வங்கத்தில் மம்தாவின் செல்வாக்கு சரிகிறதா?

வங்கத்தின் 294 தொகுதிகளிலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முடிவு வாக்காளர்களின் உளவியல் பற்றி ஒரு சுவாரசியமான அம்சத்தை வெளிப்படுத்தியது. யாருக்கு வாக்களிப்பீர்கள் என்றும், யார் வெல்வார்கள் என்றும் கேட்கப்பட்ட கேள்விக்குச் சிலரே வெளிப்படையாகப் பதிலளித்தார்கள்.