01 ஜனவரி 2016 இல் வெளியான கண்ணோட்டம் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்)

கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றாமல், செயல் ஆற்றல் களில் நாட்டங்கள் கொள்வீர்.

2008 ஜனவரியில் நிகழ்ந்த மாற்றம் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் மீண்டும் வழமையான பாணியல் செல்வதற்கான நிலைமைகள் உள்நாட்டில் பல்லின, பல்மத சமூகங்களின் அபிலாசைக ளாலும் மற்றும் சர்வதேச நிலைமைகளாலும் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ மய சூழ்நிலையைத் தளர்த்துவது, அது எடுத்த காணிகளை மீளவும் மக்களிடம் கையளிப்பது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியற் கைதிகளை விடுதலை செய்வது, காணாமற் போனோர், படுகொலை செய்யப்பட்டோர்; தொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்டுவது அனைத்தும் அவசியம்.
இனப் பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கத்தக்க தீர்வுடன் கூடிய புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் முனைப்புடன் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.


இந்த நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தரப்புத் தலைமைகள் எவ்வாறு நடந்து கொள்வது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த முனைப்புடன் செயற்பட வேண் டாமா? காத்திரமான உறுதியான பங்களிப்பை வழங்க வேண்டாமா? மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத் தேர் தல்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முயல வேண்டாமா?
கோஷ்டி மனப்பான்மை இவர்களின் சமூகப் பொறுப்புப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது. அரசியற்தீர்வு காண்பதற் கான யோசனைகள் எதுவும் பொதுவெளியில் எப்போதுமே கலந்துரையாடப்படவில்லை.
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முறையாகச் செயற்பட வைப்பது பற்றியோ, கல்வி மற்றும் சுகாதார சேவை கள் தொடர்பான விடயங்களை விருத்தி செய்வது பற்றியோ, போக்குவரத்து மற்றும் உள்ளக வீதிகளை, பாதைகளை செப் பனிடுவது பற்றியோ, சூழல் பற்றி விசேடமாக தண்ணீர் மாசு படுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றியோ, தொழிற்துறை களை அதிகரித்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக் களை உருவாக்குவது பற்றியோ, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்பதற்கான ஏற்பாடுகள் பற்றியோ, சொந்த நிலமின்மை காரணமாக வீடற்று இருப்பவர்கள் பற்றியோ, இலங்கையின் சக சமூகங்களுடன் உறவுகளை விருத்தி செய்வது பற்றியோ இங்குள்ள தமிழ்த் தேசியவாத தலைவர்கள் மத்தியில் எதுவித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பேரழிவுகளைச் சந்தித்த ஒரு சமூகத்தின் தலைவர்கள் என ஆகியிருப்போரின் ஆளுமை, அனுபவம், முதிர்;ச்சி என்று பார்க்கும்போது இவர்களின் நடத் தைகள் அதிர்ச்சி அளிப்பவையாகவே அமைகின்றன.
மக்களின் பிரச்சினைகளுடன் தொடர்புபட்டதாக அல்லாமல் தங்களின் தனிப்பட்ட அரசியல் நலன் சார்ந்த பிரச்சினை களிலேயே இவர்கள் தமது முழுமையான அக்கறையையும் காட்டுகின்றனர்.
இதுவரை என்னென்ன காரியங்கள் மக்களின் நலன்கள் குறித்து ஆக்கப்பட்டிருக்கின்றன. இப்போது தமிழ் மக்கள் எவ்வாறான நிலைமைகளுக்குள் கொண்டு வந்து நிறுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பவை பட்;டியல் இடப்பட வேண்டும்.
தமிழ்ச் சமூகப் பிரமுகர்களும், புத்திஜீவிகளும், தமிழ் ஊடகவியலாளர்களும் சம்பந்தனா? சுமந்திரனா? விக்கினேஸ் வரனா? தமிழ் வீரர்கள் என்ற வெட்டி விவாதத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இவர்களுக்கு மக்களின் அடிப்படைப் பிரச் சினைகளிலான அக்கறை அர்த்தமற்றவையாக உள்ளது.
எனவே, இங்கு தீர்க்கதரிசனம் மிக்க தலைமைத்துவத்தின் தேவையொன்று உள்ளது. அதன் பணி இந்தச் சமூகம் உறு தியாக மீண்டெழவும், அகலக்கால் பதித்து கௌரவமாகவும், கண்ணியத்துடனும் இந்த மண்ணில் சக சமூகங்களுடன் சமதையாக வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதே வேளை, மக்களின் ஜீவாதார நலன்கள் தொடர்பான பிரச்சினை களை பகுத்தறிவுபூர்வமாக ஆராய்ந்து தீர்வுகள் காண்பதோடு அவற்றை நடைமுறையாக்குவதில் விரைந்து செயற்படவும் வேண்டும்
சமூகத்தின் கண்களைக் கெடுத்துவிட்டு அதனை சூரிய நமஸ்காரம் செய்ய வைக்கும் ஏமாற்றுத்தனத்தை இனியாவது தமிழ்த் தலைமைகள் நிறுத்த வேண்டும். அல்லது அவ்வாறான வர்களையே தலைவர்களாக ஆக்குகின்ற ஏமாளித்தனத்தை தமிழ் மக்கள் சமூகம் இனியாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.