50 ஆண்டுகளுக்குப் பின் பழைய இடத்துக்கு வந்துசேரப் போகின்ற தமிழ் தலைமை!

(Maniam Shanmugam)
எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத் தேர்தல் 1970இல் தமிழரசு – தமிழ காங்கிரஸ் கட்சிகள் மண் கவ்வியது போன்ற ஒரு நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றது. ஏனெனில் அன்றைய சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் இடையில் 50 வருடங்கள் கழிந்துவிட்டாலும் அச்சொட்டாக ஒரு ஒற்றுமை இருக்கின்றது.