20ஆவது திருத்த சட்டமூலமும் சகோதர யுத்தமும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான அலையொன்று, ஆளுங்கட்சிக்குள் இருந்து, எழுந்து வரும் காட்சிகளைக் கடந்த சில வாரங்களாகக் காண முடிகின்றது. அதுபோல, அமரபுர, ராமன்யா பௌத்த பீடங்கள், கத்தோலிக்க பேராயர்கள் பேரவை ஆகியவைகூட, 20ஆவது திருத்தச் சட்டமூலம் கைவிடப்பட்டு, புதிய அரசமைப்பொன்றை நோக்கி, அரசாங்கம் நகர வேண்டும் என்று கோரியிருக்கின்றன.