ரணிலின் தமிழ் மீதான காதல்……தமிழ் தரப்பின் கொண்டாட்டங்களும்

(Saakaran)
இலங்கையில் இதுவரை காலமும் ஏற்பட்டுவரும் இனப் பிரச்சனைக்கும் கலவரங்களுக்கும் பெரிதும் காரணமாக அமைந்தவர்கள் ஐதே கட்சியினர். அதிலும் ஜேஆர் இன் ஆட்சியும் இவருடன் இணைந்து இவரின் வழி வந்த ரணிலின் செயற்பாடுகளும் இதில் மிகவும் காத்திரமான பங்களிப்பை செய்திருக்கின்றன. செய்து கொண்டிருக்கின்றன. டி.எஸ் சேனநாயக்காவினால் உருவாக்கி வைக்கப்பட்ட அம்பாறையில் இங்கினியாகலை குடியேற்றமும் வடக்கையும் கிழக்கையும் பிரித்தாளும் திருகோணமலை சேருவாவலை உருவாக்கமும், டொலர் கென்ர் பாம் குடியேற்றங்களும் இதன் விரிவாக்கங்களுமே இன்றுவரை தொடர்கின்றன.