வரலாற்று நினைவுகள்

பேச்சுவார்த்தை என்று அழைக்கபட்டு புலிகளால் நய வஞ்சமாக படு கொலை செய்யப்பட்ட புளொட் உறுப்பினர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற் செயலாளர் வாசுதேவா (வாசு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன்), பாவானந்தன் (சுபாஸ்), ஆனந்தன், மற்றும் பலரின் 30ம் ஆண்டு நினைவுநாள். 1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி காலை புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான வாசுதேவா, கண்ணன், சிவராம் (தராக்கி), ஆகியோர்கள் தங்கியிருந்த வாசுதேவாவின் அக்கா வீட்டிற்கு சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான், கருணா (ஸ்ரீலங்கா அரசின் தற்போதைய மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்), கரிகாலன், சித்தா உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நாடாத்தி காலை உணவினை வாசுதேவாவின் சகோதரியின் இல்லத்தில் ஒண்றாக இருந்து அருந்தி மத்தியானச்சாப்பாட்டிற்கு தங்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்து.

கைகுலுக்கி சென்ற புலிகளின் நயவஞ்சகத்தன்மையை அறிந்திராத புளொட் அமைப்பினர் மத்தியானம் சாப்பாட்டிற்கு வருவதற்கு ஒப்புதலும் வழங்கினார்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாகத்தன்னும் அனைத்து இயக்கங்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த புளொட் இயக்கத்தினர் ஒற்றுமை என்ற போர்வையில் தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு நேர்ந்த நிலைமையை உணராமல் போனது வேதனையான விடயமே. இந்தத்தருனத்தில் புலிகளை முழுமையாக நம்பமுடியாது பாதுகாப்பிற்காகத்தன்னும் சில ஆயுதங்களையும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் எடுத்துச்செல்லவேண்டும் என வற்புறுத்திய பவனின் ஆலோசனையும் (தற்போது கனடாவில் இருக்கின்றார்) வாசுதேவாவின் புலிகள் அப்படி செய்யமாட்டார்கள் என்ற மித மிஞ்சிய நம்பிக்கையால் கைவிடப்பட்டது. இதில் இன்னோர் விடயத்தையும் சொல்லியாகவேண்டும் புலிகளுடனான மத்தியான சந்திப்பில் சிவராமும் கலந்து கொள்வதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் வாசுதேவா, கண்ணன் ஆகியோர் பாசிக்குடா சென்ற சமயம் சிவராம் யாருக்குமே சொல்லாமல் கொழும்பிற்கு பஸ்ஸில் புறப்பட்டு சென்றுவிட்டார். நடைபெற இருக்கும் விபரீதத்தை சிவராம் முன்கூட்டியே அறிந்திருந்தாரோ என்ற சிந்தனை எனக்கு நீங்கவில்லை. இவ்விடயம் சம்பந்தமாக மாணிக்கதாஸனிடம் வினவியபோது அந்தச் சந்தேகம் தனக்கும் இருப்பதாக சொல்லியிருந்தார் என்பதை விட சிவராமை த்ற்செயலாக சந்தித்தபோது அவரிடமே எனது கேள்வியைக்கேட்க இப்படி எத்தனை கதைகள் வரும் என மட்டுமே சிவராம் பதிலளித்தார். பாசிக்குடாவில் இருந்து புலிகளின் அலுவலகம் நோக்கிப்புறப்பட்ட வாசுதேவா, கண்னன், சுபாஸ், ஆனந்தன் உள்ளிட்ட புளொட் இயக்க உறுப்பினர்கள் கிரான் சந்தியில் இவர்களை எதிர்பார்த்திருந்த புலிகளினால் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அனைவரது உடல்களையும் வேறு இடத்திற்கு எடுத்துச்சென்று எரித்தும் முடித்தார்கள் புலிகள். இச்செய்தி மட்டக்களப்பு முழுவதும் பரவத்தொடங்கியதும் ஒருவித பதட்டநிலை உருவானதையும் தெளிவாக அறிந்த புலிகளின் தலைமைகள் தலைமறைவாக சித்தா என்பர் மட்டுமே மட்டக்களப்பில் இருந்த புலிகளின் அலுவலகத்தில் தங்கியிருந்தார். ஒரேதினத்தில் பல தடவைகள் சித்தாவை சந்தித்து புளொட் இயக்க உறுப்பினர்களின் உடல்களையாவது தாருங்கள் என வாசுதேவாவின் உறவினார்கள் சித்தாவைக்கேட்டபோதும் எந்தவிதமான பதில்களையும் சித்தாவினால் வழங்கமுடியாற்போனது. அடுத்தநாள் காலை புலிகளின் மட்டக்களப்பு அலுவலம் வாசுதேவாவின் உறவினர்கள் நன்பர்கள் பலரினால் முற்றுகையிடப்பட்டு ஏற்றப்பட்டடிருந்த புலிக்கொடியும் வாசுதேவாவின் உறவினர்களால் கழட்டி எறியப்பட்டது. கொடி களட்டப்பட்டதும் மிகவும் கோபமடைந்த சித்தா இன்னும் பலருக்கு மோசமான விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதென்றால் இங்கிருந்து செல்லுங்கள் என உரக்கக் கத்தியபோது வாசுதேவாவின் உறவினர்களால் பலவந்தமாக தரையில் தள்ளப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார். மிகவும் கேவலாமாக நயவஞ்சகமான முறையில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவர்கள் எத்தனையாயிரம்? அந்த நிலைதான் இறுதியாக நந்திக்கடலிலும் நடந்தேறியது.கப்பல் வரும் எனக் காத்திருந்ததும் ஹெலிவாங்கத்திட்டமிட்டதும் அதே பாணியில் நடந்தேறிய சம்பவங்களே.(நம்பிக்கைத் துரோகம்)
தோழமையுடன்….இரா.வாசுதேவனின் மருமகன்…..எஸ் எஸ். கணேந்திரன்
கழக படைத்துறைச் செயலர் அரசியல் செயலர் உள்ளிட்டோரின் நினைவுதினம்-
கடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த கழகத்தின் படைத்துறைச் செயலர் சோதீஸ்வரன் (கண்ணன்), அரசியல்துறை செயலர் இரா.வாசுதேவா (வாசு) மற்றும் கழக முக்கியஸ்தர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களான பவானந்தன் (சுபாஸ்), மணிவண்ணன் (ஆனந்தன்), ஹரிகரன்(ஈழமகிந்தன்), நிக்லஸ், மைக்கல், கணேஸ்(செல்வம்) ரஞ்சித், மணிமாறன், எஸ்.ஏ.ரவி, நவரட்ணம் சண்முகநாதன் (ராஜன்) உள்ளிட்ட தோழர்களின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. கழகத்தின் செயற்குழு உறுப்பினர் பொ.கேசவன் தலைமையில் இத்தினம் நினைவுகூரப்பட்டது.

(Shan Naranderan)