1968 டிசம்பர் 25: தமிழக வரலாற்றில் கருப்பு நாள் !

20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது.

இதைச் செய்த கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது , சென்னை உயர்நீதிமன்றம். ‘காரோட்டுகின்ற கைகள் கொலைசெய்யாது; பணக்காரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்’ என வியாக்கியானம் சொன்னது, நீதிமன்றம்.

பொசுக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் செய்த ‘குற்றம்’ என்ன?

1.தலித்துகளாக் பிறந்தது முதல் குற்றம்.

2.கூலி உயர்வு கேட்டும், பண்ணைக் கொடுமைகளுக்கெதிராகவும் போராடத் துணிந்தது இரண்டாவது குற்றம்.

3.சாதி பேதங்களைக் கடந்து வர்க்கக் கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த செங்கொடி இயக்கத்தில் பிணைத்துக் கொண்டது எல்லாவற்றையும் விட பெருங்குற்றம். செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டதால் சுயமரியாதையும், உரிமை உணர்வும் பெற்றார்கள். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்தார்கள்.

வெண்மணியிலிருந்து இந்தப் படுகொலைகள் துவங்கவில்லை. வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு, நாய்க்கன் கொட்டாய், மேட்டுப்பாளையம் என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டு வருவதை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

ஜாதி மதங்களை கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்..! ஜாதி ஆதிக்க கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்..!