27 வது தியாகிகள் தினத்தில் அனைவரும் இணைந்து கொள்வோம்

உலகெங்கும் நடைபெறும் இந்நிகழ்வுகளில் அந்தந்த நாட்டில்வாழும் எமது உறவுகள் போராட்டதிற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொது மக்களை நினைவு கூர அணிதிரளுவோம்.
தோழர் தங்க மகேந்திரன் என்ற ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளுடன் எமது அரசியல் வேலைகள் ஆரம்பமானது. ஈழமாணவர் பொது மன்றத்தினூடாக எமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்த காலங்களில் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற வகையில் உயர்தர மாணவர்களுக்கான இலவச கல்வியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக திருகோணமலையில் நாம் ஆரம்பித்திருந்தோம். கிழக்கில் 1978 ஏற்பட்ட சூறாவளி அனர்த்தங்களைத் தொடரந்து இந்த இலவச வகுப்புக்கள் ஆரம்பமானது தம்பலகாமம் கிளிவெட்டி 1ம் நம்பர் என்று பல இடங்களிலும் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. தோழர் சின்னவன் அன்பு முகுந்தன் கைலன் என பன்முகத்தன்மையுடைய தோழர்கள் தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்தனர். தோழர் பீற்ரின் பங்களிப்பை சகல தோழரகளும் அறிவர். தோழர் லிங்கன் போன்ற இளம் தலைமுறையினரும் மகாண சபை காலத்தில் தமது உயிரையும் அர்பணிக்கும் அளவிற்கு செயற்பட்டனர். தோழர் ஜோர்ஜ் சர்வதேச சோசலிச நாடுகளுடனான தனது உறவு மூலம் ஈழவிடுதலைக்கு பலம் சேர்த்தார். வடக்கையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பாரிய தொர்பாடல்களை மட்டக்களப்பு சிறையுடைப்பு காலங்களிலும் போராட்டத்திற்கான வளங்களை இடம்மாற்றம் செய்வதிலும் திருகோணமலை மாவட்டத்தின் பங்கு அளப்பரியது