46 ஆண்டுகளுக்கு முன் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த 12 அம்சத் திட்டம்

(Maniam Shanmugam)

ஈழத்து சமுதாய வளர்ச்சியின் இன்றைய கட்டத்தில் மீறமுடியாத முன் தேவையான தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டி எழுப்புவதில் இலக்கியப் படைப்பாளிகள் பங்களிப்பைச் செலுத்துவது அவசியமாகும்.
உருக்கமான வேண்டுகோள்களாலும் உள்ளத்தைத் தொடும் அறைகூவல்களாலும் மட்டும் ஒரு இலட்சியம், ஒரு கருத்துருவம், இவை எவ்வளவுதான் மகோன்னதமானவையாக இருந்தாலும் பயனுள்ளவையாகிவிட முடியாது. இந்த உன்னத இலட்சியமும் நல்ல கருத்தும் சாதனைப்படுத்தப்படுவதும், வாழ்க்கை எதார்த்தமாக்கப்படுவதும், இவை அர்த்தமுள்ளவையாக பயன்பாடுள்ளவையாக இருக்க வேண்டுமானால் அவசியமாகும்.