ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக கற்க அரசு அனுமதி

ஜேர்மன் நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் மாணவர்கள் பாடமாக கற்க அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் உலக்ப்போரில் ராணுவ வீரராக பங்கேற்று இரண்டாம் உலகப்போரில் உலகையே அதிர வைத்தார் ஜேர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர். உண்மையில், இரண்டாம் உலகப்போரின் தாக்குதலால் தான் ஜேர்மனி இரண்டாக உடைந்து கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியாக உருவெடுத்தது.

உலகம் முழுவதிலும் உள்ள யூதர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்த ஹிட்லர், தன்னுடைய பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் வகையில் ’மெய்ன் கெம்ப்’(Mein Kempf) என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதினார்.

ஆனால், பல்வேறு நாடுகளில் இந்த புத்தகத்தின் கருத்துக்களால் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து பல நாடுகள் இப்புத்தகத்திற்கு தடை விதித்தன.

இந்நிலையில், மெய்ன் கெம்ப் புத்தகத்தின் 70 ஆண்டுகால பதிப்புரிமை இம்மாதத்தில் காலாவதி ஆவதால், அதனை புதுப்பித்து மறுபதிப்பு வெளியிட ஜேர்மனியில் உள்ள Munich’s Institute for Contemporary History என்ற நிறுவனம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக, ஜேர்மனியின் ஆசிரியர்கள் நல சங்கத்தினர் அரசிற்கு ஒரு கோரிக்கையை அளித்துள்ளனர்.

அதில், ‘மாணவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை தயார் படுத்திக்கொள்ளவும், ஆரோக்கியமான அரசியலை புரிந்துக்கொள்ளவும் பள்ளிகளில் ஹிட்லரின் சுயசரிதையை பாடப்புத்தகமாக வைக்க வேண்டும்’ என கூறப்பட்டது.

ஆனால், இது பல்வேறு யூத அமைப்புகளிடயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. யூதர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் அப்புத்தகத்தை மாணவர்கள் படிக்க அனுமதித்தால், எதிர்காலத்தில் மாணவர்களும் இனப்பாகுபாடு பார்க்கும் அபாயம் ஏற்படும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இருதரப்பினரின் வாதத்தை கேட்ட ஜேர்மனியின் கல்வி அமைச்சகம் நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஹிட்லரின் ‘மெய்ன் கெம்ப்’ புத்தகத்தை பாடமாக கற்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிப்பதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.