ஹர்த்தாலுக்கான முஸ்லிம் சமுகத்தின் ஆதரவு: இது புதிய தொடக்கமாகட்டும்!

(எஸ். ஹமீத்)

சகோதர தமிழ் சமுகத்தின் உரிமைப் போராட்டத்தில் உணர்வோடு தம்மையும் அர்ப்பணிக்க ஆயத்தமாகிவிட்ட முஸ்லிம் சமுகத்தின் தற்போதைய தீர்மானம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். ஆண்டாண்டு காலமாக அடக்கியொடுக்கப்பட்ட இரு சமூகங்கள் தமக்கிடையேயான முரண்பாடுகளுக்கப்பால் இத்தருணம் இணைந்து இனவாதத்திற்கும் எதேச்சாதிகாரத்திற்கும் எதிராகக் குரல் கொடுப்பதற்குக் களமிறங்கியிருப்பது காலத்தின் மிக மிக இன்றியமையாத தேவையென்பதில் மாற்றுக் கருத்துகள் நம்மிடையே இருக்க முடியாது.