யார் இவர்? இவர் இப்போது எங்கே இருக்கிறார்?

இவர் பெயர் கௌரிபால் சாத்திரி. புலிகளின் கண்ணிவெடிப்பிரிவில் (சக்கை) முக்கியஸ்தர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நீங்கள் நேரடியாக எத்தனை கொலைகள் செய்துள்ளீர்கள்?

ஏனிந்த கொலை வெறிக் கேள்வி?, நான் எனக்காக எந்தக் கொலையையும் செய்திருக்கவில்லை. நான் செய்த கொலைகள் அனைத்துமே நான் சார்ந்து இயங்கிய அமைப்பிற்காகவே செய்யப்பட்டன. நான் நேரடியாக செய்த கொலைகள் இந்திய அமைதிப் படைக் காலத்தில்தான் நடந்தன. இந்தியப் படைகளிற்கு எங்களை அல்லது நாங்கள் பதுங்கியிருக்கும் இடங்களை. எங்களிற்கு உணவளித்து எம்மை பாதுகாத்தவர்களை காட்டிக் கொடுத்து இந்தியப் படைகளோடு சேர்ந்து இயங்கியவர்களை அழிக்கவேண்டிய தேவை இருந்தது. அப்படி எனது பொறுப்பில் இருந்த கிராமங்களில் பதினைந்து அல்லது பதினாறு பேர் என்னால் நேரடியாக அழிக்கப்பட்டிருக்கலாம்.ஒரு உயிரைப் பறிக்கும் உரிமையை, உங்களின் வார்த்தைகளில் சொன்னால் அழிக்கப்பட வேண்டியவர்களை அழிக்கும் உரிமையை விடுதலையின் பெயரில் நீங்கள் எடுத்துக் கொண்டது சரியா?

நான் இணைந்திருந்தது ஆயுதத்தால் மட்டுமே பேசத் தெரிந்த ஒரு அமைப்பு. அங்கு பட்டையும் கொட்டையும் (உருத்திராட்சம்) அணிந்து கொண்டு பஜனை பாட முடியாது. ஆயுதத்தை வைத்து ஆராதனை செய்துகொண்டிருக்க முடியாது. ஆயுதம் தூக்கிய இயக்கம் மட்டுமல்ல ஆயுதம் தூக்கிய ஒரு தனி மனிதன் ஆனாலும் அடுத்தது வன்முறை அல்லது கொலைதான். இது உலக நியதி. உலகம் இப்படித்தான் இயங்குகிறது. சரி பிழை என்பதெல்லாம் அடுத்த கட்டம்.

இலங்கையில் பல கொலைகளைப் புரிந்துவிட்டு தற்போது பிரான்ஸ் நாட்டில் குடியேறியிருக்கிறார்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் வினோதனை இவர்தான் கொன்றதாகக் கூறப்படுகிறது.

வினோதனின் காணியில் குடியிருந்தவர். வினோதனைக் குறிவைத்த புலிகள் வினோதனை யாரும் நெருங்கமுடியாது என்பதால் வினோதனுக்கு மிகவும் அறிமுகமான இவரை வினோதனைக் கொல்ல அனுப்பினார்கள்.

தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பும்படி வினோதனைக் கேட்டிருக்கிறார். வினோதன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த இவர் தன்னை பாதுகாவலர்கள் சோதனையிடுகிறார்கள். அவர்களிடம் சோதனை செய்யவேண்டாம் என்று சொல்லும்படி வினோதனிடம் கேட்டிருக்கிறார். வினோதனும் தனது காணியில் குடியிருந்த இவர் குடும்பம் தனக்கு பழக்கமானவர்கள் என்பதால் இவர் ஒரு புலிகளின் பிஸ்டல் கொலையாளி என்று தெரியாத வினோதன்
தனது பாதுகாவலர்களிடம் இவரைச் சோதனையிடாமல் உள்ளே அனுமதிக்கும்படி கூறியிருக்கிறார்.

வினோதன் வீட்டுக்கு ஒரு சில நாட்கள் சென்றுவந்த் நம்பிக்கைக்குரியவராக நடித்துவிட்டு ஒரு நாள் வினோதன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வினோதனைச் சுட்டுக் கொன்றார்.

ஒரு பேட்டி ஒன்றில் தனது நண்பனை தானே கொன்றதாக குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் நேரடியாக செய்த ஒவ்வொரு கொலையையும் விபரிக்க முடியுமா?

இது மனம் விட்டு விபரிக்கிற ஒரு சம்பவம் அல்ல. மோசமான ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாத சம்பவங்கள். ஒருவரை போட வேண்டும்[ கொலை செய்யவேண்டும்] என முடிவு செய்து விட்டால் அவரைப் பற்றிய தகவல்கள் அவரது நடமாட்டம் என்பவற்றை திரட்டுவோம். பின்னர் ஒரு கணத்தில் ஒரு துப்பாக்கி குண்டு அவரது தலையை பிளக்கும் அவ்வளவுதான். சில நேரங்களில் தவறுதலான தகவல்களால் தவறுகளே செய்யாதவர்களும் தவறான முறையில் புலிகளால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றது.

ஒருவரை கொலை செய்யும் கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?

ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது சங்கடத்தை அல்லது பதற்றத்தை போக்க மது அருந்தவேண்டியிருந்தது (கள்ளு) பின்னர் போகப்போக பழகிப்போனது.
(இது கௌரிபால் சாத்திரியின் பேட்டியின் ஒரு பகுதி)

உங்கள் உயிர் நண்பனை கொலை செய்ததாக ஒரு முறை கூறியிருந்தீர்கள், அந்தக் கணத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஆம். அவன் எனது சிறு வயது நண்பன். அவனை நானே கொலை செய்தேன். அவன் வேறு இயக்கத்தில் இணைந்திருந்தான் புலிகள் அமைப்பால் அந்த இயக்கம் தடை செய்யப் பட்ட பின்னர் இந்தியாவில் தங்கியிருந்தவன் இந்தியப் படைகள் ஈழத்திற்கு வந்தபோது அவனும் இந்திய உளவமைப்பால் ஈழத்திற்கு அழைத்து வரப் பட்டிருந்தான். அவனை நோக்கி துப்பாக்கி நீண்டது ஒரு கணத்தில் நான் எடுத்த முடிவு. ஏனெனில் கொல் அல்லது கொல்லப் படுவாய் என்கிற கால கட்டம் அது. ஆனால் அந்தக் கொலையால் எனது மனதில் உள்ள தாக்கம் என் மரணம் வரை தொடரும். அய் மிஸ் ஹிம்.
(Rahu Rahu Kathiravelu)