விதைத்த வினையையே ‘அவரும்’ அறுவடை செய்தார்

பிரேமதாசா பல கொலைகளுக்கு காரணமானவர் என சந்தேகிக்கப் பட்டவர். அவர் விதைத்ததைத்தானே அவரால் அறுத்திருக்க முடியும் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம் , அப்படியே ராஜீவும் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி தமிழரைக் கொன்றவர் , எனவே அவரின் கொலையையும் (சாவையும்) , அவர் விதைத்த வினையையே அவரும் அறுவடை செய்தார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் இந்த இருவர் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை , அரசியல் தலைவர்களை அழித்த பிரபாகரன் கூட தான் விதைத்ததைதான் அறுவடை செய்துள்ளார் என்பதை எழுத தமிழ் பேராசிரியர்களைக் காணவில்லை!

இந்த மேதினம் இலங்கையில் 21 வருடங்களுக்கு முன் பிரேமதாசாவின் கொலையுடன் அல்லோல கல்லோலப்பட்டது . அதற்கு முன்னர் ராஜீவ் காந்தி புலிகளால் 21 மே 1991 ல் கொல்லப்பட்டார் , இதெற்கெல்லாம் காரணமான இலங்கையின் மிகப் பெரும் பயங்கரவாதியான பிரபாகரனும் 2009 ஆண்டு மே மாதம் 19 திகதி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதில் “வினை விதித்தவன் வினை அறுப்பான்” என்ற பழமொழி விசித்திரமாக பிரபாகரனுக்கு பொருந்துகிறது. ஏனெனில் பிரபாகரன் பிரேமதாசாவையும் , ராஜீவையும் வைகாசி மாதத்தில் கொன்று , அவர் விதைத்த விதையை அதே வைகாசி மாதத்தில் அவரும் அறுவடை செய்துள்ளார் .

(Bazeer Seyed)