லெனின் எனும் மானுட விடுதலையாளன்

(Saakaran)
மனித குல விடுதலைக்கான புதிய பாதையை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு அறிந்து சமூக விஞ்ஞானம் படைத்தவர்கள் மாக்ஸ் ஏங்கல்ஸ் என்ற பிதா மகான்கள். இவர்கள் படைத்த கம்யூனிசத்தை அடைவற்கான சோசலிச பாதையை உருவாக்க பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியை ஏற்படுத்தி சோவியத் யூனினை நிறுவிய லெனின் மரணமடைந்த தினம் இன்று. உலகில் ஒடுக்கப்பட்ட சகல இனங்களுக்கும் மக்களுக்குமான நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான புரட்சியை நடாத்தி காட்டியவர். இவர் செயற்படுத்தி காட்டிய வழிதான் இன்றும் உலகின் பல பாகங்களிலும் நம்பிக்கையுடன் சமத்துவ வாழ்வை உருவாக்கும் பாதையில் பயணிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது.இவர் தான் வாழ்ந்த 54 வயதிற்குள் எத்தனையே படைப்புக்களை உருவாக்க மனித வாழ்வில் சுரண்டல் அற்ற சமத்துவமான உலகை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் பாதையும் காட்டிச் சென்றவர். இதற்கான கொள்கை வகுப்புகள் செயற்திட்டங்கள் ஆவணங்களாக உலகின் சகல நூலகங்களிலும் வியாபித்திருக்கின்றன. என்னைப் போன்ற சான்ய மக்களின் பகவர்கீதை பைபிள் குரான் இவைகள்தான்.

இந்த சமூக விஞ்ஞானத்தின் பால் ஏற்பட்ட நம்பிக்கைதான் நாம் வாழ்வதிலும் சிந்திப்திலும் அர்த்தங்கள் உள்ளன என்ற நம்பிக்கை உருவாக்கி இருக்கின்றது. இதில் லெனின் பங்கு மகத்தானது. கம்யூனிசத்தை அடைவதற்கான பாதையான சோசலிச பாதையில் பயணிப்பதில் தடங்கல்கள் ஏற்பட்ட மாபெரும் நிகழ்வாக சோவியத்தின் வலிந்த உடைவு ஏற்பட்டு இருப்பினும் அங்கு பின்பற்றிய கொள்கையில் இன்றும் நம்பிக்கையும் இனிவரும் காலங்களிலும் இந்தப் பூமிப்பந்தில் இந்த சமூக மாற்றம் விஞ்ஞான பூர்வமாக ஏற்படும் என்பதை நிறுவியவர்களின் முதன்மையானவர் லெனின். நாம் கம்யூனிஸ்டுகளாக வாழ்வதில் நிறைவடைகின்றோம் பெருமிதம் கொள்கின்றோம் என்பதன் முன் உதாரணம் லெனின் தான்