யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவு

பேரா. சாம் தியாகலிங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவரும் போஸ்ரன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியரும் சர்வதேசரீதியில் அதிகளவு கணிக்கப்பட்ட ஆய்வுகள் செய்த நேர்மையான academic. இவர்தான் இம்முறை யாழ் பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் பதவிக்கு வெளியிலிருந்து விண்ணப்பித்தவர். இவரது விண்ணப்பத்தை உள்ளேயிருந்து தகுதிகுறைவான விண்ணப்பதாரிகள் பதவியிலிருப்பதால் நிராகரிக்க முயல்கின்றனர். குறிப்பாக பீடத்தலைவர்களாக இருக்கும் கணவனும் மனைவியுமான துஷ்யந்தினி, மிகுந்தன் குணசிங்கம் தம்பதியர் அதிக ஈடுபாடு இவர் விண்ணப்ப நிராகரிப்பில் காட்டுகின்றனர்.


தகுதிகுறைந்த நேர்மையற்ற மிகுந்தன் ஒரு விண்ணப்பதாரி என்பதோடு தன் ஊரவரான சுமந்திரனை Thanges Paramsothy ன் கூட்டமொன்றுக்கு அழைக்கப்பட்டதற்காக தங்கேசின் ஆவணப்படத்தை யாழ்பல்கலைக்கழகத்தில் திரையிடுவதை தடுப்பதற்கு காரணமாக இருந்தவர். சைவவேளாரான மிகுந்தன் சாதிபற்றி விஞ்ஞானரீதியான விவாதங்கள் பல்கலைக்கழகத்தில் செய்வதற்கும் எதிரானவர். புவியில் துறை விரிவுரையாளரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவருமான கருணாகரன் சுதாகருக்கும்
நெருக்கமானவர் மிகுந்தன். இன்னொரு விண்ணப்பதாரியான சக்கர் எனப்படும் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜாவும் பழைய ஊழல் மரபிலிருந்து வந்தவர் என்பதோடு சாதிஎதிர்ப்பு போராளியும் இடதுசாரியுமான தங்கவடிவேல் மாஸ்டரின்
நினைவுமலரில் விஞ்ஞானரீதியான சாதி ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டதற்காக அவ்வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி மானங்கெட்டவர். கடந்த ஆண்டு சிங்களமாணவர் தாக்கப்பட்டதற்கும் மறைமுக காரணமாக இருந்தவர் சிறிசற்குணராஜா. மேலும்
சிறீசற்குணராஜா மதவாதம் மிக்க செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர். பல்கலைக்கழகத்தின் வளவிலே உள்ள பரமேஸ்வரன் கோயிலினைப் பார்த்தவாறு இருக்கும் வாயிலே பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலாக இருக்க வேண்டும் என்று வாதாடியவர்.
கணிதத் துறையில் திறமையாகச் செயற்பட்ட மாணவன் ஒருவரின் புள்ளிகளை வேண்டுமென்றே குறைக்க சிறீசற்குணராஜா முயற்சி செய்தார். பேராசிரியர் தர்மரட்ணத்தின் தலையீட்டினால் அந்த மாணவனுக்கு ஏற்படவிருந்த பாதிப்புத் தவிர்க்கப்பட்டது.
21 ம் நூற்றாண்டின் யாழ்பல்கலைக்கழகம் இது.

(Arun Ambalavanar