றான ஒரு பெருந்­து­யரம் இனி இலங்கை மக்கள் எவ­ருக்கும் ஏற்­பட்­டு­விடக் கூடாது என்­ப­தே­யாகும்.

இன்­னமும் இந்த உள் நாட்டு அகதிப் பிரச்­சினை தொடரக் கூடாது என்றே அமை­தியை விரும்பும் அனை­வரும் எதிர்­பர்க்­கின்­றார்கள். அந்த நல்­லெண்­ணத்தை அடி­ம­னதில் கொண்டே இந்த துயர நிகழ்வை நினை­வூட்­டு­கின்றோம்.

திரு­கோ­ண­மலை மாவட்டம் மூதூர் மற்றும் தோப்பூர் பிர­தேச முஸ்­லிம்கள் தமது பிர­தே­சத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட 10 ஆவது ஆண்டை  வியா­ழக்­கி­ழமை (ஓகஸ்ட் 04, 2016) நினைவு கூர்ந்தனர்.

கடந்த 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தமது உயி­ருக்கு அஞ்சி ஆயு­த­தா­ரி­க­ளான தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் உத்­த­ரவை அடுத்து சுமார் 15 ஆயிரம் குடும்­பங்­களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் மூதூர் மற்றும் தோப்பூர் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­தனர்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி இரவு மூதூர் நக­ரி­லுள்ள இரா­ணுவம் மற்றும் பொலிஸ் நிலைகள் மீது தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளினால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

இந்த தாக்­கு­தலின் பின்னர் அந்தப் பிர­தேசம் பல மணித்­தி­யா­ல­யங்கள் விடு­தலைப் புலி­களின் முழு­மை­யான கட்­டுப்­பாட்டில் இருந்­தது.

அவ்­வே­ளையில் தான் தங்­களை வெளி­யே­று­மாறு விடு­தலைப் புலி­க­ளினால் அறி­விக்­கப்­பட்­ட­தாக மூதூர் முஸ்­லிம்கள் கூறு­கின்­ற­னர்.

மூதூர் பிர­தே­சத்தை தமது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருந்த தமி­ழீழ விடு­தலைப் புலிகள் முஸ்­லிம்­களை வெளி­யே­று­மாறு ஒலி­பெ­ருக்கி மூலம் அறி­வித்­ததன் பின்னர் முஸ்­லிம்கள் சாரி­சா­ரி­யாக அங்­கி­ருந்து கால்­ந­டை­யாக வெளி­யே­றி­ய­தாக கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான ஜே.எம். லாஹீர் தெரி­வித்தார்.

அங்­கி­ருந்த வெளி­யேறும் வேறு வழி­களைத் தடை செய்­தி­ருந்த தமி­ழீழ விடு­தலைப் புலிகள் கிராந்­தி­முனை (மூன்றாம் கட்டை) ஊடாக மட்­டுமே வெளி­யேற அனு­ம­தியை வழங்­கி­யி­ருந்த நிலையில் அவ்­வ­ழி­யாக வெளி­யேறும் போது விடு­தலைப் புலி­க­ளினால் தடுத்து வைக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் சிலர் காணாமல் போயி­ருந்­த­தா­கவும் லாஹிர் தெரி­வித்தார்.

மக்கள் உடுத்த உடை­யுடன் சுமார் 60 கிலோ ­மீற்றர் தொலை­வி­லுள்ள கந்­தளாய் பகு­தியை சென்­ற­டைந்து ஒரிரு மாதங்கள் அங்­குள்ள நலன்­புரி மையங்­களில் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

தற்­போது தாங்கள் தமது பூர்­வீக பழைய வசிப்­பி­டங்­களில் தொந்­த­ர­வின்றி வாழ்­வ­தாகக் குறிப்­பிட்ட சமூக சேவை­யா­ளரும் முன்னாள் கிராம சேவ­க­ரு­மான ஏ.எஸ்.ஏ. ஐனுதீன் இப்­பொ­ழுது தாங்கள் முன்னர் எவ்­வாறு இந்தப் பிர­தே­சத்­தி­லுள்ள தமிழ் மற்றும் சிங்­கள மக்­க­ளுடன் ஐக்­கி­யத்­துடன் வாழ்ந்­தோமோ அதே சக­வாழ்­வுடன் நல்­லு­றவைப் பேணி வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

மூதூர் ஆக்­கி­ர­மிப்­பின்­போது பல­மான பீரங்கித் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. இந்தத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போதே ஊருக்குள் நுழைந்த எல்­ரீ­ரீஈ யினர் ஊரி­லுள்ள முஸ்லிம் இளை­ஞர்­க­ளையும் முக்­கி­ய­மான சேவை­யா­ளர்­க­ளையும் கடத்திச் செல்ல ஆரம்­பித்­தனர்.

எனவே, தம்­மு­டைய பிள்­ளை­களை எவ்­வாறு புலிகள் இயக்­கத்­தி­ட­மி­ருந்து காப்­பாற்­று­வது என்ற ஏக்கம் பெற்­றோ­ருக்கு ஏற்­பட்­டது. எனினும் புலிகள் ஒரு தொகை முஸ்­லிம்­களை எவ்­வாறோ கடத்திச் சென்­று­விட்­டனர்.

இதன்­­போது தாக்­கு­தல்கள் கார­ண­மாக 54 முஸ்­லிம்கள் உயி­ரி­ழந்து விட்­டனர். சட­லங்­களைக் கூட எடுத்து அடக்கம் செய்ய முடி­யாத நிலை­யி­லேயே அவற்றைக் கைவிட்டுச் செல்­ல­வேண்­டிய துயரம் ஏற்­பட்­ட­தாக மாகாண சபை உறுப்­பினர் லாஹிர் தனது கவ­லையை இது­பற்றி விவ­ரிக்­கும்­போது வெளி­யிட்டார்.

மூதூர் முஸ்­லிம்கள் வழ­மை­யா­கவே எந்­த­வி­த­மான வன்­­மு­றை­க­ளிலும் தங்­களை ஈடு­ப­டுத்திக் கொள்­ளா­த­வர்கள். அதனால் தமிழ் மக்­க­ளோடு எப்­பொ­ழுதும் அந்­நி­யோன்யம் இருந்­தது. இந்த இரு சமூ­கத்­தாரும் நன்மை தீமை­களில் பரஸ்­பரம் பங்கு கொண்­ட­வர்கள்.
தமி­ழீழ விடு­தலைப் புலிகள் முஸ்­லிம்­களைத் தாக்­கி­ய­தையும் அநி­யாயம் புரிந்­த­தையும் தமிழ் மக்­க­ளு­ட­னான பிரச்சினையாக தாங்கள் பார்க்கவில்லை என லாஹிர் மேலும் தெரிவித்தார்.

இப்­பொ­ழுது இந்தப் பிர­தே­சத்தின் தமிழ் முஸ்லிம் உறவு மீளக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்­ளது. சமூக சக­வாழ்வு, விருந்­தோம்பல், வர்த்­தகம், மற்றும் சேவை­க­ளி­னூ­டாக இது பழைய நிலை­மைக்குத் திரும்பி பலம் பெற்­றி­ருக்­கின்­றது.

இது தங்­க­ளுக்கு ஒரு நம்­பிக்­கை­யையும் நிம்­ம­தி­யையும் தோற்­று­வித்­தி­ருப்­ப­தாக தெரி­விக்கும் அப்­ப­கு­தி­க­ளி­லுள்ள சமூக ஆர்­வ­லர்கள் இருப்­பினும், ஒரு சில வன்­மு­றை­யா­ளர்­களால் சமூக விரி­ச­லுக்­கான உணர்­வுகள் அவ்­வப்­போது தூண்டி விடப்­ப­டு­வ­தா­கவும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)