வடக்கின் மீதான சீனாவின் ‘புதிய காதல்’

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர், கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என இலங்கையின் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் அடையாள விஜயமாக, நல்லூர்க் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது அமைந்துவிடுகின்றது. அதேபோல், சீனநாட்டின் தூதுவரும் மேலாடை களைந்து வேட்டி கட்டி,  கந்தன் தரிசனம் பெற்று, கோவில் வாசலில் எடுத்த புகைப்படங்கள் வௌியாகியிருந்தன.