2023 கைகொடுக்குமா?

(எம்.எஸ்.எம் ஐயூப்)

இலங்கை மக்கள் அரசியல், பொருளாளதார ரீதியில் மிகவும் கொந்தளிப்பான ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். பொருளாதார ரீதியில், இவ்வளவு கொந்தளிப்பான காலங்கள் இருந்துள்ளன. அதேபோல், அரசியல் ரீதியாக மிகவும் கொந்தளிப்பான வருடங்களும் இருந்துள்ளன. ஆனால், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்,  இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்த ஒரு வருடம் இருந்ததா என்பது சந்தேகமே! இருந்தால் அது, 1953ஆம் ஆண்டாகத் தான் இருக்க வேண்டும்.